பெங்களூரு: ""எனக்கு சொந்தமான, "வினோத் வீடியோ விஷன்' மூலம், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளின் மூலம், பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது,'' என்று சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிடம், கடந்த, 19ம் தேதியிலிருந்து கேள்வி கேட்கும் பணி துவங்கியது. நேற்று முன்தினம், 110 கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:00 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தவுடன் கேள்விகள் கேட்க துவங்கினார்.நீதிபதி கேட்ட கேள்வியும், சசிகலா அளித்த பதிலும்:நீதிபதி: பேக்ஸ் யூனிவர்சலுக்கு, லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதே.சசிகலா: என் சார்பு நிறுவனம். வியாபார நிமித்தமாக செய்யப்பட்டுள்ளது.நீதிபதி: வங்கியில் கணக்கு தொடர, 36, போயஸ் கார்டன், சென்னை முகவரியை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அதில் வசிக்கிறீர்களா?சசிகலா: வங்கியில் கணக்கு துவங்கும் போது, அந்த முகவரியில் இருந்தேன்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து, பல லட்சம் ரூபாய் ஜெயலலிதா, சுதாகரன் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதே.சசிகலா: சசி எண்டர்பிரைசஸில், அவர்கள் இருவரும் பங்குதாரர்கள்.நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர்., நிறுவனங்களிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. உங்களுக்கும், அந்த நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு.சசிகலா: நிறுவனங்களில் பங்குதாரர்.நீதிபதி: உங்களது வங்கி கணக்கிற்கு, ராம் விஜயன் என்பவர், பல லட்சம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளாரே.சசிகலா: கடந்த, 1996ல் வினோத் வீடியோ விஷனை, நான் துவக்கினேன். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது உட்பட பல தனியார் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை, நிறுவன பொறுப்பாளரான ராம் விஜயன், என் வங்கி கணக்கில் செலுத்துவார். இது மட்டுமின்றி, எனக்கு சொந்தமான, இரும்பு மாடி படிகள், கேட் கிரில்கள், இரும்பு சேர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமும் உள்ளது. இதில் கிடைக்கும் பணத்தையும் செலுத்துவார்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ், ஜெயா எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யூனிவர்சல் ஆகிய நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதில், யார், யார் பங்குதாரர்கள்?சசிகலா: இவைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்பு நிறுவனங்கள். ஜெயலலிதா, நான் (சசிகலா), சுதாகரன், இளவரசி, திவாகர், தினகரன் ஆகியோர் பங்குதாரர்கள்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸிலிருந்து, சுதாகரன், இளவரசி, ஜெயலலிதா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு, பல லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.சசிகலா: அனைவரும் நிறுவன பங்குதாரர்கள்.பல கேள்விகளுக்கு, "இருக்கலாம்' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, "ஞாபகமில்லை' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, எழுத்து பூர்வமாக எழுதி கொடுப்பதாகவும் பதிலளித்தார்.விசாரணை இன்று தொடர்வதால், சசிகலா பெங்களூருவில் தங்கி உள்ளார். இன்று, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.