புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று காலை டில்லியின் முக்கிய பகுதியான இந்தியா கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டனர். ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முற்பட்டபோது, போலீசார் அனுமதி மறுத்தனர்.
கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியபோதும் மறுத்ததால் மாணவ, மாணவிகள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை வீசப்பட்டது. தடியடி பிரயோகமும் நடந்தது. இதனையடுத்து நாலாபுறமும் மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் . போலீசார் மீது மாணவர்கள் கல் வீசித் தாக்கினர். போராட்டக்களம் வன்முறைக்களமாக மாறியது. இதனால் டில்லியில் பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது. தொடர்ந்து அமைதி ஏற்பட்டு மாணவ, மாணவிகள் இன்னும் கலைந்து செல்லாமல் கோஷங்கள் எழுப்பியபடி நிற்கின்றனர். மாலையில் மீண்டும் 6 வது முறையாக போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமுற்றதாக தெரிகிறது. தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
கடந்த வாரத்தில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் இரவில் மருத்துவ மாணவியை கற்பழித்தனர். இதில் சுயநினைவு இழந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். , இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை முற்றுகை :
இன்று இந்தியா கேட் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.
நாராயணசாமி விளக்கம்:
அமைதி காக்க வேண்டுகோள்:
பிரதமர் அவசர ஆலோசனை:
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே பிரதமரை சந்தி்த்து அவசர ஆலோசனை நடத்தினார். பாதுகாப்ப விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மக்களிடம் பேச வேண்டும் :
பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், டில்லியில் உள்ள பெண்கள், குழந்தைகள் ஏன் வயதானவர்கள் கூட தாங்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்கிறார்கள். அதே வேளையில் கற்பழிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தப்பட்டுள்ளது. இளம் பெண்களும், இளைஞர்களும், நாடும், தங்களது பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கிறது. இன்றாவது உங்களது மவுனத்தை கலையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.இதே போல், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தனது மவுனத்தை கலைத்து மக்களிடம் பேச வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கற்பழிப்புக்கு மரண தண்டனையே அளிக்க வேண்டும் ஆனால் இந்தய குற்றவியல் சட்டப்படி அதக பட்சமாக 10 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும் அதலால் மாணவர்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிதர சட்ட பூர்வமாக முயல வேண்டும் அதே சமயம் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதெல்லாம் நடைபெற இயலாத ஒரு விஷயம்
ஒருக்கால் கற்பழிப்புக்கு மரண தண்டனை சட்டம் கொண்டுவந்தாலும் இந்த குற்றவாளிகள் அதன் மூலம் தண்டிக்கப்பட முடியாது அதே டெல்லியில் மழலையர் பள்ளி
மாணவி பள்ளி நிர்வாகியினால் பாலியல் பலாத்காரம் செயப்பட
விவகாரத்தில் யாரும் எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை
அதனால் போராட்டத்தின் நூகதியே சந்தேகம் படவேண்டியுள்ளது
மாணவ சமுதாயத்தி்ன் மீது கை வைப்பது தேன்கூட்டை கலைப்பதற்கு சமம் ஏன் இவ்வளவு பெரிய சம்பவம் குறித்து போராடும் மாணவர்களை பெரிய பதவியில் இருப்பவர்கள் நேரில் சந்தி்த்து அமைதி் படுத்தி்னால் என்ன குடியா முழுகி போய் விடும்.மாணவ,மாணவியர்கள் இந்தி்யா முழுவதும் ஒன்று சேர்வதற்குள் மத்தி்யஅரசு அமைதி்படுத்த வேண்டும்
SARGUNAM..SINGAPORE

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.