திருவாரூர்: திருவாரூரில் விவசாயம் பொய்த்துப்போனதால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் குடவாசலையடுத்த கடம்பங்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் மகன் சக்திவேல் (30). இவருக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து வரும் சக்திவேல், விவசாயத்திற்காகவும், தனது தங்கை திருமணத்திற்காகவும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், விவசாயம் பொய்த்துப்போன கவலையில் இருந்த சக்திவேல், கடனை அடைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், விஷம் அருந்தினார். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பவம் தொடர்பாக எறவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக்தி வேல் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.