Medical student rape: women march organizers | மருத்துவ மாணவி கற்பழிப்பு:பெண்கள் அமைப்பினர் ஊர்வலம்| Dinamalar

மருத்துவ மாணவி கற்பழிப்பு:பெண்கள் அமைப்பினர் ஊர்வலம்

Added : டிச 22, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மருத்துவ மாணவி கற்பழிப்பு:பெண்கள் அமைப்பினர் ஊர்வலம்

புதுடில்லி:டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் நல அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர், ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஊர்வமாகச் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.பல அமைப்புகள் சார்பில், நூற்றுக்கணக்கானோர், டில்லி ராஜ்பாத் பகுதியில் குவிந்தனர்."கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷமிட்டபடி, ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஊர்வலமாகச் சென்றனர். நேரம் செல்ல செல்ல, ஏராளமான பெண்கள் திரண்டதால், பதற்றமான சூழல் நிலவியது. ஜனாதிபதி மாளிகை அருகே, போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.


சாலையில், தடுப்புகளை அமைத்து, ஊர்வலமாக வந்த பெண்களை, வேறு பக்கம் திருப்பி அனுப்பினர். சில பெண்கள், தடுப்புகளை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்ல முயற்சித்தனர். இதற்கிடையே, மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும், ஒரு குற்றவாளி, உ.பி., மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்டதாக, டில்லி போலீசார் தெரிவித்தனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை