சென்னை : "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, விரைவாக அரசிதழில் வெளியிட வேண்டும்' என்று, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு ஜூன் மாதம், தங்கள் முன்னிலையில் நான் எடுத்து வைத்த வாதம் மற்றும் அக்டோபர், 17ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். காவிரி நடுவர் மன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்திருந்தேன். காவிரி நீர் தொடர்பான வழக்கு, இந்த மாதம் ஐந்தாம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில வழக்கறிஞர்கள், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்னை தொடர்பான சட்டத்தின் படி, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, கோர்ட் கவனத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, எப்போது அரசிதழில் வெளியிடப்படும் என்று, கோர்ட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. இம்மாதம், 7ம் தேதி நடந்த, காவிரி கண்காணிப்புக் குழுவின், 31வது கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பானது, டிசம்பர் மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால், காவிரி கண்காணிப்புக் குழு மற்றும் காவிரி நீர் குழுமத்தின் பணிகள் முடிந்துவிடும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவின், 31வது கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளை சுப்ரீம் கோர்ட்டும் பதிவு செய்துள்ளது. எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, விரைவாக அரசிதழில் வெளியிடுவதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதாக அமையும் என்பதால், இந்த விஷயத்தில் உங்களது விரைவான நடவடிக்கையையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.