Kidnapping, property hijackers notice to the Minister Senthil Balaji | ஆள்கடத்தல், சொத்து அபகரிப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் | Dinamalar
Advertisement
ஆள்கடத்தல், சொத்து அபகரிப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:"கால்சென்டர்' ஊழியரை கடத்தி, சொத்தை அபகரிக்க வெற்று ஆவணங்களில் கையொப்பம் வாங்கியதாக தாக்கலான வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.கரூர் பெரியகுளத்துப்பாளையம் காமாட்சி பெரியசாமி தாக்கல் செய்த மனு:

நான் கோவையில் கம்ப்யூட்டர் "கால்சென்டரில்' வேலை பார்த்தேன். 2011 ஜூன் 3 ல் வேலை முடிந்து, டூவீலரில் வந்த என்னை நடராஜன், மோகன்ராஜ், கோழிபாலு (எ) செல்வராஜ், பெரியசாமி காரில் பின் தொடர்ந்தனர். என்னை, காரில் கடத்தினர். நடராஜனின் வீட்டில் வைத்து என்னை தாக்கினர். தாக்கிய அசோக், செந்தில் பாலாஜியிடம் பேசுமாறு கூறினார்.
மொபைல்போனில் பேசியவர்," நான் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகிறேன். உனக்கு சொத்து தேவையா, நான் சொல்கிறமாதிரி கேட்காவிடில், கொலை செய்துவிடுவேன்,' என மிரட்டினார். வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர். 2011 ஜூலை 7 ல் கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், என்னிடம் சில ஆவணங்களில் கையொப்பம் வாங்கினர்.

வேலாயுதம்பாளையம் ஸ்டேஷனில் எனது உறவினர்களிடம் வெற்று காகிதங்களில் கையொப்பம் பெற்றனர். என்னை கடத்தி, துன்புறுத்தி, மிரட்டி, ஏமாற்றியதாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தேன். கரூர் ஜே.எம்.,(2)கோர்ட்டிற்கு மனுவை அனுப்பினர். அதே கோர்ட்டில், செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக், கடத்தலில் முக்கிய பங்குவகித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளேன். செந்தில்பாலாஜி, அசோக் பெயர்களை வழக்கில் சேர்த்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜே.எம்.,கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணையை ஈரோட்டிற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி டி.சுதந்திரம் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் எஸ்.ரவி ஆஜரானார். செந்தில்பாலாஜி, அசோக்கிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜன.,10 க்கு ஒத்திவைத்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
21-டிச-201203:40:41 IST Report Abuse
Baskaran Kasimani மந்திரி வேலை செய்யாத மந்திரியும் உண்டா - என்பதற்கு ஒரு இலக்கணமாக இவர் இருக்கிறார்...
Rate this:
0 members
0 members
32 members
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
21-டிச-201202:06:41 IST Report Abuse
தமிழன் உண்மை தான் தி மு க விற்கு வீரபாண்டி என்றால் அதிமுகவுக்கு இந்த மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் . இவருக்கு கிரானைட்டு & அடுத்தவர் நிலம் என்றால் ரொம்ப பிடிக்கும் .
Rate this:
2 members
0 members
85 members
Share this comment
Cancel
21-டிச-201200:31:20 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... தி மு க வினால் ஜோடிக்க பட்ட பொய் வழக்கு.../// யாரும் இதை நம்ப வேண்டாம்..///
Rate this:
191 members
0 members
22 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-டிச-201202:31:47 IST Report Abuse
தமிழ்வேல் பயப்படாதீங்க அவருக்கு ஒன்னும் ஆயிடாது....மாஜி மந்திரி பரஞ்ஜோதி இல்ல ?...
Rate this:
0 members
0 members
175 members
Share this comment
Cancel
Amanullah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-டிச-201200:27:34 IST Report Abuse
Amanullah இவரை ஒரு ஜீனியர் வீரபாண்டி ஆறுமுகம் என்றும் இவருடைய தம்பி ஒரு ஜீனியர் ராமஜெயம் என்றும் ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டு உள்ளது. ஜெ. எப்ப்டி இதையெல்லாம் அனுமதிக்கிறார் என தெரியவில்லை. ஜெ. ஆட்சிக்கு வந்தால் லோக்கல் ரவுடிகளின் தொல்லை ஓரளவுக்காவது குறையும் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இனிமேலும் அந்த நம்பிக்கை நம்மிடம் தொடருமா என தெரியவில்லை..
Rate this:
10 members
2 members
69 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்