சென்னை:காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை வெளியிட்டதைப் போல், தமிழக விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இறுதித்
தீர்ப்பையும், அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்
ஆபத்தான நிலை
இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்று விட்டது. இதன் காரணமாக, காவிரி கரையோர மாவட்டங்கள், மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (21ம் தேதி) நிலவரப்படி, மேட்டூர் அணையில், 8.8 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.
வாழ்வாதாரம்
இதனால், காவிரிக் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதற்காக, பல கட்டமாக முயற்சி செய்து வருகிறோம்.
ஆனால், எங்கள் முயற்சிகளையும் மீறி, காவிரி நீரை தொடர்ந்து தங்கள் தேவைக்காக, கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது.
எனவே, 2007, பிப்ரவரியில், காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பை, காலதாமதமின்றி, அரசிதழில் வெளியிட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று, நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை நடைமுறைப்
படுத்தப் படாமல் உள்ளது.
காப்பாற்ற முடியும்
உடனடியாக அமல்படுத்தும் பட்சத்தில், கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால், குறைந்த அளவு பயிர்களையாவது காப்பாற்ற முடியும்.
கடந்த, 1991, ஜூன் மாதம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவானது, சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனைப் படி, இடைக்கால உத்தரவை எதிர்த்த மனுக்கள் இருந்த போதிலும், அதே ஆண்டு, அக்டோபர் மாதம், அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதே போல், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் உடனடியாக, அரசிதழில் வெளியிட
வேண்டும்.
அறிவுறுத்த வேண்டும்
தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடும்படி, மத்திய நீர்வளத் துறையை அறிவுறுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.