திருச்சி: "குட்டி' ராமஜெயம் என்று தி.மு.க.,வினரால் பயத்துடன் அழைக்கப்பட்ட, நேருவின் உறவினர் வினோத், நில அபகரிப்பு வழக்கு காரணமாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.திருச்சி, திருவானைக்காவல், பெரியார் நகரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வினோத், 29. திருச்சி, தி.மு.க., மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம் அவரின் மனைவியும், கோபாலின் மனைவியும் உடன்பிறந்த சகோதரிகள்.
கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, மத்திய மண்டலத்தில் நிழல் அமைச்சராக வலம் வந்த ராமஜெயத்துக்கு, வலதுகரமாக, "குட்டி' ராமஜெயமாக, வினோத் வலம் வந்தார். நேருவிடம் நடக்காத காரியம், ராமஜெயத்திடமும், ராமஜெயத்திடம் நடக்காத காரியம், வினோத்திடம் நடக்கும்.திருமணமாகாத வினோத், கடந்த, தி.மு.க., ஆட்சியின்போது, கடும் பணிச்சுமை காரணமாக, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற தீவு நாடுகளுக்கு நெருங்கிய நண்பர்களுடன் அடிக்கடி சுற்றுலா சென்று, "ரிலாக்ஸ்' செய்துக் கொள்வது வழக்கம்.
அ.தி.மு.க., ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், போலீஸ் உயரதிகாரிகள் வரை, ஆட்டிப் படைத்த ராமஜெயம், வினோத் மீதும், போலீஸாரின் கோபப்பார்வை திரும்பியது. ராமஜெயம் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்த நிலையில், வினோத் மீதும் வழக்குகள் பாய்ந்தன.திருச்சி, வயலூர் சாலை, சீனிவாச நகர், திலகர் தெருவை சேர்ந்த ராமு என்பவர், 2011 நவம்பர், 27ம் தேதி கொடுத்த, 50 லட்ச ரூபாய் நில அபகரிப்பு புகார் படி, திருச்சி அரசு மருத்துவமனை போலீசார், நேரு, ராமஜெயம், வினோத் உள்ளிட்ட, ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமஜெயம், படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேரு உள்ளிட்ட மற்றவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். முன்ஜாமீன் கேட்காத வினோத், தலைமறைவாக இருந்தார்.
மற்றொரு நில அபகரிப்பு புகார் தொடர்பாக, வினோத்தை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். இதையறிந்த வினோத், தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை, மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதித்தது. அதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் வினோத் சரணடைந்தார்.உரிய பிணைப்பத்திரங்கள், இரு நபர் உத்தரவாதத்தின் அடிப்படையில், மாஜிஸ்திரேட் ராஜாராம், வினோத்தை ஜாமீனில் விடுவித்தார். ராமஜெயம் கொலை வழக்கில், வினோத் மீதே, தனிப்படை போலீஸார் சந்தேகமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருவும் ஆஜர்: வினோத் மீதான அதே நில அபகரிப்புப் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நேருவுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை முன் ஜாமீன் வழங்கியது. நேற்று முன்தினம் நேரு சென்னையில் இருந்ததால், திருச்சி நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜராகி ஜாமீன் பெற முடியவில்லை. அதையடுத்து, நேற்று காலை, ஜே.எம்.4 மாஜிஸ்திரேட் ராஜாராம் முன்னிலையில், நேரு ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அது என்ன முன்ஜாமீன் கொடுப்பது? . இவர்களை போன்ற கேவலமான திருடர்கள் எல்லா திருட்டுதனதையும் செய்து விட்டு சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். என்றாவது காவல்துறைக்கே ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றி இவரை கைது செய்யலாம் என்று நினைத்தால் உடனே முன் ஜாமீன் மனுவை தட்டி விடுவார்கள். நமது நீதிமன்றங்களும் எதையும் யோசிக்காமல் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி இவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு BREAK இல்லாமல் பார்த்து கொள்ளும். இதை போல குற்ற பின்னணி உடையவர்களை நமது நீதிமன்றங்களும் காவல்துறையும் மிக கடுமையாக HANDLE செய்து நன்றாக அலைகழித்து போதும் போதும் என்ற அளவிற்கு TORTURE கொடுத்து அவர்களுக்கு தக்க பாடம் கற்ப்பிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் இந்த தீய மனிதர்கள் எப்படியாவது தப்பி விடுகிறார்களே. நமது நீதிமன்றங்களும் காவல் துறையும் இவர்களை மிக மிக SOFT ஆக தான் HANDLE செய்கிறார்கள். குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் இவர்களை போன்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். செல்வாக்கான மனிதர்களுக்கே இவ்வளவு கடுமையான தண்டனையா என்று அதை பார்த்து பிற திருடர்களும் தங்கள் திருட்டு நடவடிக்கைகளை குறைத்து கொள்வார்கள். மக்களும் நிம்மதியாக இருக்கலாம்.
போலீசார் எப்போதும் ஆளும்கட்சியின் எடுபுடி. இப்போது ராவணின் எடுபுடியாக இருக்கும் போலிஸ் நாளைக்கு வினோத்தின் கோவத்திற்கு ஆளாக நேரிடும். மரியாதையாக போலிஸ் நடந்து கொள்ளவேண்டும். போலிசின் நாளைய திருச்சி பாஸ் வினோத் என்பதை மனதில் வைத்து கொண்டு செயல்படவேண்டும். எந்தநேரமும் ஜெயா ஆட்சி கவிழும். போலிஸ் ஒரேயடியாக ஜெயாவிற்கு ஆதராக செயல்பட்டால், நாளை தண்ணீர் இல்லாத காட்டிற்கு செல்வார்கள்.
I Think Mr. Sandiyan is conforming that when DMK was ruling they have kept the police dept. in their pockets and doing things that why they warning the police really very good now we can see and hear the true colors of DMK . the most MP's with DMK they could not fight with center for the excess current given by Delhi govt. to bring for the people of tamilnadu but DMK is staging protest in entire tamilnadu for the power cut really great hat's off to DMK and its followers...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.