Advertisement
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், "ஐவருக்கு' தூண்டில்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2012,23:50 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 23,2012,06:13 IST

சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்க வைக்கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதை தடுக்கவும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, ஆளுங்கட்சி சார்பில் அடுத்த தூண்டில் வீசப்பட்டுள்ளது.இதில், ஐந்து பேர் சிக்கியுள்ளதால், விரைவில் அவர்கள், தங்கள் தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக, கோட்டையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபா எம்.பி., தேர்தல், அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தே.மு.தி.க.,விற்கு, 25 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 10 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் உள்ளன. ஒரு ராஜ்யசபா எம்.பி., தேர்வுக்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை. அந்த அடிப்படையில்,தே.மு.தி.க.,வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரித்தால், ஒரு எம்.பி., பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இந்த வாய்ப்பு, தே.மு.தி.க.,வுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஆளுங்கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது. தே.மு.தி.க.,வின் ராஜ்யசபா எம்.பி., கனவை தகர்க்கும் வகையில், தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்கள் சிலருக்கு தூண்டில் வீசப்பட்டுள்ளது.அதில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் சிக்கியுள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.,விலிந்து, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், தங்களது தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.அப்போது, தே.மு. தி.க.,வுக்கு, 20 எம்.எல். ஏ.,க்களின் ஓட்டுகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. ராஜ்யசபா எம்.பி., தேர்தலின்போது, கட்சி கொறடா உத்தரவுப்படி, ஓட்டளிக்க வேண்டும் என்றாலும், ஓட்டுப்பதிவு முறை, ரகசியமாக நடப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டளித்தார்கள் என்பதை கண்டறிய முடியாது.

எனவே, மேலும் ஐந்து தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்களை இழுப்பதன் மூலம், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தே.மு.தி. க.,விற்கு இடமில்லாத நிலையை ஏற்படுத்த ஆளுங்கட்சி திட்டமிட்டுஉள்ளது.ஏற்கனவே, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய நான்கு எம்.எல்.ஏ.,க்க ளுக்கு, கிடைத்துள்ள வரவேற்பு, இதர தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்களுக்கிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.மேலும், தொடரும் அவதூறு வழக்குகளால், மிரண்டு போயுள்ள எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சியிடம் சரண்டராவதே, தப்பிப்பதற்கு வழி என்ற எண்ணம் ஏற்பட்டுஉள்ளது. இதை, சாதகமாக பயன்படுத்தி, அவர்களை வளைக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளது என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.

- நமது நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (51)
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
23-டிச-201216:59:24 IST Report Abuse
Aboobacker Siddeeq ஐந்து மட்டும் போதாது, இருக்கும் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அதன் தலைவர் நீங்கலாக அனைவரும் இப்போதே வளைத்து போட்டு விடுங்கள். அது தான் நல்லது... இல்லலை என்றால் தி.மு.க.வுடன் கை கோர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒரு கை பார்க்க இருக்கிறாராம்... விரைவாக செயல்படுங்கள்...
Rate this:
13 members
0 members
12 members
Share this comment
K.vijayaragavan - chennai,இந்தியா
23-டிச-201215:06:25 IST Report Abuse
K.vijayaragavan ஜெயாவால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் குறைவே. இருந்தாலும் அதில் முக்கியமானது ராமாதாஸ், வைகோ போன்றவர்களை அரசியலில் அநாதைகளாக்கியது அதே போல் இப்போது விஜயராஜையும் அந்த லிஸ்டில் சேர்க்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் தேமுதிக காலியாகிறதோ அது தமிழ்நாட்டுக்கு நல்லது. விஜயராஜ் போன்ற அரசியல் வியாபாரிகள் அட்ரஸ் இல்லாமல் போவது அரசியலுக்கே நல்லது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இது நடக்க வேண்டும். இது ஜெயாவுக்கும் நல்லது.
Rate this:
17 members
0 members
20 members
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
23-டிச-201214:33:22 IST Report Abuse
saravanan இதில் காட்டும் முனைப்பை கொஞ்சம் மின்சாரத்திலும் ஜெயா காட்டினால் தமிழகம் உருப்படும்.... இதை செய்வதற்குத்தான் மக்கள் ஜெயாவிற்கு ஓட்டு போட்டார்களா???
Rate this:
11 members
0 members
26 members
Share this comment
Pats - Coimbatore,இந்தியா
23-டிச-201213:58:38 IST Report Abuse
Pats எதிரிகளை வளரவிடாமல் செய்வதும், முடிந்தால் அழித்து ஒழிப்பதும் அரசியல் சாணக்கியம். ஜெய இவ்வாறு செய்வது அல்லது செய்ய முயற்சிப்பதில் எந்த தவறும் இல்லை. அரசியல் ரீதியாக சரியானதே.
Rate this:
18 members
0 members
6 members
Share this comment
muthu Rajendran - chennai,இந்தியா
23-டிச-201213:32:55 IST Report Abuse
muthu Rajendran திமுக ஆட்சியில் மதிமுக எம் எல் ஏக்களை இழுத்தது மாதிரி தேதிமுகவை கரைக்க பார்கிறார்கள். அவர்களாவது மீண்டும் இடைத் தேர்தலை சந்தித்து மீண்டும் எம் எல் ஏக்கள் ஆனார்கள். ஆனாலும் பொதுத் தேர்தலில் திமுக அதற்கு உரிய விலையை தரவேண்டியதாயிற்று . அதே தான் இப்போதும் நிகழும். நன்கு எம் எல் எ க்களை தேதிமுகவிடம் இருந்து இழுத்து ஒரு ராஜ்ய சபா உறுப்பினரை வேண்டுமானால் பெறலாம். வரும் பொது தேர்தலில் அதற்காக எத்தனை லோக் சபா இடங்களை கோட்டை விட போகிறார்களோ ?
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
maravan - dublin,அயர்லாந்து
23-டிச-201213:23:45 IST Report Abuse
maravan தமிழகம் இவர்களிடம் மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறது...தமிழக மக்கள் எப்பொழுது விழிப்புணர்வு பெறுகிறார்களோ அப்போதுதான் தமிழகம் முன்னேறும்...மறவன்.
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
meekannan - Chennai,இந்தியா
23-டிச-201211:52:03 IST Report Abuse
meekannan ஐந்து எம்.எல்.ஏ என்றால் யாரு அன்று சபாநாயகரிடம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று ஐந்து பெயர் பட்டியலை கொடுத்தவர்களா? புரியுதா உங்களுக்கு?
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-டிச-201210:26:58 IST Report Abuse
villupuram jeevithan இந்த ஐந்து பேருக்கும் தொகுதி வளர்ச்சியில் இவ்வளவு அக்கறை இருப்பதை பார்த்து புல்லரிக்குது, விரைவில் மீதம் இருப்போருக்கும் தொகுமீது பற்று வரவேண்டாமோ?
Rate this:
4 members
0 members
17 members
Share this comment
Nava Mayam - New Delhi,இந்தியா
23-டிச-201209:56:06 IST Report Abuse
Nava Mayam மாற்றான் தோட்டத்து களையும் மண்டியிடும்....
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-டிச-201216:58:10 IST Report Abuse
தமிழவேல் களைகளே மண்டிப்போனால் இலைகளுக்கு நல்லதல்ல ......
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
23-டிச-201209:18:28 IST Report Abuse
GUNAVENDHAN அண்ணா தி.மு.க , முன்னாள் அமைச்சர்களையும், முன்னாள் சட்டமன்ற உறுபினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுபினர்களைஎல்லாம் தன் கட்சியில் சேர்த்து , தான் தான் என்னவோ அரசியல் சாணக்கியர் போல காட்டிகொண்டார் ஆரம்பத்தில். மற்ற கட்சியில் இருந்து வரும் அரசியல் அனாதைகளைஎல்லாம் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு அப்போது எரிச்சல் படுத்தியவருக்கு, இப்போது திருப்பி தருகிறார்கள், வாயை மூடிக்கொண்டு வந்ததை அனுபவிக்கவேண்டியதுதான். இப்போது அய்யய்யோ , என்று அலறுவதில் அர்த்தமேயில்லை. விஜயகாந்த் முன்பு செய்ததை , இவர்கள் இப்போது செய்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
Rate this:
38 members
1 members
28 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
23-டிச-201211:17:07 IST Report Abuse
Sundeli Siththarசரியான வார்த்தை......
Rate this:
9 members
0 members
8 members
Share this comment
meekannan - Chennai,இந்தியா
23-டிச-201211:43:57 IST Report Abuse
meekannanநீங்க மிரட்டவில்லை தானே?...
Rate this:
1 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.