காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு செக்: குடிநீருக்கு போராட தயாராகும் தமிழகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்த நிலையில், பாசனத்துக்காக, காவிரியில் நீர் திறக்ககோரி, இதுவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், முதன்முறையாக குடிநீருக்காக, தமிழக அரசு உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உதவியை நாடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 27ம் தேதி, மேட்டூர் அணை பாசன நீர் நிறுத்தப்பட்டதால், டெல்டாவில், 15 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா பயிர் கருக துவங்கியது. எனவே, காவிரியில் கர்நாடகா, 30 டி.எம்.சி., நீர் திறக்ககோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

"நீர்திறப்பு குறித்து காவிரி கண்காணிப்பு குழு பேசி முடிவெடுக்க வேண்டும். அதுவரை, 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்' என, கடந்த, 5ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. கடந்த, 7ம் தேதி கூடிய காவிரி கண்காணிப்பு குழு, கர்நாடகா இம்மாத இறுதிக்குள், 12 டி.எம்.சி., நீரை, மேட்டூர் அணைக்கு திறக்க உத்தரவிட்டது.உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஒரு சில நாள் நீர்திறந்த கர்நாடகா, அதன் பின் தண்ணீரை நிறுத்தி விட்டது. எனினும், கடந்த, 7ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் நீர்திறக்கப்பட்டது.

கடந்த, 13 நாட்களாக பாசனத்துக்கு விநாடிக்கு, 11 ஆயிரத்து, 500 கனஅடி நீர் திறந்ததால், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 35 அடியாகவும், நீர் இருப்பு, 10 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது. பாசனத்துக்கு தொடர்ச்சியாக நீர்திறக்கும் பட்சத்தில், இன்னும் சில நாளில் நீர் இருப்பு, 5 டி.எம்.சி.,க்கும் கீழே சென்று விடும். இன்னமும், 38 நாள் நீர்திறக்க வேண்டிய நிலையில், தொடர்ந்து, ஐந்து நாள் நீர்திறந்தாலும் கூட வரும் நாட்களில், சேலம் உள்பட, 11 டெல்டா மாவட்டங்களில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால், பல ஆண்டுகளாக, நடுவர் மன்ற தீர்ப்புபடி, கர்நாடகாவை நீர்திறக்க கோரி, உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, முதன்முறையாக குடிநீர் பற்றாக்குறையை போக்க, கர்நாடகா நீர்திறக்க வேண்டும் என, வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தையே, காவிரி நடுவர் மன்றத்தையோ நாடும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த, 2010ல் மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியை கர்நாடகா துவங்கியது. 2011 ஃபிப்., 8ம் தேதி, தமிழக சட்டசபை கூட்டத்தில், கர்நாடகா அரசு நீரேற்று நிலையம் அமைப்பது குறித்து, அ.தி.மு.க.,- காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் தகவல் கோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.அதற்கு அன்றைய அமைச்சர் பொன்முடி பதில் கூறுகையில், "காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, நகர, ஊரக மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி நீரை பயன்படுத்தலாம். குடிநீர் தேவைக்காக நீர் எடுக்க நடுவர் நீதிமன்றம் உரிமை வழங்கியுள்ளதாக கர்நாடகா கூறுகிறது' என்றார்.

எனவே, கர்நாடகா கூறிய அதே காவிரி நடுவர் மன்ற உரிமையை சுட்டிகாட்டி, காவிரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த, தமிழகத்துக்கும் உரிமை உள்ளது. எனவே, தமிழக மக்களின் குடிநீர் தேவைக்காக, கர்நாடகா தேக்கி வைத்துள்ள நீரை, மேட்டூர் அணைக்கு திறக்க வேண்டும் என, தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது. அவ்வாறு நாடும் பட்சத்தில், மக்களின் அடிப்படை தேவையில் ஒன்றான, குடிநீர் பிரச்னையை தீர்க்க, கர்நாடகா மீண்டும் காவிரியில் நீர்திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மறுத்தால் குடிநீர் தேவைக்காக கூட நீர்திறக்க மறுப்பதாக, கர்நாடகா மீது மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் கடும் அதிருப்தி ஏற்படும். இதனால், கர்நாடகா கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

-நமது சிறப்பு நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-டிச-201200:28:12 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... சபாஸ்..///கர்நாடகாவுக்கு இது நெத்திஅடி நெருக்கடியாக அமையும்..///
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-டிச-201203:06:52 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅடுத்தவன் சட்டியில் இருந்தே சோத்தை கேட்காமல், நாமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.. இருக்கும் நீராதாரங்களை பெருக்கவும், நீரை சேகரிக்கவும் ஒரு நல்ல வழியும் செய்யாமல், மழை நீரையும், காவிரியில் மற்றும் ஆறுகளில் வரும் உபரி நீரையும் கடலில் வீணடிக்கும் நம்மை செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்.. இந்த கோர்ட்டு கேசுன்னு அலையுறதுக்கும், அடுத்தவனை பொறஞ்சொல்லி அரசியல் ஆதாயம் பாக்குறதுக்கும் செலவு செய்யும் நேரத்தை, ஒழுங்கா ரூம் போட்டு, சேடலைட் (Satellite) படங்கள் மூலம் அழகாக ஆராய்ந்து நீர் ஆதாரங்களை அதிகம் செய்ய மக்கள் நலத் திட்டங்கள் அல்லக்கைகளுக்கு தராமல், L & T போன்ற தரமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து நிறைவேற்றினால் நாலைந்து வருடங்களில் வளம் கொழிக்கச் செய்யலாம்.. ஆனால், நடப்பது என்ன ? ஒவ்வொரு காண்ட்ராக்டும் கட்சியில் "விசுவாசமாக" இருந்த திருடர்களுக்கு கொடுத்து, மந்திரிகள் டார்கெட் வைத்து கொள்ளை அடித்து, பல்லாயிரக்கணக்கான கோடிகள் விரயமாகி ஒரு அடிப்படை வசதியும் முடிவடையாமல் அலங்கோலமாக இருக்கிறது நமது நாடு.. கண்ணீரும், கோபமும் தான் வருகிறது.. அடிமைகளையும், ஆளும் கட்சிஅல்லக்கைகளையும் பார்த்து......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்