no panic on mayan calendar | "இன்று உலகம் அழியாது' நாசா விஞ்ஞானிகள் உறுதி | Dinamalar

"இன்று உலகம் அழியாது' நாசா விஞ்ஞானிகள் உறுதி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
"இன்று உலகம் அழியாது' நாசா விஞ்ஞானிகள் உறுதி

பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்காவின், "மாயன்' காலண்டரில் நம்பிக்கையுள்ள மக்கள், கூட்டாக தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதால், அர்ஜென்டினா நாட்டு போலீசார், உயர்ந்த மலைகளுக்கு செல்லும் வழியை அடைத்துள்ளனர்.மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட "மாயன்' இனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர், கி.மு.3114ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.மாயன் காலண்டர், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் நாட்களை கொண்டது. அதன் பின், இந்த காலண்டர் மறு சுழற்சிக்கு உட்பட்டது. இன்றுடன் இந்த காலண்டர் முடிவடைவதால், உலகம் இன்று அழிந்து விடும் என, சிலரால் வதந்தி பரப்பப்படுகிறது.
நாசா விண்வெளி மறுப்பு:அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது. எரிமலை சீற்றம், சூரிய காந்த புயல், கோள்களின் மோதல், விண்கற்களின் தாக்குதல், சுனாமி உள்ளிட்ட பல காரணங்களால், உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மேற்கண்ட சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தான் உலகம் அழியும். இப்போதைக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, இன்று உலகம் அழியும் என்பது கட்டுக்கதை என, நாசா விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.தென் அமெரிக்க நாட்டவர்கள், இந்த காலண்டரை அதிகம் நம்புகின்றனர். மாயன் காலண்டர் இன்றுடன் முடிவடைவதை, சிலர் விழாவாக கொண்டாடுகின்றனர்.சீனாவில் உள்ள ஒரு மத அமைப்பினர், உலகம் அழிவதற்குள் சொத்துக்களை எல்லாம் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என, பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்த, 1,000 பேரை, சீன அரசு கைது செய்துள்ளது.மாயன் காலண்டரை பின்பற்றும் சிலர், உலகம் அழிவதற்குள் ஒட்டு மொத்தமாக இறந்துவிட திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இணைய தளங்களில் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். "பேஸ்புக்' இணைய தளத்தில், இதற்கான விளம்பரங்கள் வெளியாகியுள்ளதால், இதை ஏற்று, 150 பேர் கூட்டாக தற்கொலை செய்து கொள்ள பதில் அனுப்பியுள்ளனர்.அர்ஜென்டினாவில், "மாயன்' கோவில்கள் உள்ளன. உயர்ந்த மலை மீது அமைந்துள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிலர், கூட்டாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால், உயர்ந்த மலை பகுதிகளுக்கு செல்லும் வழிகளை, அர்ஜென்டினா போலீசார் அடைத்துள்ளனர்.இன்னும் சில நாடுகளில், உலகம் அழிந்தால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள, பூமிக்கு அடியில் பதுங்கு அரண்களை வடிவமைத்துள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
21-டிச-201207:38:52 IST Report Abuse
Madukkur S M Sajahan மனிதனுக்கு என்னவெரு பேராசை இன்றோடு உலகம் அழிந்துவிடும் என்று? 2012 படத்தில் வருவது போல உலகத்தை ஒரே நாளில் அழிந்தது மனிதனை மனிதன் செய்த தவறுகளுக்கு இந்த உலகத்திலேயே தண்டிக்காமல் அவ்வளவு எளிதாக விடுவித்துவிட மாட்டான் கடவுள். போர்,நோய்,இயற்கை சீரழிவு, பொறாமை, இன சண்டை,மத சண்டை,நிம்மதியின்ம,சந்‌தோசமின்மை, பஞ்சம்,பசி போன்றவைகள் ஏற்பட்டு கஷ்டத்தையும் வலியையும் மனிதன் கண்ணால் கண்டபின்னர்தான் படிப்படியாக தான் உலகம் அழிந்தால் அழியுமே தவிர.எதிர் பார்ப்பது போல ஒரே நாளில் உலகம் அழியாது. ஒரே நாளில் உலகத்தை அழித்துவிட்டால் மனிதன் ஆடிய ஆட்டத்திற்கு தண்டனை இல்லாமல் போய்விடும் அல்லவா???
Rate this:
Share this comment
Suba Kar - kalingarod,ரஷ்யா
22-டிச-201200:28:48 IST Report Abuse
Suba Karஆமாம். அண்ணோ சரியாய் சொன்னிங்க....
Rate this:
Share this comment
Suba Kar - kalingarod,ரஷ்யா
22-டிச-201200:42:16 IST Report Abuse
Suba Karஅழியுமா அழியாதா 2012...
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
21-டிச-201207:32:35 IST Report Abuse
K.Balasubramanian இன்று நன்றாகவே விடிந்தது . நமக்கு நாமே நன்றாக இவ்வுலகில் நடப்பது புரியும்போது நாசா விஞ்ஞானிகளின் கூற்று நம்மை நம்பிக்கை கொள்ள வேண்டுமா ? நமது முன்னோர்களின் காலெண்டரில் இது போன்ற கணிப்புகள் இல்லை . நம் ஊர் நாராயணன் கூட அறுதி இட்டு கூறுவார் சந்தேகத்துக்கு இடமில்லை என்று .
Rate this:
Share this comment
anandhaprasadh - Bangalore,இந்தியா
21-டிச-201215:56:39 IST Report Abuse
anandhaprasadhஉண்மை... நமது முன்னோர்கள் வெறும் முன்னோர்கள் மட்டுமல்ல... இவ்வுலகத்தின் முன்னோடிகள்... அவர்களின் அறிவுக்கூர்மைக்கும் திறமைக்கும் முன்பு நாம் ஒன்றுமே இல்லை... இந்து மதக்கோட்பாடுகளும் கருத்துக்களும் கணிப்புகளும் என்றும் பொய்த்ததில்லை... அவற்றில் உலக அழிவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை... எனவே உஅலக அழிவு பற்றி நாம் அச்சம் கொள்ளத் தேவை இல்லை......
Rate this:
Share this comment
Cancel
Nanchil Mohan - Chennai,இந்தியா
21-டிச-201206:37:08 IST Report Abuse
Nanchil Mohan இறைவா நீ இருந்தால் இந்த மக்களை மூட நம்பிக்கையில் இருந்து விடுவித்து விடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.