Advertisement
பெங்களூரு கோர்ட்டில் சசிகலா ஆஜராகி 110 கேள்விகளுக்கு பதில்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2012,00:44 IST

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 110
கேள்விகளுக்கு பதிலளித்தார்; இன்றும் விசாரணை தொடருகிறது."தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், டிச., 19ம் தேதி முதல், சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கும்' என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.இதுவரை, சசிகலாவிடம், 632 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 633 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நீதிபதி உத்தரவுபடி, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏழு மாதங்களுக்கு பின், நீதிபதியின் கேள்விகளுக்கு, சசிகலா பதிலளித்தார்.நேற்றைய விசாரணையில், அரசு தரப்பில் சந்தேஷ் சவுட்டா, முதல்வர் ஜெயலலிதா வக்கீல் கந்தசாமி, சசிகலா வக்கீல் மணிசங்கர், சுதாகரன் வக்கீல் மூர்த்தி, இளவரசி வக்கீல் அசோகன் மற்றும் வக்கீல் பரணி குமார் உட்பட, பலர் ஆஜராகினர்.

முற்பகல், 11:20 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக, தன் முன், நாற்காலியில் அமரும்படி சசிகலாவிடம் கூறினார்.நீதிபதி கேட்ட கேள்வியும், அதற்கு சசிகலா அளித்த பதிலும் வருமாறு:நீதிபதி: கல்வி தகுதி என்ன?சசிகலா: பத்தாம் வகுப்பு.நீதிபதி: ஆங்கிலம் தெரியுமா?சசிகலா: சரியாக தெரியாது.இதேபோன்று பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.சுதாகரனின் வங்கி பரிமாற்றம் பற்றிய கேள்விகளுக்கு, "தெரியாது' என்றே பதிலளித்தார். இது போன்று, இளவரசி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கும், "தெரியாது' என்று பதிலளித்தார்.மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "ஆமாம், தெரியாது' என்று பதிலளித்தார்.கேள்வி கேட்பது முடிவடையாததால், "வழக்கு விசாரணை இன்று காலை, 11:00 மணிக்கு துவங்கும்' என்று, நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.முதன் முறையாக கேள்வி கேட்கும் பணிசிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பேற்ற பின், சொத்து குவிப்பு வழக்கில், முதன் முறையாக கேள்விகள் கேட்கும் பணியை துவக்கியுள்ளார்.
சசிகலா, நேற்று காலை, 11:20 மணியிலிருந்து மதியம், 1:45 மணி வரை, 82 கேள்விகளுக்கும், மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, 28 கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அவர் பதிலளிக்க வேண்டிய, 633 கேள்விகளில் நேற்று, 110 கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும், 523 கேள்விகள் மீதமுள்ளன.நேற்றைய விசாரணை முடிந்ததும், சசிகலா பெங்களூரிலேயே தங்கினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Pugal - Kovai ,இந்தியா
20-டிச-201213:53:46 IST Report Abuse
Pugal ஏன் யாருமே , திஹாரில் போடுங்கள் என்று சொல்லவில்லை? விஜயகாந்தின் நிலை வந்து விடுமோ என்று பயமா? அதுவும் சரி தான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
20-டிச-201207:08:26 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இல்லை தெரியாது என்ற இரண்டே வகை பதில்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு இதற்கு பதிலாக பதில்களை எழுத்துப் பூர்வமாக வாங்கி கோர்ட் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.நடந்த நல்லது கெட்டது போனது வந்தது எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு ஜெயாவுக்கு கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லைன்னு வாக்குமூலம் கொடுத்தபின் விசாரணை கண்துடைப்போ? வெறும் விளம்பரத்திற்க்காக நடத்தப்படும் வழக்காகத்தான் மக்கள் பார்க்கினனர். இந்த வழக்கு போடப்பட்டபின் ஜெயலலிதா இரண்டு முறை தேர்தலில் கூட வென்றுவிட்டார்.வேறு வேலையைப் பாருங்க சார்
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
Mohi - Chennai,இந்தியா
20-டிச-201205:23:53 IST Report Abuse
Mohi கட்சியிலிருந்து (வீட்டிலிருது) சசிகலா நீக்கப்பட்டார். விரைவில் எதிர்பார்ப்போம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-டிச-201202:55:14 IST Report Abuse
தமிழவேல் // 633 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது..... 110......கேள்விகளுக்கு பதிலளித்தார் // இப்போ மார்கழி மாசமாச்சே ? இந்த வேகத்திலேயே கேள்விகேட்டா..... மார்கழி மாச திருவாதிரைக்கு உள்ளே களி சாப்பிடலாம்...
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
20-டிச-201201:35:15 IST Report Abuse
சாமி என்னபதில் அளித்தார் தெரியாது தெரியாது
Rate this:
1 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.