E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தொண்டி அருகே 100 ஆண்டாக மழைநீர் சேகரிப்பு பழக்கம்: அறுசுவைக்கு அடுப்பு புகை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 டிச
2012
00:53

தொண்டி :ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் மழை நீரை சேகரித்து ஓராண்டு வரை பயன்படுத்தி வருகின்றனர். 100 ஆண்டுகளாக இப் பழக்கம் உள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது எஸ்.பி.பட்டினம். இதையொட்டி கடற்கரை என்பதால், கிணறுகளில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. குடிநீருக்காக ஏங்கும் மக்கள், மழைநீரை சேகரிக்க முடிவு செய்தனர். 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் குடிநீருக்காக தனி அறை கட்டி, அதில் 1,000 முதல் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைத்துள்ளனர். மழை பெய்யும் போது மாடியிலிருந்து கீழே குழாய் மூலம் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கின்றனர். தண்ணீர் கெட்டுப்போகாமல் இருக்க சுட்ட செங்கற்களை தொட்டியில் போட்டு வைக்கின்றனர்.

எஸ்.பி.பட்டினம் ஊராட்சி தலைவர் முகமதுகாசிம் கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு மேலாக இப்பழக்கம் உள்ளது. வீடு கட்டும் போதே மழை நீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கின்றனர். இந்த தண்ணீரை, அடுத்தாண்டு மழை பெய்யும் வரை பயன்படுத்துகின்றனர். அடுப்பு மூட்டி எழும்பும் புகை, மண்பானை வைத்து மூடப்படும். சில மணி நேரம் கழித்து மண்பானையில் மழை நீர் ஊற்றி ஆற வைத்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும். கிருமிகள் வராமல் தடுக்க, சுட்ட செங்கற்கள் போடப்படுகிறது. மழை நீரை வடிகட்டி சமையல், குடிக்க பயன்படுத்தி வருகிறோம். மழை காலங்களில் தேவைக்கு ஏற்ப மழை நீரை சேகரித்துவிட்டு, மீதி தண்ணீரை கிணற்றில் விடுகிறோம், என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanasamy - nagercoil,இந்தியா
25-டிச-201200:25:56 IST Report Abuse
Narayanasamy Hai
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
22-டிச-201216:13:40 IST Report Abuse
ganapathy நம்முடைய பாரம்பரியம் போன்றவற்றில் இது போன்ற விஷயங்கள் கிராமங்களில் பின்பற்றபடுவதை நகரமயமாக்கல் என்று விட்டு விடாமல் அதை பாதுகாத்து மற்றவர்களுக்கும் தெரிவித்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். ஏறி குளங்களை பாதுகாப்போம், மரம் நடுவோம். பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்போம்
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
22-டிச-201215:30:02 IST Report Abuse
Rajalakshmi இதை ஏன் தமிழ் நாடு முழுவதும் மக்கள் செய்யவில்லை ?? Disaster என்று வந்தபின்பு கவலைப்படுவதை தவிர்க்கலாமே ?
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
22-டிச-201212:34:29 IST Report Abuse
மும்பை தமிழன் எல்லா விசயத்தையும் அரசாங்கத்தையே நம்பியே ஏமாற வேண்டாம் இதை மாதிரி நீங்களும் செய்து பாருங்களேன்
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
Kavitha Muruganantham - pattukkottai,இந்தியா
22-டிச-201211:04:47 IST Report Abuse
Kavitha Muruganantham எல்லேரும் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். இந்தவருடம் மழை பொலிவு குறைவு. இந்த முறை தமிழ் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் குடிநீர் பிரட்சணையை தீர்க்க முடியும்.
Rate this:
0 members
1 members
12 members
Share this comment
Cancel
Meenakshi Sundaram - Karaikudi,இந்தியா
22-டிச-201206:51:19 IST Report Abuse
Meenakshi Sundaram அட... முதல்வர் அம்மாவுக்கு ஐடியா கொடுத்தது நீங்கதானா? பாராட்டுக்கள் ராயல் ஊடிவயல் மீனாட்சிசுந்தரம்
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.