பெங்களூரு: ""மாதம், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவித்ததாக, சுப்பிரமணிய சாமி, பொய்யான புகார் கொடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்தார். கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்கு அதிக பணம் செலவழித்ததாக, போலீசார் தவறான தகவலை கூறியுள்ளனர்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சசிகலா பதிலளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 19ம் தேதியிலிருந்து, சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 19ம் தேதி, 110, நேற்று முன்தினம், 82, நேற்று, 151 கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:05 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வந்தவுடன், கேள்வி கேட்கும் பணி துவங்கியது.
நீதிபதி: கொடநாடு டீ எஸ்டேட்டுக்கு, மின் சாதன பொருட்களை, 5.83 லட்ச ரூபாய்க்கு வாங்கினீர்களா?
சசிகலா: கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்காக, 2.48 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. போலீசார் மிகைபடுத்தி உள்ளனர்.
நீதிபதி: பையனூரில், 31.34 லட்ச ரூபாய் வீடு வாங்கினீர்களா?
சசிகலா: கட்டடமாகத்தான் வாங்கப்பட்டது. மின் சாதனம் பொருத்தவில்லை. பின்னர், சினிமா துறையை சேர்ந்தவருக்கு விற்கப்பட்டது.
நீதிபதி: ஈக்காட்டுதாங்கல்லில், நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்சுக்கு, 47 லட்சம் ரூபாய்க்கு மின் சாதனம் வாங்கினீர்களா?
சசிகலா: ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், வாடகைக்கு தான் இருந்தனர். ஆனால், நிறுவனத்தின் சொத்து என்று போலீசார் இணைத்துள்ளனர். மின் சாதனம் வாங்கப்பட்டது. சோதனை குறித்து எனக்கோ, கட்டட உரிமையாருக்கோ நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.
நீதிபதி: போயஸ் கார்டனில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, மின் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
சசிகலா: எனக்கு தெரியாது.
நீதிபதி: 1991-92ல், 2.62 லட்ச ரூபாய்க்கு, "ஹாலிடே ஸ்பாட்' வாங்கப்பட்டதா?
சசிகலா: இச்சொத்தை, சசி எண்டர்பிரைசஸ் வாங்கியது. 1990 ஏப்ரல், 23 ல், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது; மீதி தொகையும் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பங்கு தாரராக மட்டுமே இருந்தேன். மானேஜிங் டைரக்டரல்ல.
பின்னர், மதியம், 3:00 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன், விசாரணை தொடர்ந்தது.
நீதிபதி: வருமான வரி சரியாக செலுத்தினீர்களா? மார்பிள் மார்வல்ஸ் நிறுவனத்துக்கு வரி செலுத்தாதது ஏன்?
சசிகலா: ஆம். மார்பிள் நிறுவனத்தில் வருமானமில்லை.
நீதிபதி: ஜெயலலிதா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறி, ஏராளமான சொத்துகள் சேர்த்துள்ளார் என்று, பார்லிமென்டில் புகார் செய்த சுப்பிரமணிய சாமி, இங்கு வழக்கு தொடர்ந்துள்ளாரே.
சசிகலா: பொய்யான புகாருடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி: 1995-96ல், உங்கள் நிறுவனங்கள், 36 போயஸ் கார்டன் என்ற முகவரியில் அலுவலகமாக செயல்பட்டதா?
சசிகலா: 36, போயஸ் கார்டனில், ஒரு பகுதி வீடாகவும், மற்றொரு பகுதி, அலுவலகமாகவும் செயல்பட்டது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில், நீங்களும், சுதாகரனும் தங்கியிருந்தீர்களா?
சசிகலா: ஆமாம்.
நீதிபதி: நாதள்ளா தங்க நகை கடையில், 3 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து, 47 காரட் வைர நகைகள் வாங்கினீர்களா?
சசிகலா: 17 காரட் நகை தான் வாங்கினேன்.
நீதிபதி: 1996ல், ஜெயலலிதா, சசிகலா, உங்கள் உறவினர்களின் பெயரில், வங்கி டாக்குமெண்டுகளை, போலீஸ் அதிகாரி லத்திகா கைப்பற்றி விசாரணை நடத்தினாரா?
சசிகலா: சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. வாக்குமூலம் மட்டும் வாங்கினர். அதன் பின், விசாரணை நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது. இன்றுடன் கேள்விகள் முடிவடையும் என்று நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.
ஆங்கிலம் பொதுவான மொழி :
""மொழிப் பிரச்னையால் வழக்கு விசாரணை தாமதமாகிறது,'' என்று நீதிபதி பாலகிருஷ்ணா குறிப்பிட்டபோது, இளவரசி வக்கீல் அசோகன், ""ஆங்கிலம் இன்னமும் வெளிநாட்டு மொழி,'' தான், என்றார். ஆனால், நீதிபதியோ, ""ஆங்கிலம் பொதுவான மொழி,'' என்று குறிப்பிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்ன மாதரி நாட்டில் 90% முட்டாள்கள் இருக்கின்றனர். இது குறிப்பாக தமிழ் நாட்டிற்கு பொருந்தும். மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சி செய்தனால் தமிழ் நாடு நாளுக்கு நாள் பின்னோக்கி செல்கின்றது. அத்திவாசிய தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீர் இவைகளுக்கு அண்டை மாநிலத்தில் கை ஏந்தும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கின்றோம்
""""சுவாமி அப்படித்தான் தமிழர்களை குறிவைத்து வழக்குப் போடுவதுதான் அவரது வேலை. காரணம் அவர் அவாள்-என்பதாலேயே"""" என்றெல்லாம் திமுக சார்பு வாசகர்கள் சொல்வது அவர் திமுக பிரமுகர் யார் மீதாவது வழக்குத் தொடர்ந்தால் மட்டுமே. பிறர் மீது வழக்குத் தொடர்ந்தார் என்றால் அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அப்போது அவரது சமூகம் கண்ணுக்குத் தெரியாது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் எப்போதும் யாருக்காவது அடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப் பிழைப்பதுதான்.
appuram நீதிபதிகளின் கேள்விகளுக்கெல்லாம் சசி தங்கச்சி.. பிட் அடிச்சிதான் பதில் சொன்னாங்களாமே..அதாவது குறிபெடுத்து வந்து.. நீதிபதிகளின் கேள்விக்கெல்லாம் நீதிபதி அவர்கள் பார்க்காத நேரத்தில் குறிப்பை பார்த்து பதில் சொன்னாராமே... நல்ல அனுபவம்.. ஆமாம் ஒரு சந்தேகம்.. பரிச்சையில் பிட் அடித்தால். என்ன செய்வார்கள், இங்கே ஏன் விட்டு வைத்தார்கள். வழக்கம் போல் தெரியாது என்று சொல்லிவந்தபோது , சில கேள்விகளை கேட்டுவிட்டு, உடனே " வழக்கம்போல் தெரியாது தானே " என்றாராமே. அண்ணே கலக்குறீங்க, அப்படியே சட்டு புட்டுன்னு தீர்ப்பை இப்பவே சொல்லுங்க நாங்களும் இன்னும் எத்தனை மேல் கோர்ட் , வாய்த்த வாங்கணும், சீக்கிரமண்ணே, எங்களுக்கு வயசாயிகிட்டே போகுதில்லே, வாழ்நாளில் இதைபோல ஒரு வழக்கில் தீர்ப்பை பார்த்த திருப்தி வேணுமுன்னே, அதுக்குதான்.
நிறுவனத்தின் பெயர் சசி என்டர்ப்ரைசெஸ். ஆனால் அவர் உரிமையாளர் இல்லையாம் வெறும் பங்குதாரர் மட்டும் தானாம். பங்குதாரர் என்றால் அவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? அப்போ யார் உரிமையாளர் என்று ஏன் சொல்லவில்லை? யாரோ ஒரு மூன்றாவது மனிதர் தான் உரிமையாளர். அப்போ சசி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களை அரசே எடுத்து கொள்ளுமா ? பொய் சொல்லுவதற்கும் வரைமுறை வேண்டும். சுப்பிரமணியசாமி போட்ட இந்த வழக்கு மட்டும் காழ்ப்புணர்ச்சி என்றால், 2ஜி வழக்கு, சேதுசமுத்திரத் திட்ட வழக்கு எல்லாமே காழ்ப்புனர்ச்சிதானா? ""அரசியல் காழ்புணர்ச்சி, பழி வாங்கும் உணர்ச்சி,, சட்டப்படி சந்திப்போம்,, ஆங்கில மொழி பிரச்சினை"" என்று பல்வேறு விதங்களில் வழக்கை இழுத்தடிக்கும் போக்கை கையாள்வார்கள்.
இந்த செய்திய தினமலரில் காணோம். தினமலரா இல்ல ஜெயாமலரா? தமிழகத்தில் எதிர்கட்சிகளை அடக்க காட்டும் அக்கறையை, அரசு மாநிலத்தின் மீதும் காட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் அனுப்பியுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் கூறி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
எதிர்கட்சிகளை அடக்க காட்டும் அக்கறையை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், முன்னேற்றத்திலும் தமிழக அரசு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.