Advertisement
பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 டிச
2012
23:55

சென்னை:பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன், நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ, 39. இவரும் கர்நாடக இசை உலகில் மிக பிரபலமாக விளங்குகிறார். திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

விருப்ப ஓய்வு:இவரது கணவர் மகாதேவன், 45. மென்பொருள் பொறியாளரான இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார்.தந்தை விஸ்வநாதன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோட்டூர்புரத்தில் மகாதேவன் வசித்து வந்தார். மகாதேவன்-நித்யஸ்ரீக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மகாதேவன், நேற்று காலை 8:00 மணிக்கு மகள்களை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று, கொண்டு விட்டு வீடு திரும்பினார். பின் காலை 11:00 மணிக்கு, அவரது ஓட்டுனர் தண்டபாணி, 30, என்பவரை அழைத்து காரை எடுக்கும் படி கூறினார்.

அடையாற்றில் குதித்தார்:இருவரும் அருகில் உள்ள டென்னிஸ் அரங்கம் ஒன்றிற்கு சென்றனர். அங்கிருந்து கோட்டூர்புரம் வழியாக வீடு திரும்பும்போது, மகாதேவன் காரை ஓட்டியுள்ளார்.நண்பகல் 12:30 மணிக்கு, பாலத்தின் நடுவில் திடீரென காரை நிறுத்தி, சாவியை எடுத்து கொண்டார். திடீரென பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் தண்டபாணி, உடனடியாக நித்யஸ்ரீயை அலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்த சிலர், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். காரில் வந்த நபர் ஆற்றில் குதித்த தகவலால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

உடல் மீட்பு:தகவலறிந்து, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்க முயன்றனர். அதற்குள் மகாதேவனில் உடல் ஆற்றில் மிதந்தது. அதை கயிறு கட்டி மேலே இழுத்தனர்.அப்போது, ஆட்டோ மூலம் அங்கு விரைந்து வந்த நித்யஸ்ரீ, கணவர் குதித்த இடத்தை பார்த்து கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மகாதேவனின் உடலை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவன் இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (65)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
govin - TRICHY,இந்தியா
22-டிச-201200:02:26 IST Report Abuse
govin HUSBAND DEATH REALLY IT IS VERY BAD INCIDENT. IT IS A SHOCKING NEWS OF US. WE PRAY TO GOD TO YOUR ENTIRE FAMILY FOR PEACE OF MIND AND REST IN SOUL. PLEASE TAKE CARE OF YOUR CHILDREN AND YOUR HEALTH. BUT WE ARE EXPECTING SHOULD CONTINUE IN SINGING. LOT OF FANS ARE IN THE WORLD.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
21-டிச-201216:52:12 IST Report Abuse
Krish பல பிரபலங்களின் மனைவிகள் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் தற்கொலை வரை போவதில்லை.. ஆனால் ஒரு பிரபலத்தின் கணவராக இருந்து ஏதோ காரணத்துக்காக மகாதேவன் மரணம் அடைந்தது தன்னை தானே தண்டித்து கொள்ளவா,அல்லது நித்யஸ்ரீயை தண்டிப்பதாக கருதி இப்படி தற்கொலை செய்து கொண்டாரோ தெரியவில்லை ..இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை தவிக்க விட்டு சென்றதும் ஒரு ஆணாதிக்க மனப்பான்மையே.
Rate this:
10 members
2 members
40 members
Share this comment
Cancel
Mr y - thamizhnadu,இந்தியா
21-டிச-201216:15:04 IST Report Abuse
Mr y மனோதத்துவ பிரச்சினை உள்ளவர்.. கடைசிவரை பிறருக்கு பிரசினையகதான் இருப்பார் ... மகாதேவன் உங்களை நினைக்க மிகவும் வேதனைதான்.. உங்கள் குழந்தைகள் மனைவிக்கு இது எவளவு துயரம்... நீங்க எல்லோரையும் நினைச்சு பார்த்து சந்தோசமாக சமநிலை யோசனை எடுக்க மறுத்து விட்டீர்...
Rate this:
3 members
1 members
16 members
Share this comment
Cancel
Babu DJ - CHENNAI,இந்தியா
21-டிச-201216:12:30 IST Report Abuse
Babu DJ விட்டு கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை என்றால் வாழ்வில் எப்போதும் நிம்மதி இல்லை. இறைவன் கொடுத்துள்ள உயர்ந்த பரிசு உங்கள் குரல். ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு இது உங்களுக்கு, உங்கள் மனம் அமைதி பெற அவரின் ஆத்மா சாந்தம் பெற இறைவன் அருள் புரியட்டும். இவன் ரசிகன்,
Rate this:
0 members
2 members
16 members
Share this comment
Cancel
Ramachandran Ponnusamy - thanjavur,இந்தியா
21-டிச-201215:54:44 IST Report Abuse
Ramachandran Ponnusamy தங்களுக்கு நல்ல மன தைர்யம் உண்டாக எங்கள் குடும்பத்தினர் சார்பாக இறைவனை வேண்டுகிறோம்
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
21-டிச-201215:36:44 IST Report Abuse
Naagarazan Ramaswamy துக்கமான செய்திதான். இருந்தாலும் மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் சங்கீத உலகிற்கு நஷ்டமில்லாமல் நித்யஸ்ரீ அவர்களின் குரல் சில காலம் கழித்தாவது தொடர்ந்து ஒழிக்கவேண்டும். திரு சிவகுமார் அவர்களும் இதற்க்கு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென்று கெட்டுகொள்ளுகிறேன்.
Rate this:
2 members
0 members
18 members
Share this comment
Cancel
Srikanth V - Chennai,இந்தியா
21-டிச-201215:35:57 IST Report Abuse
Srikanth V கடவுள் நித்தியஸ்ரீ தன்னம்பிக்கையுடன் இரு குழந்தைகளையும் வளர்க்க கருணை புரியட்டும்
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
Cancel
Selvaraj - Bangalore,இந்தியா
21-டிச-201214:39:31 IST Report Abuse
Selvaraj இதற்கு காரணம் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் மனம் யாருக்கும் இல்லாதது தான். குடும்ப பெண்கள் கணவனை தவறான வார்த்தைகளால் எல்லோர் முன்னிலையிலும் அவமதிப்பது தவறு. இசையின் வளைவு சுளிவுகளை அறிந்த நித்யஸ்ரீகு குடும்பத்தின் வளைவு சுளிவுகளை அறிய தெரியவில்லை.
Rate this:
13 members
0 members
16 members
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
21-டிச-201214:14:39 IST Report Abuse
Ravichandran முட்டாளே உன்னை கணவனாக அடைய பாவம் அப்பெண் என்ன பாவம் செய்தால்.
Rate this:
7 members
0 members
16 members
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
21-டிச-201214:13:34 IST Report Abuse
Krish நித்யஸ்ரீ ஒரு இசை மேதை. இவரது கணவர் தற்கொலை, ஒரு சுயசிந்தனை இல்லாத, முதிர்ச்சி இல்லாத செயலாக தான் தெரிகிறது. நித்யஸ்ரீ வளர்ந்தால், அதில் அவர் பெருமைகொள்ளவேண்டும். சமீபத்தில், ARR யிடம், நித்யஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் பாடல்களை கம்போஸ் செய்யும்படி துணிச்சலாக வேண்டுகோள் வைத்தார். அந்த அளவிற்கு கர்னாடிக் இசை மீது பிரியம் கொண்டவர். அவருக்கு இப்படி ஒரு சோகம் நடந்திருக்க்வேண்டாம்.
Rate this:
10789 members
0 members
20 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.