Mayan calender at salem merchant | நவரத்தின கல் வியாபாரியிடம் மாயன் காலண்டர் : சேலத்தில் ஆர்வமுடன் பார்த்த மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவரத்தின கல் வியாபாரியிடம் மாயன் காலண்டர் : சேலத்தில் ஆர்வமுடன் பார்த்த மக்கள்

Updated : டிச 21, 2012 | Added : டிச 20, 2012 | கருத்துகள் (10)
Advertisement
நவரத்தின கல் வியாபாரியிடம் மாயன் காலண்டர் : சேலத்தில் ஆர்வமுடன் பார்த்த மக்கள்

சேலம்: இன்று உலகம் அழியும் என்ற விஞ்ஞான வதந்தி, அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மாயன் காலண்டரில், இது தொடர்பான விபரம் இருப்பதாக கூறப்பட்டுள்ள தகவல் வெளிவரும் நிலையில், அந்த மாயன் காலண்டரை, பத்திரப்படுத்தி வருகிறார், சேலத்தைச் சேசர்ந்த நவரத்தின கல் வியாபாரி நாகலிங்கம்.

சேலம், செவ்வாய்பேட்டையில் வசித்து வரும் அவர், பல்வேறு வகையான நவரத்தின கற்களை வாங்கி வந்து, அவற்றை மோதிரமாக செசய்து விற்று வருகிறார். மேலும், பழங்கால நாணயங்கள், அதிசயமான பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கமும் உண்டு. இந்நிலையில், தஞ்சாவூர் பகுதியில், மூன்று ஆண்டுக்கு முன், 5,000 ரூபாய் விலை கொடுத்து, ஒரு காயின் ஒன்றை வாங்கி பாதுகாத்தார். மம்மி வடிவம் கொண்ட சிலைகள், அந்த காயினில் இடம் பெற்றிருந்தது.
டிசசம்பர், 21ம் தேதி உலகம் அழியும் என்ற வதந்தி, <உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் நலம் விசாரித்துக் கொண்டு, உலகம் அழிந்து விடுவது பற்றியே வேதனையுடனும், வேடிக்கையாகவும் பேசி வருகின்றனர். இன்று, 24 மணி நேரமும், உலகம் எப்போது அழியும் என்ற பேச்சு தான், அனைத்து மக்களிடமும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகம் இப்போது அழிவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை என, விஞ்ஞானிகள் அறிவித்தபோதும், உயிர்பயம் மனிதர்களை வாட்டியெடுக்கிறது.
நவரத்தின கல் வியாபாரி நாகலிங்கம், மாயன் காலண்டருடன், சேலம் நாட்டாண்மை கட்டிடத்துக்கு வந்தார். உலகம் அழியும் பீதிக்கு காரணமான மாயன் காலண்டரை பார்க்க, அங்கிருந்த மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இணையதளத்தில் மாயன் காலண்டர் வடிவமைப்பை பார்த்தபோது, வியாபாரி நாகலிங்கம் கொண்டு வந்ததும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதும், ஒரே மாதிரியான வடிவில் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து நாகலிங்கம் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன், 5,000 ரூபாய்க்கு இந்த காயினை வாங்கினேன். அப்போது, இதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாளை (இன்று) உலகம் அழிவதாகவும், மாயன் காலண்டரில் இது பற்றி கூறப்பட்டுள்ளதாகவும் வந்ததையடுத்து, அந்த காயினை தெரிந்த நபர்களிடம் சென்று காண்பித்தேன். அப்போது, இணையதளத்தில் மாயன் காலண்டர் பற்றி பார்த்தோம். அதில் இடம் பெற்றிருந்த படங்கள், நான் வைத்திருந்த காயின்போன்றே இருந்தது. மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, இங்கு கொண்டு வந்தேன். உலகம் நிச்சயமாக அழியப்போவதில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நான் இல்லை - Tirunelveli,இந்தியா
21-டிச-201216:46:23 IST Report Abuse
நான் இல்லை எபோ டா உலகம் அழியும் நு சும்மா சுத்திட்டு இருகிரவன்களுக்கு ஒரு உண்மையை சொல்ல போறேன் நாளைக்கு சொல்லுறேன்
Rate this:
Share this comment
Cancel
kdadhi - Bangkok,தாய்லாந்து
21-டிச-201212:56:10 IST Report Abuse
kdadhi பயப்பட வேண்டாம் நீங்கள் இருக்கும்வர உலகம் அழியாது .
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
21-டிச-201212:56:04 IST Report Abuse
GURU.INDIAN இனி இந்த காலண்டருக்கு மவுசு இல்லை எல்லாம் பொய்யாகி விட்டது .. கண்டவன் வந்தவன் போனவன் எல்லாம் காலத்தை நிர்ணயித்தால் அந்த சர்வ வல்லமை படைத்த கடவுள் எதற்கு இருக்கிறான் ? அந்த மாயாண்டி குடும்பத்தார் . தான் .எப்போ அழிவோம் என்று கணிக்க முடியாதவர்கள் காலத்தை கணித்தார்கலாம் என்ன அது ? வெங்காயம் . காலான்டரே இல்லாத காலத்தில் எந்த காலான்டரில் எந்த பேப்பரில் எழுதினார்கள் ? பேப்பரை கண்டுபிடித்தவர்களே சீனர்கள் .அந்த காலத்தில் கல்வெட்டை பயன்படுத்தினார்கள் . அதுவும் அவர்கள் ஒருமாதம் தான் ஒருநாள் என்று கணக்கிட்டார்கலாம் . போங்க தம்பி கலங்காமே இருக்கும் காலத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
prasath - coimbatore,இந்தியா
21-டிச-201212:45:01 IST Report Abuse
prasath உலகம் அழியும் என்பது உண்மை , பல குறிப்புகள் எதை உன்னர்த்தினல்லும் எல்லை என்றாலும் உன்ன்மைஇல் கசனில்லை மற்றம் , மக்கள் வாழ்கை மாற்றம் இவ்வை அனைத்தும் நிகழ்வது உண்மை , மா எ ன் கணக்கு மற்றும் சித்தர் குறிப்பு , வேத நூல் வாக்குகள் மற்றும் அறிவியல் நிகல்வ்கழ்ல் , புவியல் மாற்றம் அனைத்தும் அழிவை நமக்கு நியாபக படுத்துவது நம்மை பயமுறுத்த அல்ல நம்மை தயார் செய்வதற்காக , எனவே குறிப்பிட்ட தேதியில் உள்ளகம் அழியும் என்பது பொய்யாகும் , இது அழிவின் அர்ரம்பமாக இரருக்கலாம் எனவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது இப்படிக்கு பிரசாத் ,Phd (கோவை ,
Rate this:
Share this comment
Cancel
haja - ramnad,இந்தியா
21-டிச-201211:07:08 IST Report Abuse
haja நல்ல செய்தி்
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan - Udumalpet,இந்தியா
21-டிச-201209:53:49 IST Report Abuse
Balakrishnan உலகம் அழியாது. உலகம் அழியும் என்று சொல்லும் மக்கள்தான் அழிவர்.
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
21-டிச-201209:34:16 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM நாணயத்தை கொண்டு வந்து ....நல்ல வார்த்தை ...சொன்ன உங்கள் ...உங்கள் நாணயம் வாழ்க ...
Rate this:
Share this comment
Cancel
B.J.P. Madhavan - chennai ,இந்தியா
21-டிச-201202:45:32 IST Report Abuse
B.J.P. Madhavan உலகம் அழிவது உண்மையே. எப்படி என்றால்: இயற்கை படைத்த உயிர்களல்ல. மனிதன் படைத்த அறியாமையும், அகங்காரமும் தான். அவனால் உருவாக்கப்பட்ட பணத்தின் ஆசையும், பதவி மோகமும் தான் அழியும். உண்மையும், உழைப்பும் அழியாது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
21-டிச-201202:38:58 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே DAM 999 மாதிரியான திரிபு கூறல்கள் இவையும்.
Rate this:
Share this comment
Cancel
s.arun - madurai  ( Posted via: Dinamalar Android App )
21-டிச-201201:15:17 IST Report Abuse
s.arun நல்ல செய்தி்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை