chicken wastes dropped in TN border from kerala | கேரள கோழிக்கழிவுகள் தமிழக எல்லையில் வீச்சு... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (8)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஆனைமலை: கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள், தமிழக எல்லையிலுள்ள விவசாயப் பகுதிகள், ரோட்டோரங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிச்செல்வது தொடர்
கதையாகி வருகிறது.கேரளாவில் இறைச்சிக்கழிவு, மருத்துவக்கழிவுகள், ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதால் அவற்றை கேரளாவினுள் அழிக்க அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் தமிழகத்திற்குள் கொண்டு வந்து கொட்டி சுற்றுச்சூழலை சிலர் மாசுபடுத்தி வருகின்றனர்.தமிழக-கேரள எல்லைகளான வாளையார், வேலந்தாவளம், குப்பாண்டகவுண்டனூர், நடுப்புணி, கோபாலபுரம், வளந்தாயமரம், செமணாம்பதி போன்ற முக்கிய வழித்தடங்கள் இரண்டு மாநில எல்லைகளை இணைக்கின்றன. இது தவிர அதிக அளவிலான சிறிய வழித்தடங்களும் உள்ளன. இந்த வழித்தடங்களில், இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து வாகனங்கள் மூலம் கழிவுகளை

சாக்கு பைகளில் கட்டி ரோட்டோரத்தில் வீசிவிடுகின்றனர்.
கண்துடைப்பு
தமிழக-கேரள எல்லையில்தமிழக வணிக வரி சோதனை சாவடிகளும், போலீஸ் செக்போஸ்ட்டுகளும், இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ளன. இருந்தும் கழிவுகள் கொண்டு வரப்படுவது தடுக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த செக்போஸ்ட்டுகளில் வாகன சோதனை என்ற பெயரில் வெறும் கண் துடைப்பு பணி மட்டுமேநடக்கிறது.
கேரள கழிவுகள்
கோழிக்கழிவுகளை வீச, வாகனத்தின் பின்புறத்தில் இருவர் அமர்ந்துகொள்வர். டிரைவர் வாகனத்தின் வேகத்தை குறைக்கும் போது ரோட்டின் இருபுறங்களிலும் இவை வீசப்படுகின்றன. வாளையார் முதல் செமணாம்பதி வரை உள்ள அனைத்து இடங்களிலும் இது தொடர்கிறது.

Advertisement

தமிழக பகுதிகளில் கோழிக்கடை நடத்தும், ஒரு சிலரும் கேரள கழிவுகள் கொட்டுவதை காரணம் காட்டி ரோட்டோரங்களில் வீசுகின்றனர்.

சுகாதாரம் பாதிப்பு
கழிவுகள் போடப்பட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை சாப்பிட கூட்டம் கூட்டமாக வரும் தெருநாய்கள் அந்த பகுதியில் செல்லும் மனிதர்களை யும் பதம் பார்த்து விடுகிறது.
போராட்டம்
ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர்ஈஸ்வரன் கூறும்போது, ""கோழிக்கழிவுகள் கொட்டப்படுவது பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்படும். கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்தால் ம.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

பொதுமக்கள் கூறும்போது, "இரவு நேரங்களில் கழிவுகள் போடப்படுவது தொடர்கிறது. இது தொடர்ந்தால் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manickam kannan - coimbatore,இந்தியா
26-டிச-201208:59:55 IST Report Abuse
manickam kannan எங்கள் பொள்ளாச்சியில் இரவு நேரங்களில் கேரளா கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் நம் மக்கள் கோழி கழிவுகளை கொட்டுகிறார்கள். நம்மால் அவர்கள் வரும் நேரம் கணிக்க முடியவில்லை. யாரும் இல்லாத நேரம் கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள். நம் மக்களை நாமும் கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை செக் போஸ்டும் கவனிக்கவேண்டும். இதுதான் வழி.
Rate this:
Share this comment
Cancel
vijay kumar - salem,இந்தியா
23-டிச-201214:58:19 IST Report Abuse
vijay kumar கோவையில் உள்ள மதுக்கரை,குனியமுத்தூர் பகுதிகளுக்கு நீண்ட நாட்களாகவே இரவு நேர பஸ் சர்வீஸ் கிடையாது.இதே போல தமிழக கேரளா இடையே இரவு நேரத்தில் எந்த விதமான போக்குவரத்தும் செய்ய தடை விதித்தால் பல முறை கேடுகளை தவிர்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Yesu Raj - cbe,இந்தியா
20-டிச-201212:42:19 IST Report Abuse
Yesu Raj அங்கு இருக்கும் மக்கள் வண்டிக்காரனை பிடித்து நாலு அப்பு அப்பினால் இது சரி ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
20-டிச-201212:34:38 IST Report Abuse
LAX தண்ணீர் தரமுடியாது என்று நீட்டி முழக்கும் இந்த தமிழ் விரோதிகள், கழிவுகள் கொட்ட மட்டும் தமிழ்நாட்டை நாடுவது ஏன்? தைரியம் இருந்தால் வேறு எங்காவது கொண்டுபோய் கொட்ட வேண்டியதுதானே? முதலில் அவர்கள்மீது பாயட்டும் குண்டர் சட்டம். அதற்கு துணைபோகும் செக் போஸ்ட் காவலர்கள் மீதும் நடவடிக்கை தேவை. அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், போராட்டம் நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டு, அவர்களனைவரும் ஒன்று சேர்ந்து கழிவுகளைக்கொட்டுவோரையும், அதற்கு விலைபோகும் தமிழர்கள்/காவல் துறையினர் மீதும் தாங்களே தாக்குதல் நடத்தி அவர்களைப் பிடித்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
20-டிச-201209:47:35 IST Report Abuse
R.BALAMURUGESAN ...அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ... மக்கள் இதை தடுக்க முறையாக முயற்சி செய்ய வேண்டும்... செக்போஸ்டுகளில் எல்லாம் மாமூல் வேட்டைதான் நடைபெறுகிறது... அவர்கள் ஒழுங்காக இருந்தால், தங்களின் பணியை ஒழுங்காக செய்தால் போதும் எல்லாம் நல்ல படியாக நடக்கும்... அப்படியில்லாத போது, மக்கள்தான் போராட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
20-டிச-201209:41:41 IST Report Abuse
Karthi முட்டை, கோழி, etc இதல்லாம் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகிறது, அவர்களுக்கு தேவையானதை எடுத்தது போக மீதியை (மீதி கழிவுகளை) தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர்களிடம் ஒட்ற்றுமை என்பது துளியும் கிடையாது. கேரளாவிலோ கேட்கவே வேண்டாம். கேரளாவில் வாழும் தமிழர்கள், தாங்கள் தமிழர்கள் என்று கூரிகொள்வதேயே அவமானமாக நினைகிறார்கள். அவர்களுக்குள்ளேயே மலையாளத்தில்தான் பேசிகொள்கிரார்கள் (ஒரு சிலரைத்தவிர),
Rate this:
Share this comment
Cancel
Murthy - vellore,இந்தியா
20-டிச-201207:05:31 IST Report Abuse
Murthy குண்டு வைத்து கொல்வது மட்டும் தீவிரவாதம் அல்ல. இப்படி கழிவுகளை கொட்டி வியாதியை பரப்புவதும் ஒரு வகையான தீவிரவாதமே. நமது தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.
Rate this:
Share this comment
Cancel
soundararajan - Udumalaipettai,இந்தியா
20-டிச-201201:51:48 IST Report Abuse
soundararajan இதற்கு காரணம், தன்னுடைய பாக்கெட் நிரம்பினால் போதும், நாடு எக்கேடோ கேட்டு போகட்டும் என்கிற செக் போஸ்ட் காவலர்களது மனநிலைதான். இவர்கள் அனுமதிக்காமல் எப்படி கழிவுகள் இங்கே வரும் ? நமது ஏமாளிதனமும் ஒரு காரணம். நாம் கூப்பாடு போடுவது மட்டுமே செய்யமுடியும். காரியம் எதுவும் செய்யமுடியாது என்பது மலையாளிகளுக்கு நன்றாக தெரியும். எனவே இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.