new publish karunanidhi request | "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட கருணாநிதி வேண்டுகோள் | Dinamalar
Advertisement
"தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட கருணாநிதி வேண்டுகோள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:""தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், எங்களின் செய்திகளை சுவர்களில், கரித்துண்டுகளை வைத்து எழுதுவோம்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

வடசென்னை, தங்கசாலையில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின், 91வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் கருணாநிதி பேசியதாவது:டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், அப்பகுதி, கருணாநிதியின் தொகுதி எனவும், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது உண்மை தான்; நான் அதை மறுக்கவில்லை.அதைத் தடுக்க வேண்டியதற்கான செங்கோல், என்னிடம் இல்லை. செங்கோல், கொடுங்கோலாக மாறி, வேறு ஒருவர் கையில் உள்ளது. திருவாரூர் தொகுதியை சுற்றியுள்ள மயிலாடுதுறை மற்றும் சிவகாசி உள்ளிட்ட இடங்களில், ஏழு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அவர்களுடைய குடும்பத்தாருக்காக, தி.மு.க., சார்பில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், 3.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன். இது வெறும் பேச்சு தான் என்றும் சிலர் எழுதுவர். எனவே, அதை இங்கேயே, திருவாரூர் மாவட்ட செயலர் கலைவாணனிடம் தருகிறேன். அதை உரியவர்களிடம் அவர் சேர்ப்பித்து எனக்கு ரசீது தருவார்.அண்மையில், தி.மு.க., சார்பில் மின்வெட்டை கண்டித்து தமிழகத்தில், 500 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அது குறித்த செய்தியை, தினமலர் உள்ளிட்ட சில நாளிதழ்கள் புறக்கணித்து விட்டன.

அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி செய்திகளை போல, தி.மு.க., கட்சி செய்திகளையும் அவர்கள் வெளியிட வேண்டும்.செய்தி வெளியிடவில்லை என்பதற்காக நாங்கள் கதற மாட்டோம். அவ்வாறு வெளியிடா விட்டால் கவலையில்லை; எங்களுக்கு சுவர்கள் இருக்கின்றன; கரித்துண்டு இருக்கிறது. பத்திரிகை மட்டுமே எங்களுக்கு மூல பலம் இல்லை. மூளை பலம் இருக்கிறது. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து எங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும்.இவ்விழாவிற்கு திரண்டுள்ள கூட்டம், வருகிற தேர்தலுக்கான முன்னோட்டம். இருண்ட தமிழகத்தை காக்க, தி.மு.க., எழுச்சி பெற அனைவரும் திரள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் வளர்ச்சி, பா.ஜ.,தளர்ச்சி: கருணாநிதி கருத்து "குஜராத், இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்; காங்கிரஸ் வளர்வதையும், பா.ஜ., தளர்வதையும் எடுத்துக் காட்டுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

குஜராத், இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.,வும், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றது குறித்து, நேற்று அறிவாலயத்திற்கு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, கருணாநிதி, ""இந்த இரு மாநில முடிவுகள்; காங்கிரஸ் வளர்வதையும், பா.ஜ., தளர்வதையும் எடுத்துக் காட்டுகிறது,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (276)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
27-டிச-201203:13:28 IST Report Abuse
arabuthamilan திமுக அழிந்துவிட்டது என்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய அறியாமையை நினைத்து எனக்கு நகைப்புதான் வருகிறது. நண்பரே இப்போது அதிமுக ஆட்சியில் இருப்பதால் இன்னும் இரண்டோ , மூன்றோ ஆண்டுகள் கழித்து அதுவும் இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறது. காரணம் ஊரு உலகத்துக்கே தெரியும். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். அதுதான் நம் தமிழ்நாட்டு மக்கள் விஷயத்தில் நடந்திருக்கிறது. இரண்டு மணி நேரம் மின் வெட்டை பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் இப்போது 18 -மணி நேர மின் வெட்டுக்காக தன மூளையை அவசரமாக தற்போதைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். மு.க வந்து தான் அதை மீட்டு எடுக்க வேண்டும். அந்த நன் நாளை விரைவில் எதிர்ப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் ஏதேதோ கருத்து எழுதிக்கொண்டு.....
Rate this:
4 members
0 members
6 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
25-டிச-201217:19:23 IST Report Abuse
சு கனகராஜ் மரியாவின் கருத்துக்கள் எல்லாம் வருகிறதே
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
22-டிச-201210:29:27 IST Report Abuse
ஆனந்த் அதற்கென்று கோபாலபுரம் பகுதி செய்திகள், சி ஐ டி காலனி செய்திகள் என்று பக்கம் ஒதுக்க முடியாது தலைவரே..
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
meekannan - Chennai,இந்தியா
22-டிச-201203:18:20 IST Report Abuse
meekannan பலருடைய பாதங்கள் மிதிபடுவதால் பூங்காவில் உள்ள புல் அழிந்து விடுவதில்லை. அதன் அழகும் கேட்டுவிடுவதில்லை. அதுபோல் தான் இந்த கருணாநிதியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ்ந்தவர். மக்கள் இவரை வாழ்த்தி இவர் வளர்ந்து விடவில்லை. மக்கள் இவரை சபித்து சபித்து தான் வளர்ந்தார். உங்களுடைய சாபம் தான் இவரை நீண்ட ஆயுளோட வாழ வைக்கிறது. பூணுல் என்ற வார்த்தை வந்த பின்தான் திமுக செய்தி தினமலரில் வருகிறது.
Rate this:
19 members
0 members
16 members
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
22-டிச-201201:57:14 IST Report Abuse
sankar கலைஞர் புத்திசாலி, தான் என்ன பேசினாலும் கிடைக்கும் விளம்பரத்தை விட பூணுல் பத்தி பேசினால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று தெரியும் . அவருடைய வளர்ச்சிக்கு பார்பான் தான் காரணம் ( திட்டுவதற்கும் மற்றும் தொழில் வழக்கு கருப்பு பணம் நிர்வகித்தல் , அவர் பற்றிய செய்தியை வெளி இடுதல் )
Rate this:
3 members
0 members
6 members
Share this comment
Cancel
arun.subramaniyam - LA, Cali,இந்தியா
22-டிச-201201:03:29 IST Report Abuse
arun.subramaniyam இவ்வளவு கீழ் தரமாக ஜாதி அரசியல் செய்ய உலகில் எவரும் இல்லை ....
Rate this:
6 members
0 members
20 members
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
22-டிச-201200:35:34 IST Report Abuse
ganapathy உங்களை பத்தி கண்ணதாசன் சொன்னதை " வனவாசம் " புத்தகம் சூடானுக்கு கொண்டு வந்து படித்தேன். நீங்க ஓடாத ரயில் முன்னாடி தலை வைத்து படுத்த கதை சொல்லப்பட்டு உள்ளது.
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Cancel
NVRAMANAN - chennai ,இந்தியா
22-டிச-201200:12:53 IST Report Abuse
NVRAMANAN கலைஞர் அவர்களே உங்கள் அன்பு தம்பி மரியா அல்போன்ஸ் உங்களுக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா வைரம், இவருக்கு ஏன் neenga பூணல் துறை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்க கூடாது
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
21-டிச-201217:15:10 IST Report Abuse
Er. S. ARJUNAN உண்மையான, நேர்மையான, மக்களுக்கு தேவையான செய்திகளை ஒரு போதும் எங்கள் தினமலர் தவிர்பதில்லை. அப்படியானால் உங்கள் செய்தி?....
Rate this:
56 members
3 members
44 members
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
21-டிச-201217:02:17 IST Report Abuse
maravan பொருளாதார ஏற்ற தாழ்வுகள் உள்ளவரை ஜாதியும் இருந்து கொண்டே தான் இருக்கும்..இது போன்ற அரசியல் வாதிகள் ஜாதியின் பெயரால் அரசியல் செய்வார்கள்..தமிழன் ஜாதியின் பெயரால் அடித்துக்கொண்டு ஒற்றுமை இன்றி எல்லாம் கோட்டை விடுகிறான்...
Rate this:
6 members
18 members
20 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்