மதுரை:"போலியோ இல்லாத நாடு' என்றசான்றிதழை, 2014ல் இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதற்கு ஏற்ப, போலியோ தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரப் படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்து உள்ளது.
ஒன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டது.மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்ததால், போலியோ ஒழிப்பு நடவடிக்கைக்கு, கை மேல் பலன் கிடைத்தது.போலியோ இல்லாத நாடு என்ற, சான்றிதழை பெற, இந்தியா தயாரான போது, 2011 ஜன.,13ல், மே.வங்காளம் ஹவுராவில் போலியோ பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இதனால், சான்றிதழ் வாய்ப்பு பறிபோனது. இருப்பினும், போலியோ ஒழிப்பு நடவடிக்கையை, இந்தியா துரிதப்படுத்தியது. அதன் விளைவு, போலியோ பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இருந்து, 2012 பிப்.,ல் இந்தியா விடுவிக்கப்பட்டது.
பாக்., ஆப்கான், நைஜீரிய நாடுகள், போலியோ பாதிப்பு பட்டியலில் தொடர்கின் றன. 2014ல், போலியோ இல்லாத நாடு என்ற, சான்றிதழை இந்தியா பெற, அதிக வாய்ப்பு உள்ளது. உலக சுகாதார கூட்டமைப்பு,ஆய்விற்கு பின், அச்சான்றிதழ் வழங்கப்படும்.இடையில், ஓராண்டு மட்டுமே இருப்பதால், போலியோ தடுப்பு நடவடிக்கைகளை,இந்திய சுகாதாரத்துறை துரிதப்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், அடுத்தகட்ட போலியோ முகாம் குறித்த, ஏற்பாடுகளை துவங்க வலியுறுத்தியுள்ளது.சென்னையில், 19ம்தேதி நடந்த, அனைத்து உள்ளாட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளுக்கான கூட்டத்தில், "2014ல் சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு நெருங்கி வருவதால், பணிகளில்கவனம் செலுத்துமாறு' அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும், 2013ம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம், ஜன., 20, பிப்., 24ல் நடக்கிறது. அதற்கான பணியை, உள்ளாட்சிகளை சேர்ந்த சுகாதாரப்பிரிவினர் துவங்கியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.