Advertisement
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2012,08:10 IST
கருத்துகள் (275)
ஆமதாபாத் : குஜராத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் பா.ஜ., 121 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 182 இடங்களில், பா.ஜ.,வுக்கு 121 இடங்களும், காங்கிரசுக்கு 57 இடங்களும், மற்ற கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பா.ஜ.,வில் இருந்து பிரிந்த கேசுபால் பட்டேலை மோடி இன்று சந்தித்து பேசினார். இமாசல பிரதேசத்தி்ல் மொத்தம் 68 தொகுதிகளில் காங்கிரஸ் 36 இடங்களை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ., 25 இடங்களை பிடித்துள்ளது.
குஜராத்தில் மீண்டும் பா.ஜ., வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சியை பிடிக்கிறார். மோடி போட்டியிட்ட மணிநகர் ‌தொகுதியில் அவர் எதிர்த்து போட்டியிட்டவரை 70 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னேறி செல்லும் காலம் இது, பின்னோக்கி பார்க்க வேண்டிய அவசியமில்லை, மக்கள் சேவை தொடர்கிறது என மோடி தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இமாச்சால் பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., தனது ஆட்சியை இழக்கிறது. இங்குள்ள முதல்வர் பதவியை இழக்கும் பிரேம்குமார் துமால் கூறுகையில் மக்கள் முடிவை நான் ஏற்கிறேன் என்றார்.

குஜராத் தேர்தல் :

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 71.32 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தேர்தல் தேதி அக்டோபர் 4ம் தேதி தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறும் ஓட்டு எண்ணிக்கை 33 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்களுக்கு இடையே நடைபெறும் இந்த
ஓட்டு எண்ணிக்கையில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தம் 44,579 மின்னறு வாக்கு எந்திரங்களில் பதிவாகி உள்ள ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.காலை 11 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு குஜராத்தின் அடுத்த முதல்வர் யார் என தெரிய வரும். தேர்தல் சர்வே : குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து இதுவரை நடத்தப்பட்ட அனைத்து கருத்து கணிப்புக்களும் மோடியின் வெற்றியை உறுதி செய்துள்ளன. பா.ஜ., 2014ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கும் என்ற நம்பிக்கை அனைவர் மனதில் இருப்பதால் இந்த வெற்றி அவரின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் குஜராத்தில் தொடர்ந்து 5வது முறையாக ஆட்சி அமைத்து பா.ஜ., புதிய சாதனைபடைக்கும்.

மோடியின் வெற்றி வாய்ப்பு:

இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்து கணிப்பு தேர்தலுக்கு முன் 60 தொகுதிகளில், 239 இடங்களில் நடைபெற்றது. இதில் 3755 பேர் பங்கேற்றனர். கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் 2002 மற்றும் 2007ம் ஆண்டு தேர்தல்களை விட இம்முறை அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில் மோடி வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர். பா.ஜ., விற்கு ஆதரவாக 48 சதவீதம் பேர் இந்த கருத்து கணிப்பில் வாக்களித்துள்ளனர். மேலும் பா.ஜ., 129 முதல் 141 ‌இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரசிற்கு ஆதரவாக 36 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் 37 முதல் 45 இடங்களில் வெற்றி பெறம் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
Advertisement
இமாசல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது வருகிறது. இங்கு பா.ஜ., 25 தொகுதிகளை பிடித்துள்ளது. காங்கிரஸ் 36 தொகுதிகளை பிடித்து இங்கு ஆட்சியில் அமர்கிறது. பா.ஜ, ஆளும் தகுதியை இழக்கிறது.

மக்களின் முடிவுக்கு துமால் ஓகே .,

இமாச்சல பிரதேச மக்களின் முடிவை வரவேற்பதாக அம்மாநில முதல்வர் பிரேம் குமார் தூமல் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ளன. இதில் ஆளும் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பிரேம் குமார் தூமல், "மக்களின் முடிவுகள் எப்போதுமே சிறந்ததாகத் தான் இருக்கும். அவர்கள் எங்களை ஆதரித்தால் அது நல்லது. அவ்வாறு இல்லாவிட்டாலும் நல்லதே. பொதுமக்களின் முடிவை நான் வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (275)
kpmuniyasamy - Tuticorin,இந்தியா
22-டிச-201207:02:47 IST Report Abuse
kpmuniyasamy பாராளுமன்ற தேர்தலை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர நரேந்திரமோடி தலைமையில் சந்தித்தால் பாரதீய ஜனதா வெற்றி.பிரதமர் பதவிக்கு தகுதி படைத்தவர் நரேந்திரமோடி.மக்கள் சேவை செய்ய அன்பு வாழ்த்துக்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajagopalan S - New York,யூ.எஸ்.ஏ
21-டிச-201200:21:58 IST Report Abuse
Rajagopalan S காங்கிரஸ், திமுக அடிவருடிகளுக்கு திரு மோடி அவர்கள் ஆயிரம் இஸ்லாமியர்களின் உயிரை எடுத்தார் என்று வாதத்துக்கு எடுத்து கொண்டாலும், ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை கொன்று குவித்த காங்கிரஸ் விட, லட்சக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்த அவுரங்கசீப் விட எவ்வளவோ மேல்
Rate this:
3 members
0 members
17 members
Share this comment
siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-டிச-201218:16:20 IST Report Abuse
siva திரு மோடியின் 3வது தொடர் வெற்றியின் மூலம், பிஜேபியின் மூத்த தலைவர்கள் கலந்தாலோசித்து, வரும் 2014 தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அருணாச்சலில் சீனாவின் தலையீடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வளர்ந்து வரும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர் கொள்ள திரு. மோடி போன்ற, திடமான கொள்கை, வளர்ச்சி பணிகளை திட்டமிடல், தொலைநோக்கு பார்வை உள்ளவர்கள்தான் வேண்டும் எதிர்கால இந்தியாவிற்கு.
Rate this:
2 members
0 members
21 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-டிச-201218:12:56 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரசை பெரும்பான்மை குஜராத் மக்கள் ஒதுக்கி விட்டதாகவே கருதலாம் இனப்படுகொலை செய்த சிங்கள அரசுக்குத் துணைபோன காங்கிரசை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும். ஆனால் துரோகிகளைத் தமிழகத்தில் ஒரு மூத்த கட்சி தாங்கிப் பிடிக்கிறதே,,,, என்ன செய்ய????
Rate this:
2 members
1 members
19 members
Share this comment
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
20-டிச-201218:10:36 IST Report Abuse
Silambarasan குஜராத்தில் மோடி செயல்படுத்தும் திட்டங்கள் , தமிழகத்தில் இல்லை (மதுவுக்கு தடை, 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்.) தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர போராடும் கட்சி பா.ம.க, மேலும் இலவசம் கல்வி,மருத்துவம், விவசாயம் இடுபொருட்கள் தவிர வேறு எதுவும் இலவசமாக தரக்கூடாது என்று போராடும் ஒரே கட்சி பா.ம.க
Rate this:
9 members
0 members
10 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-டிச-201218:03:04 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ 2014 ல் ஆளும் கட்சியாக சந்திப்போம்.......//// என்ன பொருள்? அந்த ஆண்டு நடக்கப் போகும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆ ஆ ஆட்சி அமைக்கப் போகிறதா?
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-டிச-201217:57:54 IST Report Abuse
Nallavan Nallavan கேசுபாய் பட்டேலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் மோதி. அந்த அரசியல் முதிர்ச்சி, பக்குவம் நம்மிடையே உண்டா? கலைஞர் வென்றால் ஜே தொலைபேசியில் வாழ்த்துச் சொல்லுவாரா? ஜே வென்றால் கலைஞர் அவ்வாறு செய்வாரா?
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
20-டிச-201217:32:39 IST Report Abuse
KaNaGaRaJ. S... கலிஞர் டிவி யில் லஞ்சமாக வாங்கிய தொகை என்பதும் அது சி பி ஐ யின் கையால் குட்டு பட்டு பிறகு திருப்பி கொடுக்கும் நாடகம் அரங்கேறியது. ஆ ராசா கனிமொழி சரத் ஆகியோர் சிறையில் காலம் தள்ளியது எதற்காக ? 2014 இல் ஆளுங்கட்சியாக போகிறீர்களா? சரி கலைஞர் ஸ்டாலின் ஆகியோரை சந்தோஷ படுத்தவா இந்த பேச்சு எல்லாம் தெரிந்த நீங்கள் இப்படி பேசுவது நகைப்பாக இல்லையா ? வடிவேலு ஒரு படத்தில் அவன் எவ்ளோ தூரம் ஓடுறானு பாப்போம் இல்ல நம்மை விரட்டுரானாணு பாப்போம். அவன் ஓடினான்னா அவன் நமக்கு அடிமை, திருப்பி நம்ம அடிக்க ஓடி வந்தா அவனுக்கு நாம அடிமை என்று சொல்வது போல் உள்ளது உங்கள் காமெடி
Rate this:
6 members
2 members
36 members
Share this comment
vayalum vazhvum-saravanakumar - doha,கத்தார்
20-டிச-201217:21:06 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar 2014ஆம் ஆண்டின் பாரத பிரதமர் அவர்களே உங்களை வரவேற்கிறோம். இன்றைய குஜராத்தின் வெற்றி நாளைய இந்திய வெற்றியாக மாறவேண்டும். ஊழல் நிறைந்த இந்த சமூகத்தை மாற்றி நல் வழியில் இந்தியா முன்னேற தங்களின் வெற்றி அச்சாரமாக அமைய வேண்டும். ஆட்சியை வேறு ஒரு நல்லவரிடம் ஒப்படைத்து நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். நாட்டை அந்நிய சக்திகளிடம் இருந்தும், மதவாதம் விரைவாதம் என்று பேசி மக்களை பிரிக்கும் சோனியா கும்பலிடம் இருந்து காப்பாற்ற விரைந்து வர வேண்டும்
Rate this:
15 members
0 members
118 members
Share this comment
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
20-டிச-201217:01:04 IST Report Abuse
Ayathuray Rajasingam பா.ஜ.க.யின் வெற்றி பாதை ஆரம்பித்து விட்டது. மோடிக்கு வாழ்த்துக்கள். குஜராத் மக்களை காங்கிரஸ் ஏமாற்றுவது நினைத்தும் பார்க்க முடியாது.
Rate this:
17 members
2 members
81 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.