காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுமா? முதல்வர் கடிதம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை வெளியிட்டதைப் போல், தமிழக விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இறுதித் தீர்ப்பையும், அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்

இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்று விட்டது. இதன் காரணமாக, காவிரி கரையோர மாவட்டங்கள், மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (21ம் தேதி) நிலவரப்படி, மேட்டூர் அணையில், 8.8 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.இதனால், காவிரிக் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதற்காக, பல கட்டமாக முயற்சி செய்து வருகிறோம்.ஆனால், எங்கள் முயற்சிகளையும் மீறி, காவிரி நீரை தொடர்ந்து தங்கள் தேவைக்காக, கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது.

எனவே, 2007, பிப்ரவரியில், காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பை, காலதாமதமின்றி, அரசிதழில் வெளியிட வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று, நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தப் படாமல் உள்ளது.

உடனடியாக அமல்படுத்தும் பட்சத்தில், கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால், குறைந்த அளவு பயிர்களையாவது காப்பாற்ற முடியும். 1991, ஜூன் மாதம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவானது, சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனைப்படி, இடைக்கால உத்தரவை எதிர்த்த மனுக்கள் இருந்த போதிலும், அதே ஆண்டு, அக்டோபர் மாதம், அரசிதழில் வெளியிடப்பட்டது.அதே போல், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் உடனடியாக, அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடும்படி, மத்திய நீர்வளத் துறையை அறிவுறுத்த வேண்டும்.இந்த விஷயத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR N - Vellore,இந்தியா
23-டிச-201212:36:05 IST Report Abuse
SUDHAKAR N திரு.மரியா அவர்களே,நாவடக்கம் தேவை. உங்கள கருத்துக்கள் தி.மு.க துரோகிகளுக்கு சாதகமாக இருப்பதை நினைத்து வேதனை படுகிறோம்.இன்று உலகளவில் தமிழன் தலை குனிந்து நிற்கிறான். நீங்களும் ஒரு தமிழன் தானா...? இன்று வரை மத்திய அரசாலோ,தி.மு.க வாளோ தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை என்றால் இன்று தமிழகம்.... கேள்வி குறி தான்...உங்களை போன்ற கருப்பு ஆடுகள் இருக்கும் வரை...எங்களின் நிலைமை...கஷ்டம் தான்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
23-டிச-201215:44:05 IST Report Abuse
Pannadai Pandianசபாஷ்....
Rate this:
Share this comment
23-டிச-201219:40:15 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்...சுதாகரன் அவர்களே ....//// முற்றிலும் உண்மை ...
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
23-டிச-201211:41:06 IST Report Abuse
Shaikh Miyakkhan எப்பொழுது கேபிள் டிவி விசயத்தில் ஒரு அரசு விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கம்மால் தனியார் விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தார்களோ அப்பொழுதே புரிந்து கொள்ளவேண்டும் . மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது சுத்த வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
23-டிச-201211:36:57 IST Report Abuse
Shaikh Miyakkhan கடிதம் எழுதுவதால் ஒன்றும் பிரயோசனம் இல்லை ஏன்? கூட்டணி தர்மத்தால் மண் சிங் கால் ஒன்றும் செய்ய இயலாது . பவர் இல்ல பிரதமர் அவர்க்கு லெட்டெர் எழுதுவதால் பலன் ஒன்றும் இல்லை ஏன் ?என்றால் அரசு கேபிள் டிவி க்கு டிஜிட்டல் அனுமதிக்கு அரசு விண்ணப்பித்தும் அரசுக்கு அனுமதி அளிக்காமல் 9 தனியார் டிவி க்கு அனுமதி அளித்து இருப்பதிலேருந்து தெரிந்து கொள்ள வேண்டியது தான் இந்த பிரதமருடைய பவர் என்ன வேண்டும் ? அவருக்கு முட்டு கட்டை போட்டு இருப்பதனால் கடிதம் எழுதுவது வேஸ்ட் .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-டிச-201210:24:51 IST Report Abuse
villupuram jeevithan இது வரை வாளா இருந்த வாசன், கருணா போன்றோர் உச்சநீதிமன்றம் குட்டலுக்கு பிறகு இப்போது முயற்சிக்கிறார்கள். எனவே கிடைத்துவிடும், அடுத்து பாராட்டுவிழா தான் பாக்கி.
Rate this:
Share this comment
Cancel
23-டிச-201206:52:18 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் எந்த இதழில் வெளியிட்டாலும் கர்நாடகா வழிக்கு வராது. பன் மாநில நதிகள் தேசீயமயமாக்கப்பட்டு ஒரு தனாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்ப்படும்வரை இதற்குத் தீர்வில்லை
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-டிச-201211:14:40 IST Report Abuse
villupuram jeevithanஅது மத்தியில் ஆட்சி மறிய பிறகு தான் நடை பெறும். அதுவரை கருணா தடைக்கல்லாக இருப்பார்....
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
23-டிச-201216:30:22 IST Report Abuse
s.maria alphonse pandianபிஜேபி ஆட்சிக்கு வந்தால் நதிகளை தேசியமாக்குவோம் என அறிவிப்பார்களா?மாட்டார்கள்...அவர்களுக்கு கர்நாடகாவே முக்கியம்..அங்கேதானே ஆட்சியை பிடிக்கணும்......
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
23-டிச-201206:14:15 IST Report Abuse
N.Purushothaman தமிழகதிற்கு தற்போதைய தேவை தொலை நோக்கு பார்வை கொண்ட நீர் வழித்தடம் மற்றும் மின் வழித்தடம்...இதை செய்தால் தான் இரண்டு விஷயத்திலும் நாம் சுயசார்பு அடைய முடியும்.....மற்றவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய சூழ்நிலையும் வராது....அதே போல் கடல் நீரை சுத்திகரிப்பு செய்து அதை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்றலாம்....
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
23-டிச-201205:20:49 IST Report Abuse
s.maria alphonse pandian காவிரி நடுவர் தீர்ப்பு நிச்சயம் வெளியிடப்படும் என்பது கலைஞரின் எம்.பிக்கள் பிரதமரை சென்று சந்தித்த போதே உறுதியாகிவிட்டது....ஜெயாவின் கடிதங்கள் வழக்கம்போல செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று இருக்கும்...
Rate this:
Share this comment
Deva - Sivagangai ,இந்தியா
23-டிச-201215:17:02 IST Report Abuse
Devaஇதுவரை கலைஞரின் எம்.பிக்கள் என்ன புடிங்கிகொண்டு இருந்தார்கள்? 2007 .இல் தி.மு.க இந்த மத்திய அரசில் தானே இருந்தது. அப்போது ஏன் இந்த தி.மு.க இதற்க்கான முயற்சியை எடுக்கவில்லை? தி.மு.காவும் , காங்கிரசும் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்யமாட்டார்கள். ...
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
23-டிச-201205:05:38 IST Report Abuse
Vaishnavi.Ne உண்மையில் தமிழக மக்களின் மீது அக்கறை இருந்தால் காங்கிரஸ் கட்சியிலுள்ள எம்பிக்களும், திமுக எம்பிக்களும் பிரதமரிடம் பேசி உடனடியாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் டிசெம்பர் 2012 இறுதிக்குள் சுப்ரீம் கோர்ட் சொன்னபடி வெளியிட ஏற்பாடு செய்யவேண்டும். சும்மா வீணாக அறிக்கை விட்டு பிரயோஜனமில்லை. அப்படி வெளியிடுவதில்லை என்று பிடிவாதம் பிடித்தால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முன்வர வேண்டும்.
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
23-டிச-201211:43:55 IST Report Abuse
Hari Dossதமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் தானே நீங்கள் கூறியது போல் நடப்பார்கள் திமுக விற்கு கருணாவின் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளது அதே போல் காங்கிரஸ் எம்.பி. காளுக்கு நேரு குடும்பத்து மக்கள், பேரக் குழந்தைகள் மீது அபரி மித மான அக்கறை உள்ளது....
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
23-டிச-201216:31:50 IST Report Abuse
s.maria alphonse pandianஏற்கனவே திமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்து கூறியுள்ளார்கள்..எனவே நிச்சயம் அரசிதழில் வெளியிடப்படும்..ஐயமில்லை......
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
23-டிச-201200:46:04 IST Report Abuse
Thangairaja இப்படியே கடிதம் எழுதி காலத்தை கடத்தி கொண்டிருக்க வேண்டியது தான். ஏற்கனேவே டெல்டா விவசாயிகள் ஒருவர் பின் ஒருவராக மடிந்து கொண்டிருக்கிறார்கள். உரிய காலத்தில் துரித நடவடிக்கை எடுக்காமலிருந்து விட்டு குத்துது, குடையுது என்றால்....பாதிக்க போவது யார்......?அயல்தேசம் இலங்கை விஷயத்தில் கலைஞர் கடிதம் எழுதியதை குறை சொன்னவர்கள்.....சொந்த மண்ணில் மக்கள் படும் அவதி களைய எதிர்கட்சிகளுடன் இணைத்து பிரதமரை சந்தித்து மத்திய அரசை நிர்ப்பந்தித்தால் என்ன..?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-டிச-201203:24:58 IST Report Abuse
தமிழ்வேல் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு இப்பது போக முடியாது...அதுக்கு முன்னாடி..குஜராத்துக்கு முதல்வர் பதவி பிரமாணத்துக்கு போகனும்......
Rate this:
Share this comment
யமதர்மன் - Chennai,இந்தியா
23-டிச-201206:44:43 IST Report Abuse
யமதர்மன்கடிதம் எழுத அவசியம் ஏற்படும்படியாக ஏன் ஒரு பிரதமர் நடந்து கொள்ள வேண்டும். அவர் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்தானே. எஸ். எம் கிருஷ்ணா கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசும் பொது அதை ஏன் அவர் கண்டிக்க வில்லை. பல ஆண்டுகளாக தமிழனுக்கு ஒரே ஆதரவு நான்தான் என்று முழங்கி வரும் கட்டுமரம் ஏன் அரசு இதழில் வெளியிடப்படாதது குறித்து அக்கறை காட்டவில்லை. எல்லா உண்மைகளும் எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் எதிர்கட்சியாக கூட வரமுடியவில்லை. இது இமாச்சல்லில் பி ஜே பி தோல்வியை பற்றி நக்கல் அடிக்கிறது. ஈயத்தை பார்த்து இளித்ததாம் துரு பிடித்த தகரம். . ...
Rate this:
Share this comment
23-டிச-201206:55:59 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் சோனியா அரசு மஞ்சத்துண்டின் தூண்டுதலால் ,(லோக் சபா தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ) கர்நாடகா பக்கம் சாய்ந்துள்ளது . அவர்களுக்கு கடிதம் எழுதுவது அவர்களது கெட்ட எண்ணத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவே . MP தேர்தலில் தமிழர் துரோகக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் இப்பது வருந்தி என்ன பயன்?. மற்றபடி 2 மணிநேர உண்ணாவிரத நாடகங்கள் ஆடாதது நேர்மையின் வெளிப்பாடுதானே ? ...
Rate this:
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
23-டிச-201212:01:25 IST Report Abuse
Kuwait Tamilanநொண்டி சாக்கு எல்லாம் சொல்லபடாது......
Rate this:
Share this comment
Cancel
23-டிச-201200:23:48 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... காவிரி நீர், முல்லை பெரியார், கச்சதீவு, தனி ஈழம் என தமிழர்களின் உரிமைக்காக உண்மையாக போராடும் ஒரே தலைவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மட்டுமே..///
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
23-டிச-201216:33:29 IST Report Abuse
s.maria alphonse pandian2012 ம் ஆண்டு முடிவடையும் வேளையில் இந்த ஆண்டின் மிகப்பெரும் ஜோக்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்