டில்லி மாணவி கற்பழிப்பு சம்பவம்:விசாரணை நடத்த கமிஷன் அமைக்கிறது மத்திய அரசு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி மூலம், விசாரணை நடத்தப்படும்; கற்பழிப்பு சட்டங்கள் கடுமையாக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

"மருத்துவ மாணவியை கற்பழித்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்குடன், நேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா, தொலைபேசியில் பேசினார்.அப்போது, "மாணவி கற்பழிப்பு வழக்கில், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டதோடு, "பாதிக்கப்பட்ட மாணவியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே சந்தித்துப் பேசினார்.

இதன்பின், அவர் வெளியிட்ட அறிக்கை:


சட்ட திருத்தம்


* அரிதிலும், அரிதான கற்பழிப்பு வழக்குகளில், கூடுதல் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, கிரிமினல் சட்டங்களில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
* டில்லி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்படும். அந்த கமிஷன், இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கும்.
* கற்பழிப்பு குற்றவாளிகளுக்கான தண்டனையை உயர்த்துவதற்கு, சட்டத் திருத்தம் செய்ய, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை.


போலீசார் "சஸ்பெண்ட்':


* ஜனாதிபதி மாளிகை முன், நடந்த போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, போலீசார் எடுத்த நடவடிக்கை பற்றி விசாரணை நடத்தப்படும். இந்த விஷயத்தில், கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது, டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஐந்து போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
* டில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், விரைவில் குற்றப் பத்திரிகை செய்யப்படும். விரைவு கோர்ட் மூலமாக, வழக்கு விசாரணை அன்றாடம் நடத்தப்படும்.


பஸ் உரிமம் ரத்து :


* மாணவி கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்த, பஸ்சின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு சொந்தமான ஒன்பது வாகனங்களின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
* கற்பழிப்பு சம்பவத்தால், பாதிக்கப்பட்ட மாணவி, மீண்டும் நல்ல உடல் நலம் பெற தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும், அரசு அளிக்கும். அவரின் உடல் நிலை தற்போது மேம்பட்டுள்ளது. நடந்த சம்பவம் பற்றி, அவர் தற்போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
* டில்லியில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க, இரவு நேரங்களில், கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படும். அந்த பஸ்களும் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை விட்டு, விலகிச் செல்லாமல் தடுக்க, ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்படும்.
* அரசு பஸ்களில் பணியாற்றும் ஒவ்வொருவரும், அடையாள அட்டைகள் அணிவது உறுதி செய்யப்படும். வேலைக்கு சென்று விட்டு, பொழுது போக்கு இடங்களுக்கு சென்று விட்டு, பெண்களும், குடும்பத்தினரும் திரும்பும் பாதைகளில், போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
23-டிச-201218:55:44 IST Report Abuse
p.saravanan நம்மை பெற்றேடுததும் பெண்ணே, நம்முடன் பிறந்த சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் நம் நெஞ்சம் எவ்வளவு துடி துடிதிருக்கும். "நெஞ்சு பொறுக்கதில்லையே இந்த நிலை கெட்ட மனிதணெய் நினைத்து ". இயற்கை நமக்கு கொடுத்த ஒரு சிறிய இன்பத்தை இப்படி கொச்சை படுத்த கூடாது. பெண்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.அதுவும் இலைமறைவு காயாக இருக்க வேண்டும். இந்த காமகொடூரங்களுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். கஷ்மீர் கல்லுரி மாணவிகள் கூறியதை போல வாழ் நாள் முழுவதும் நினைத்து பார்க்க கூடாத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kodhai - Vaduvoor,இந்தியா
23-டிச-201215:10:15 IST Report Abuse
Kodhai எதற்கு இந்த வீண் வேலை. குற்றம் செய்தவர்கள் ஒப்புகொண்டார்கள், , குற்றம் செய்ததும் நிரூபனமாயிற்று ..எதற்கு விசாரணை கமிஷன் .. தண்டனையை தள்ளி போடவா? குற்றவாளிகளை தப்பிக்க விடவா?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-டிச-201214:10:05 IST Report Abuse
g.s,rajan கமிட்டி ,கமிஷன் பலன் தராது . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
23-டிச-201212:45:29 IST Report Abuse
mangai ''அரிதினும் அரிதான கற்பழிப்பு வழக்குகளில்''- இதன் அர்த்தம் புரியவில்லை...
Rate this:
Share this comment
mangai - Chennai,இந்தியா
23-டிச-201213:13:26 IST Report Abuse
mangaiலேட்டாக தான் புரிகிறது.. சட்டம் இயற்றும்போதே அதில் ஒரு ஓட்டையையும் போட்டு வைத்தால் தானே எதிர்காலத்தில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு பயன்படும்.....
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
23-டிச-201212:10:43 IST Report Abuse
Rajasekaran Palaniswamy டில்லி பல்கலைகழக வளாகத்தில் ஓம்னி வேனை தொடர்ந்து ஓட்டிக்கொண்டே கற்பழிப்பு செய்தவர்களை ஏன் இன்னும் பிடித்து தண்டிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
23-டிச-201211:37:23 IST Report Abuse
Hari Doss இது போன்ற அரிதிலும், அரிதான கற்பழிப்பு வழக்குகளில், கூடுதல் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, கிரிமினல் சட்டங்களில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். என்றுதான் சொல்லப் பட்டு உள்ளது. அது என்ன இது போன்ற என்ற சொல் நம்மைக் குழப்புகிறது. பச்சிளம் குழந்தைகளையும் கூட இப்போது எல்லாம் காமாந்தகர்கள் விட்டு வைப்பதில்லை. ஆகவே அனைத்து கற்பழிப்பு வழக்கிலும் தூக்குத் தண்டனை அளிக்க வேண்டும். V.கோபால்சாமியைப் போன்றோர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் நடப்பில் ஆக்க வேண்டும். கண்டிப்புடன் விரைவில் வழக்கை முடித்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kannan Krishnan - Kuala Lumpur,மலேஷியா
23-டிச-201211:03:34 IST Report Abuse
Kannan Krishnan indian goverment cheated in our people and student,,,,,,what uses to formed enquiry commetion?,,,,waste our peple money only,,,,,,
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
23-டிச-201210:46:23 IST Report Abuse
ஆனந்த் நாட்டு மக்கள் பிரச்சினைக்கும் கமிஷன்.. அவர்கள் கட்சி நடத்தவும் கமிஷன் ()... நல்ல காங்கிரஸ் அரசு
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
23-டிச-201208:06:46 IST Report Abuse
Kankatharan  தலைநகரத்தில் ஓடும் பஸ்ஸில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். இந்தச்செய்தி அட்சரசுத்தமாக அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது. சட்டப்படி அந்த காமுகனை என்ன செய்யவேண்டுமோ அதை செய்வதுவிட்டுவிட்டு "கொமிஷன்" அமைக்கப்போகிறார்களாம் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கற்பழிப்பில் ஈடுபட்டவன் அரசியல் வியாதியின் மகனாகத்தான் இருப்பான். அரசியல் செல்வக்கு இல்லாதவன் கற்பழித்திருந்தால் மறுநாள் என்கெளண்டர் செய்யப்பட்டிருப்பான் அவன் அரசியல் பின்னணியில் உள்ளவனாக இருந்தால் "கொமிஷன்" அமைத்து காப்பாற்றப்படுவான்.
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
23-டிச-201207:13:31 IST Report Abuse
T.R.Radhakrishnan பிரச்சினை என்றால், அதன் மீது கமிஷன் போடு, இல்லை என்றால் கல்லை போடு.. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்