"வீடு வரை' மட்டுமல்ல உறவு "கடைசி வரை' கைகொடுத்த கிராமம்* விக்கிரபாண்டியபுரத்தின் மனிதநேயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கமுதி:ராமநாதபுரம், கமுதி அருகே விக்கிரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிலையழகு என்பவர், துபாய்க்கு சென்று, அங்கு இறந்தார். மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்.எல்.ஏ., உதவாத நிலையில், கிராமத்தினர் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் மூலம், அவரது உடல் சொந்த ஊர் வந்தது.விக்கிரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சிலையழகு. அ.தி.மு.க., பிரதிநிதியாக இருந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன், துபாய்க்கு, கட்டுமான பணிக்குச் சென்றார். இந்நிலையில், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, உடலை பெற்றுக்கொள்ளுமாறு, டிச.,14 ல், கட்டுமான ஏஜன்சியினர், சிலையழகு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பணமின்றி தவித்தனர்.

முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் (அ.தி.மு.க.,), அமைச்சர் சுந்தரராஜை சந்தித்து, உதவுமாறு கிராமத்தினர் முறையிட்டனர்; உதவி கிடைக்கவில்லை. அந்த கிராமத்தினர், வீடு, வீடாக பணம் வசூலித்தனர். இதில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாயை, நிறுவனத்திற்கு அனுப்பினர். நேற்று காலை, சிலையழகு உடல் ஊர் வந்தது. கிராமத்தினர் செலவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிலையழகிற்கு மனைவி காளிமுத்து, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கிராமத்தினர் கூறுகையில், "அமைச்சர், எம்.எல்.ஏ., விடம் முறையிட்டபோது, ரேஷன் கார்டு நகலை மட்டும் பெற்றுக் கொண்டனர். "கலெக்டரிடம் பேசிக்கொள்கிறோம்' என்றனர். பின், இதுகுறித்து கேட்டபோது, "கொஞ்சம் வேலையாக இருக்கிறோம், பின்னர் பார்ப்போம்' என, கூறிவிட்டனர்' என்றனர்."முதல்வர் ஜெ., யின் உதவி கிடைக்குமா?' என, சிலையழகு குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார்.அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Iyer - chennai,இந்தியா
23-டிச-201217:50:41 IST Report Abuse
Natarajan Iyer ஆறு ஆண்டுகள் துபாயில் பணி செய்தவர் குடும்பத்தில் ஐம்பது ஆயிரம் கூடவா இருக்காது? வருத்தமாகவும் நம்ப முடியாமலும் இருக்கிறது. எதற்க்கெடுத்தாலும் அரசு உதவி எதிபார்ப்பது அசிங்கம்.
Rate this:
Share this comment
Cancel
Baskar M - Bangalore,இந்தியா
22-டிச-201213:08:03 IST Report Abuse
Baskar M முதல்வர் ஜெ., யின் உதவி கிடைக்குமா?' என, சிலையழகு குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்???????????????????????? முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார். அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார். அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை,கலெக்டர் இல்லை சரி... மனிதனாகவுமா இல்லை எவரும்?
Rate this:
Share this comment
Cancel
Raajkumar - madurai,இந்தியா
22-டிச-201211:49:13 IST Report Abuse
Raajkumar அமைச்சருக்கு தன் சாதிக்காரன் என்றால் என்ன வேடுமானாலும் செய்வார். இறந்தது வேறு சாதிகாரரே எப்படி செய்வார். பாராளுமன்ற தேர்தலுக்கு இங்கதாண்டி வரணும்.
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
21-டிச-201218:54:52 IST Report Abuse
maravan மனித நேயம் இருக்கிறது எங்கள் விக்கிரபாண்டிபுரத்து மக்களிடம்...மனசாச்சி இல்லா அதிகாரிகள். நல்ல மனம் படைத்த கிராம மக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
21-டிச-201214:37:58 IST Report Abuse
Chandra Sekaran இது போன்ற இறக்கமில்லாதவர்களுக்கு அடுத்த முறையும் ஒட்டு போடுங்கள் தமிழன் திருந்தமாட்டான் இவனைப்போலுள்ளவர்களை ஊருக்குள் விடக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Cheyur Kumar - tirupur,இந்தியா
21-டிச-201214:03:44 IST Report Abuse
Cheyur Kumar இறந்த பிறகும் ஒட்டு போடும் உரிமை இருந்து இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் நம்மூர் அரசியல் வியாதிகள்
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
21-டிச-201212:40:49 IST Report Abuse
R.Saminathan மனித நேயம் மனிதர்களுக்கு மட்டும் உண்டு,,உலக மனிதர்களே நல்லது மட்டும் செயுங்க....திரு.சிலையழகு குடும்பத்துக்கு எனது மன ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
21-டிச-201211:33:25 IST Report Abuse
முத்துநகர் மைந்தன் அரசு இயந்திரம், தொகுதி வேட்பாளர் அனைவரும் இருந்தும் நமக்கு நாமே தான் உதவ வேண்டி உள்ளது.. என்ன கொடுமை இது..
Rate this:
Share this comment
Cancel
Indian from Mumbai - Mumbai,இந்தியா
21-டிச-201210:24:10 IST Report Abuse
Indian from Mumbai அந்த தொகுதி மக்களே நீங்கள் இந்த நிகழ்ச்சியை குறைந்தது அடுத்த தேர்தல் வரையாவது நினைவில் வைத்திருபீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-டிச-201209:24:02 IST Report Abuse
Vetri Vel இது போன்ற மந்திரிகளையும் அரசியல்வாதிகளையும் ஊருக்குள் விட கூடாது சரியான பாடம் சொல்லி தரணும் .....ஆபத்துக்கு உதவாதவனுக்கு எதுக்கு ஒட்டு. அடுத்த முறையாவது நல்லவர்களை தெரிந்து எடுப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்