சென்னை : வரி ஏய்ப்பு செய்து, நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, மது தயாரிக்க பயன்படும், "மொலாசஸ்' திரவத்தை, மதுவிலக்கு ஆயத்தீர்வை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து, "மொலாசஸ்' எனப்படும், சர்க்கரைக் கசடை, வரி ஏய்ப்பு செய்து, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் வைத்திருப்பதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் பெரோஸ்கானுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவை அடுத்து, துறை அதிகாரிகள், சென்னை கலெக்டர் அலுவலக அதிகாரிகளுடன் சென்று, சென்னை துறைமுகத்தின், தெற்கு தளப்பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த, 5,000 டன், மொலாசஸ் ஏற்றுமதிக்கு தயார் நிலையில் இருந்தது. ஆவணங்களை பரிசோதித்தபோது, பிற அனுமதிகள் இருந்தாலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம், உள்ளூர் அனுமதி பெறப்படவில்லை. உள்ளூர் அனுமதிக்காக வரியை கட்டாமல், வரி ஏய்ப்பு செய்து, நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, மொலாசசை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மதுவிலக்கு, ஆயத்தீர்வை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்க்கரை கசடு என்ற, மொலாசஸ், மது தயாரிக்க பயன்படுகின்றது. இதை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்றுமதி செய்யும் துறைமுகம் உள்ள மாவட்ட நிர்வாகத்திடம், டன்னுக்கு, 300 ரூபாய் வரி செலுத்தி, முறையாக உள்ளூர் அனுமதி பெறுவது அவசியம். அதற்கான அனுமதியை, ஏற்றுமதி நிறுவனம் பெறவில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில், மதுவிலக்கு, ஆயத்தீர்வை ஆணையரிடம் ஏற்றுமதிக்கான அனுமதி பெற்றுள்ளனர். சுங்கத்துறையின் அனுமதியும் உள்ளது. ஏற்றுமதியாளர், 5,000 டன்னுக்கும் உரிய, 15 லட்சம் ரூபாய் வரியை செலுத்திவிடுவதாக தெரிவித்துள்ளார். அவை முறையாக செலுத்தினால், ஏற்றுதி செய்ய அனுமதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.