2nd place for Anbazhagan: Karunanidhi | அன்பழகனுக்கு 2வது இடம்: கருணாநிதி விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்பழகனுக்கு 2வது இடம்: கருணாநிதி விளக்கம்

Added : டிச 21, 2012 | கருத்துகள் (84)
Advertisement
அன்பழகனுக்கு 2வது இடம்: கருணாநிதி விளக்கம்

சென்னை :"தி.மு.க., அமைச்சரவையில், அன்பழகனுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டிருந்தது,' என, கருணாநிதி கூறிள்ளார்.

அவரது அறிக்கை:அன்பழகன் பிறந்த தினத்தை பற்றி, நான், "முரசொலி'யில் எழுதிய கடிதத்தில், "அலுவலகத்தில் அருகருகே அமர்ந்து, ஒன்றாக சிந்திக்கிறோம், ஒரு மனதாக முடிவெடுக்கிறோம்' என, நான் எழுதியதை, "தினமலர்' நாளிதழினால், தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைக் கிண்டல் செய்து, ஐந்து தடவை முதல்வராக இருந்த போது, அன்பழகனுக்கு எந்தப் பதவியும் கொடுக்காமல், ஏமாற்றி விட்டேன் என்பதைப் போல, துணுக்குச் செய்தி வெளியிட்டுள்ளது. முதன் முதலாக, தி.மு.க., அமைச்சரவை, 1967ல் அமைந்தது. அண்ணாதுரை தலைமையில், அமைந்த அந்த அமைச்சரவையில், அன்பழகன் இடம் பெறவில்லை. அண்ணாதுரை மறைந்த போது, அவர் அமைத்த அமைச்சரவை தான் நீடித்தது.அதன்பின், 1971ல், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, நான் முதல்வராகப் பொறுப்பேற்று, அமைச்சரவையை அமைத்த போது, அன்பழகனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக, பொறுப்பேற்க செய்தேன்.

அடுத்து, 1989ல், என் தலைமையில், அரசு அமைந்த போதும், அன்பழகனை கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்க செய்து, அமைச்சரவையில் அன்பழகனுக்கு இரண்டாவது இடம் வழங்கினேன். 1996ல், தி.மு.க., ஆட்சி அமைந்தபோதும், அவர் தான் கல்வி அமைச்சர்.அப்போது பள்ளி கல்வி, உயர் கல்வி ஆகிய இரண்டு துறைகளுக்குமே அன்பழகன் தான் அமைச்சர். 2006ல் தி.மு.க., ஆட்சியிலும், அன்பழகன் தான் நிதி அமைச்சராக பதவி வகித்தார்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-டிச-201211:48:08 IST Report Abuse
Nallavan Nallavan கலைஞருடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் கவிஞர் கண்ணதாசன், கலைஞருடைய அந்தரங்க வாழ்க்கை அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர் அவர். “அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான்” என்று யாரைக் குறித்து எழுதியிருப்பார்? உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன் அதே கண்ணதாசன்,,,, “பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மானிடத்து தலைவர்” என்று யாரைக்குறித்து எழுதியிருப்பார்,,,, அதுவும் உங்கள் ஊகத்திற்கே எம்.ஜி.ஆருக்கு முன்பே தெரிந்த விஷயம் கவியரசுக்கு ரொம்பவே லேட்டாகப் புரிந்துள்ளது. அந்த அளவுக்கு கவியரசு வெள்ளந்தியாக இருந்துள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-டிச-201211:42:51 IST Report Abuse
Nallavan Nallavan “அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி” – இது அண்ணாவின் கோட்பாடு. இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் நாகூர் ஹனிபாவா அல்லது மாண்புமிகு கலைஞரா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளலாம். தன் வாரிசுகளையும், பேரக்குழந்தைகளையும் நல்ல நல்ல பதவிகளில் உட்கார வைத்து அகமகிழ்ந்த தமிழினத் தலைவரால் தனக்கு ஆரம்பகால முதலே, நண்பனுக்கு நண்பனாய், தொண்டனுக்குத் தொண்டனாய், உழைத்து ஓடாய்த் தேய்ந்த ஒரு கட்சி விசுவாசிக்கு, மூத்த உறுப்பினருக்கு, தன் பக்கத்தில் அமர வைத்து அழகு பார்த்திருக்க முடியாத என்ன? கலைஞர் நினைத்திருந்தால் நிச்சயம் இதனை செய்திருக்க முடியும். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஐந்துமுறைகள் முதலமைச்சராய் பதவியில் வீற்றிருந்தவர் அவர். ஏன் செய்யவில்லை என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த திருக்குவளை ரகசியம். திறமையுள்ளவர்களை தட்டி வைக்கும் மனப்பான்மை கொண்டவர் கலைஞர் என்பது அவர் மீது வீசப்படும் பரவலான குற்றச்சாட்டு. கலைஞரை சுற்றியிருந்த அவரது இரத்த பந்தங்கள் வேறு யாரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒரு இரும்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கலைஞர் அவர்கள் தகுந்த உதவி செய்திருந்தால், – நேர்மைக்குப் பேர் போன அவர், யாரிடமும் உதவி என்று தேடிப்போய் கேட்டு பழக்கமில்லாத அவர் – தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்க மாட்டார். அண்ணாவின் குடுமபத்துக்கே இந்த அவல நிலை என்றால் மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-டிச-201211:40:20 IST Report Abuse
Nallavan Nallavan 2011 சட்டமன்றத் தேர்தலுக்காக தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் அமைச்சர் அன்பழகன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:- """"முதல்வர் கட்டளைப்படி தான் துணை முதல்வர் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட அனைவருமே பணியாற்றுகின்றனர். அவர் உத்தரவு இல்லாமல் யாரும் செயல்பட முடியாது. தி.மு.க., ஆட்சி பரம்பரை ஆட்சி என தவறாக கூறுகின்றனர். பரம்பரை என்பது அடையாளம் காட்டுவதே தவிர, அவரவருக்கு திறமை இருப்பதால் அரசியலுக்கு வருகின்றனர்.முதல்வர் என்னை விட இரண்டு வயது சிறியவர். இருந்தாலும் நான் கலைஞர் என்று தான் அவரை அழைக்கிறேன்."""" இப்ப புரியுதா சில அயிட்டங்களை நாம் ஏன் வீட்டு வாசலிலேயே வைக்கிறோம்,,,, சிலதை அறை மூலையிலே வைக்கிறோம் என்று?
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
22-டிச-201211:36:08 IST Report Abuse
Raja Singh முதல் இடம் கலைஞரின் குடும்ப சொத்து , தி .மு .க .இருக்கும் வரை ஆகையால் யாரும் ஆசைபடகூடாது , பட்டால் மகன்கள் கலகம் பண்ணி அசைபட்டவரை மேலே அனுப்பிவிடுவார் கவனம்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-டிச-201211:35:44 IST Report Abuse
Nallavan Nallavan 1969 பேரறிஞர் அண்ணா மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நேரம். மூத்தவர் நாவலருக்கு முன்பாக கருணாநிதி முதல்வர் பதவிக்கு குறி வைத்து மாவட்ட செயலர்களை சந்தித்து பேசி மந்திரி பதவியோ அல்லது வாரிய தலைவர் பதவியோ தருவதாக வாக்களித்து பேரம் முடிந்து விட்டது. "ஒரு தகுதியும் இல்லாத கருணாநிதியை நான் ஆதரித்தால் வீட்டில் என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டாள், மன்னிக்க மாட்டாள்" என்று பேசியவர் தான் இந்த இன மான பேராசிரியர். பதிலுக்குக் கலைஞரும் "பேராசிரியர் எந்தப் பல்கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்? அவரைப் பேராசிரியர் என்றழைத்தால் என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டாள்" என்றார்
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
22-டிச-201211:33:23 IST Report Abuse
Shaikh Miyakkhan இவர் வாய் திறந்தாலே அன்றைய தினம் ஆன்லைன் நிரம்பி விடும். முழு புசணிக்காயை சோற்றில் மறைப்பது இவரால் மட்டும் முடியும் . எப்போதும் இரண்டாம் இடத்தில் வைத்து இருக்கிறேன் என்று சொல்லும் நீங்கள் துணை முதல்வர் பதிவியை ஏற்படுத்தும் போது மட்டும் தனது புதல்வரை நியமித்தது எந்த வகையான இரண்டாம் இடம் ?
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
22-டிச-201211:14:40 IST Report Abuse
Rangarajan Pg பாவம் அந்த வாயில்லா பூச்சி அன்பழகன் எங்கிருந்தால் என்ன எவ்வாரிருந்தால் என்ன. உங்கள் போக்கு நடவடிக்கை எல்லாவற்றிற்கும் எதுவுமே பேசாமல் வாய் மூடி மௌன சாட்சியாய் இருக்கும் அவரை போன்றவரை இரண்டாமிடத்தில் வைத்திருந்து இருப்பது ஒன்றும் உங்களுக்கு பெரிய விஷயம் இல்லையே. முதல்வர்,, துணை முதல்வர் போன்ற இடத்தில அவரை வைத்து பார்க்க தான் உங்களுக்கு பெரிய மனது வேண்டும். அது எப்படியும் உங்களுக்கு இருக்க சான்ஸ் இல்லை. இரண்டாமிடத்தில் அவரை வைத்து இருப்பது உங்களுக்கு பெரிய விஷயமில்லை.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
22-டிச-201210:48:10 IST Report Abuse
mirudan அன்பழகனுக்கு பதவி ஒரு கண்துடைப்பே தவிர, பணம் பண்ணும் வித்தைகள் அனைத்து வழிகளையும் மு.க குடும்பம் குத்தகைக்கு எடுத்து கொண்டு விட்டது. ஊழல் குற்ற சாட்டுகள் அதிகம் இல்லாத ஒரு மனிதர் திமுகாவில் அன்பழகன் ஒருவர் தான்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-டிச-201210:40:51 IST Report Abuse
சு கனகராஜ் அண்ணாதுரையின் ஆட்சி காலத்தில் அன்பழகன் கலைஞருக்கு முந்திய இடத்தில இருந்தார். ஆனால் கடைசிவரை அன்பழகனை கலைஞர் எப்போதும் உப்பு பெறாத இரண்டாவது இடத்தை அளித்து அவர் வாயை கட்டி போட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி போலும் கீ கொடுத்த பொம்மை போலவும் ரப்பர் ஸ்டாம்பு போலவும் தலையாட்டி பொம்மை போலவும் இருக்கிறார் என்பது இந்திய மக்களுக்கே நன்கு புலப்படும். எல்லாம் குடும்ப உருப்பினர்களுக்காகதான் என்பதும் அனைவருக்கும் தெரியும்
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
22-டிச-201210:33:22 IST Report Abuse
GUNAVENDHAN அண்ணா அவர்கள், தி.மு.க.வை துவக்கியபோது , இன்று குடும்பத்தோடு கோடி கோடியாக தவறான வழிகளில் பணம் பண்ணிக்கொண்டுள்ள கருணாநிதி உடனிருந்தவரில்லை. ராபின்சன் பூங்காவில் தான் முதன் முதலாக மதியழகன் கையில் வைத்திருந்த நோட்டுபுத்தகத்தை அண்ணா வாங்கி, திராவிட முன்னேற்ற கழகம் என்று எழுதினார். அப்போது திருவாரூரில் சுற்றிகொண்டிருந்தவர் தான் இந்த மஞ்சள் துண்டு மைனர். ராபின்சன் பூங்காவில் தி.மு.க உதயமானபோது அண்ணாவுடன் இருந்தவர்கள் , நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன், இன்னொருவர் N .V . நடராஜன் என கருதுகிறேன். அண்ணாவுக்கு பின் நியாயமாக முதல்வராக ஆகி இருக்கவேண்டியவர் நெடுஞ்செழியன் தான், நெடுஞ்செழியன் தான் தற்காலிக முதல்வராகவும் உடனடியாக பொறுப்பேற்றுகொண்டார். அன்று இரவு வரை நெடுஞ்செழியன் தான் அடுத்த முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியாக இருந்தது. கழகத்தின் முன்னணி தலைவர்கள் அனைவருக்குமே இதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல்தான் இருந்தது. கருணாநிதியை நன்றாக புரிந்துகொண்டவர்களுக்கு, அவரது குணம் அத்துபடி, தனக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பார், வேலை முடிந்தபின் அவர்களை முதலில் ஒழித்துகட்ட பார்ப்பார். அண்ணா இறந்தது முதலே கருணாநிதி மனதில் சதி ஆலோசனை பலமாக நடந்தது, விளைவு அன்று இரவு MGR அவர்களை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்து, கையை காலை பிடித்து நீங்கள் தான் எனக்கு உதவவேண்டும், நீங்கள் சொன்னால் தான் கட்சிகாரர்கள் கேட்பார்கள், என்றெல்லாம் கெஞ்சி கூத்தாடி, MGR மனதை மாற்றி தனக்கு சாதகமாக இரவோடிரவாக, கருணாநிதி முதல்வராவது தான் சரி என்று ஒரு அறிக்கை வெளியிட வைத்தார். அப்போதெல்லாம் மீடியா கிடையாது. தமிழகமே தூங்கி எழுந்திருக்கும் போது விடியற்காலையில் பத்திரிக்கைகளில் முதல் பக்க தலைப்பு செய்தியே MGR அறிக்கை தான். கட்சியில் தனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது என்று என்னிகொண்டிருந்த நெடுஞ்செழியனின் நிலையை எண்ணிப்பாருங்கள். அவர் மட்டுமல்ல கட்சியின் முக்கிய தலைவர்களே இந்த திருப்பத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் ஆடிப்போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டர்கள் MGR கருத்தை வேத வாக்காக எடுத்து கொண்டார்கள். கருணாநிதி முதல்வரானது இப்படி சதி செய்துதான். அப்போது அன்பழகன், மதியழகன், N .V . நடராஜன், சத்தியவாணிமுத்து , போன்றவர்கள் எதுவும் பேசாமல் இருந்து விட்டார்கள். அன்றைக்கு அன்பழகன் போன்றவர்கள் நெடுஞ்செழியனுக்கு துணை நின்றிருந்தால், கருணாநிதி கதை அன்றே முடிந்து விட்டிருக்கும். ஆனால் MGR அவர்களை எதிர்த்து கருத்து சொன்னாலும், கட்சி தொண்டர்கள் மத்தியில் எடுபடாது என்பதை கருதி பேசாமல் இருந்து விட்டார்கள். ஆக அன்றைக்கே கருணாநிதிக்கு மறைமுகமாக உதவியவர் தான் அன்பழகன். அண்ணாவுக்கு பின் மூன்றாவது, நாலாவது இடத்தில் இருந்த அன்பழகனை எல்லாம் முந்தி கருணா முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல், அன்பழகனுக்கு கட்சியிலும் , ஆட்சியிலும் இரண்டாவது இடம் தான் கொடுத்து வருவதாக சொல்லும் கருணாநிதி, இரண்டாவது இடத்தில் உள்ளவரை துணை முதல்வராக்காமல் , தான் பையன் ஸ்டாலினை தூக்கி உட்கார வைத்தது ஏன்? கட்சியில் கூட அன்பழகன் தான் பெயருக்கு பொதுசெயலாளர், துணை பொதுசெயலாளராக இருந்த ஸ்டாலின் தானே எல்லா ஆட்டமும் ஆடிகொண்டிருந்தார். அப்புறம் அந்த பதவிக்கு தான் என்ன மரியாதை , இப்போது அன்பழகன் மீது கரிசனம் காட்டும் கருணாநிதிக்கு இதெல்லாம் அய்யோக்கியத்தனமான வேலையாக தெரியாமல் போனதேன்? ஒவ்வொரு முறையும் ஏகப்பட்ட தவறுகளை செய்துவிட்டு, பின் தான் மீது தவறே இல்லை என்கிறவிதமாக இவர் விடும் அறிக்கைகள் தான் இவர் பெயரை இன்னும் டேமேஜ் செய்கின்றது என்பதை இனியாவது உணர்ந்து வாயை மூடிக்கொண்டிருன்தலே நலம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை