district news | சூரிய சக்தி பயன்பாட்டு கருவிகளுக்கு "நீட்ஸ்' திட்டத்தில் முன்னுரிமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய சக்தி பயன்பாட்டு கருவிகளுக்கு "நீட்ஸ்' திட்டத்தில் முன்னுரிமை

Added : டிச 21, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை : அரசின் "நீட்ஸ்' திட்டத்தில், உற்பத்தி - சேவைத் தொழில்களுக்கு 25 சதவீத மானியம், மூன்று சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, நிதி நிறுவனங்கள் வழியாக கடன் வழங்கி, புதிய உற்பத்தித் தொழில்களை துவங்க அரசு "நீட்ஸ்' திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற, தொழில் மதிப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இருக்க வேண்டும்.
புதிதாக துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே, இத்திட்டம் பொருந்தும்; திட்டத்தில் பங்கேற்க முதல் தலைமுறை தொழில்முனைவோர் தகுதியுடையவர்கள்.
கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் சாத்தியக்கூறுள்ள உற்பத்தித் தொழில்களாக இன்ஜினியரிங் தொழில்கள், கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட இயந்திரங்களை கொண்ட தானியங்கி வாகன பாகங்கள் உருவாக்குதல், கயிறு, ரப்பர்நார் மெத்தை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கண்டறிப்பட்டுள்ளன. இதுபோன்ற உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு 25 சதவீத மானியம்; மூன்று சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35. இதர சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பு 45. பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு எதுவும் இல்லை.
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்கள், மாசு கட்டுப்பாடு உபகரணங்கள், சூரிய சக்தி பயன்பாட்டு உபகரணங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கான விண்ணப்பம் மற்றும் தேவையான விபரங்களை மாவட்ட தொழில் மையத்தின் www.dickovai.com என்ற வலைதளத்தில், "டவுன்லோடு' செய்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை