சென்னை:திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்க இருப்பதை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற இருக்கிறது.
அன்றைய தினம், அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைய துறை மேற்கொண்டு வருகிறது.
வி.ஐ.பி., பாஸ் இல்லை
பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இந்த ஆண்டு முதன் முறையாக, முக்கிய பிரமுகர்களுக்கு, தனியாக வி.ஐ.பி., பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை.
ஒரே வகையில் மொத்தமாக வழங்கப்படும், இந்த அட்டைகள், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதால், இந்தாண்டு, "பேட்ஜ்' முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதாவது முக்கிய பிரமுகர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, பதவி மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்ட, "பேட்ஜ்' வழங்கப்படும். பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக, இத்தகைய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது.
கட்டணமில்லா தரிசனம்
வழக்கம் போல, ஊடக துறையினருக்கு மட்டும், "சிறப்பு பாஸ்' வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, "கட்டணமில்லா தரிசன முறை'யும் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதலில் வரும் 1,000 பக்தர்கள், கட்டணமில்லாமல் தரிசிக்கலாம். இதை தொடர்ந்து, பகலில் தரிசன கட்டணமாக, 100 ரூபாய் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரமபத வாசல் தரிசனம், மூலவர் தரிசனம் என்று தனி தனியாகவும், இரண்டும் ஒன்றாகவும் பக்தர்கள் விரும்பியவாறு தரிசனம் செய்யலாம்.
வசதிகள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் இலவசமாக லட்டு மற்றும் பிரசாதம், கோவில் வழிகளை விளக்க தகவல் மையம், மருத்துவ முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், பேருந்து வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கோவிலில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், பெரிய திரை அமைக்கப்பட்டு, வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், கோவிலுக்குள், கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.