ஆரல்வாய்மொழி : திருநெல்வேலி கலந்தமனையில் மாயமான முதியவர் தோவாளையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள கலந்தமனை கோரியூர் சுப்பிரமணிய நாடார் மகன் இளைய பெருமாள் (65). இவர் சில வருடங்களுக்கு முன் உறவினரிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று தோவாளை ரயில்வே ஸ்டேஷன் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் சுப்பிரமணிய பிள்ளை(72), என்பவரின் தென்னந்தோப்பில் முதியவர் உடல் கிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் வந்தது. ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்.ஐ., ரகுராஜன், ஏட்டு ஜாண்கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த சட்டை பாக்கெட்டில் முதல்வர் காப்பீடு திட்ட அடையாள அட்டை இருந்தது. இதுகுறித்து உறவினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை அழைத்து சென்று காண்பித்த போது இறந்து கிடந்தது இளைய பெருமாள் என அடையாளம் காண்பித்தனர். போலீசார் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இளைய பெருமாளுக்கு மூக்கம்மாள்(60) என்ற மனைவியும், செல்வி, ராணி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.