இறுதி தேதி எது?
சென்னை மாநகரில், கேபிள் இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்க, அக்டோபர், 31ம் தேதி வரை, மத்திய அரசு கெடு விதித்திருந்தது."டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ்களை, வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளதால், அடுத்த ஆண்டு, மார்ச், 31ம் தேதி வரை, அவகாசம் வேண்டும்' என, சென்னை ஐகோர்ட்டில், அரசு கேபிள் நிறுவனம் மனு செய்துள்ளது.இதற்கிடையே, டிஜிட்டல் உரிமம் வேண்டி அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பம் செய்து, பல மாதங்களாகியும், டிஜிட்டல் உரிமத்தை, மத்திய அரசு வழங்காமல் உள்ளது.கோர்ட் உத்தரவு:
இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட் கிளையில், தொடரப்பட்ட வழக்கில், அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைவில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. இச்சூழலை சாதகமாக்கிக் கொண்டு, "கேபிள் இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்க, செட்-டாப் பாக்ஸ்களை, இம்மாத இறுதிக்குள் வாங்கிக் கொள்ளுங்கள்; இல்லையேல், கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்படும்' என, சன், "டிவி'யின் கலாநிதி தொடர்புடைய, எஸ்.சி.வி., நிறுவனம்,1,600 ரூபாய்:
செட்-டாப் பாக்ஸ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து, 1,600 ரூபாய், செட்-டாப் பாக்ஸ் கட்டணம் செலுத்துமாறு கூறி வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இலவச, கட்டண சேனல்கள் பெற, 130 லிருந்து, 400 ரூபாய் வரை, செலுத்த வேண்டுமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கேபிள் முன்பணம்:
டி.டி.எச்., சேவைக்கு மாறினால், குடியிருப்பை மாற்றிக் கொண்டாலும், டி.டி.எச்., சேவையையும் உடன் எடுத்துச் சென்று விடலாம் செட்-டாப் பாக்சுக்கு, இந்த வசதி இருக்கிறதா எனத் தெரியவில்லை.மேலும், ஏற்கனவே, கேபிள் இணைப்புக்கு, 1,000 ரூபாய் வரை, முன்பணம் கொடுத்துள்ளோம். இத்தொகையை, செட்-டாப் பாக்ஸ் வாங்கும் போது கழித்துக் கொள்வரா, இல்லை திருப்பிக் கொடுத்து விடுவரா என்பது குறித்து, ஆப்பரேட்டர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர்.கேபிள் இணைப்புக்கு கொடுக்கப்பட்ட முன் பணத்துக்கும், அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே, டிசம்பர் மாத இறுதிக்குள், செட்-டாப் பாக்ஸ்களை வாங்கி விட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும். இவ்வாறு ஜெயந்தி கூறினார்.சட்ட விரோதம்:
"செட்-டாப் பாக்ஸ் வாங்க வேண்டும் என, வாடிக்கையாளர்களை, தனியார் கேபிள் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்' என, அரசு கேபிள் நிறுவன நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் கூறியுள்ளார்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்னமும் அவர்களது குடும்ப ஆட்சி நடக்கிறது என்கிற நினைப்பில் மிதக்கின்றனர். சரியான அடியை தக்க நேரத்தில் கொடுப்பார் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள். மத்தியில் இவர்கள் பதவிக்கு துடிப்பதன் காரணம் புரிந்ததா? இந்த லட்சணத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இவர்களே வெற்றி பெற வேண்டுமாம்..எதற்கு என்பதை மக்கள் புரிந்துகொள்ள இது ஒன்றே சான்று. எச்சரிக்கையாய் இருந்து இந்த குடும்ப தொலைகாட்சிக்கு ஆப்பு வைப்பது ஒன்றே சிறந்த வழி. இன்னமும் மக்களை பிழிந்தெடுத்து வாழவே துடிக்கின்ற செயல் இது.கேவலம்..
சரியான அடி. இன்றுள்ள சூழ்நிலையில் மக்களுக்கு செட் டாப் பாக்ஸ் என்பது ஒரு கூடுதல் மின்சார செலவு, மற்றும் அதன் கட்டணம் ஒரு சுமை. மாண்புமிகு முதல்வருக்கு இது தெரியும். முக்கியமான நிகழ்சிகளின் நடு நடுவே செட் டாப் பாக்ஸ் வாங்கும்படி வற்புறுத்தும் கேபிள் நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு தொலைகாட்சி இல்லாமல் வாழவும் தெரியும். தனியார் நிறுவனத்தை மக்களுக்காக எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது, மக்கள் மீது மாறா பற்று கொண்ட முதல்வருக்கு நன்றாக தெரியும். அவர்கள் சாட்டையை சுழற்றும் முன், சன் நெட் வொர்க் வாலை சுருட்டிக்கொல்வது அதற்கு நல்லது.
எங்கள் பகுதியில் இரவும் பகலும் இடைவிடாமல் ஒவ்வொரு சானலாக ஒளிபரப்பை குறுக்கீடு செய்து சரியாகப் பார்க்கவிடாமல் அடித்து , செட் டாப் பக்ஸ் வாங்குங்க , இல்லாட்டி உங்க கதி அம்போ என மிரட்டாத குறையாக கேபிள் விளம்பரம் செய்கிறது. இதனால் எந்த சானலிலும் ஒரு நிகழ்ச்சியையும் சரியாகப் பார்க்கவே முடியவில்லை.இந்த இடைஞ்சல்லுக்காகவா மாசாமாசம் காசு கொடுக்கிறோம்? இது நுகர்கோர் சட்டப்படி குற்றம் .இது தெரிந்துமே அயோக்கியத்தனம் செய்கிறது இப்பொழுதும் நடப்பது மாறன்களின் காட்டு தர்பார்தானா? அரசின் கடுமையான நடவடிக்கை உடனடித் தேவை
In the name of digitization and modern technology people are being black mailed in a way to switchover beyond their capacity to offer the charges the cable operators demanding. Why should the consumer be compelled to buy something when he is not interested at all. Even if I dont switchover to setup box I should be offered to see the free channels as it is seen now. Will the Govt officials do something for that or Are they also in collision with the money making business and torturing the 'AAM AADHMI'.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.