New technique to save money | "ஊழல்' செய்து சம்பாதித்ததை காப்பாற்ற புது ஐடியா| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (15)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழக போலீசில் ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் பலர், ஓய்வு பெற சில ஆண்டு, மாதம் இருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிரான்ஸ்பர் கேட்டு காத்திருப்பது தெரிய வந்துள்ளது. தாங்கள் செய்த ஊழலை மறைத்து, கடைசி நேரத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக, இந்த முடிவுக்கு போலீஸ் அதிகாரிகள் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக போலீசில் இன்றைய காலக் கட்டத்தில், நேர்மையை விரும்பும் அதிகாரிகளை தேடிக் கண்டு பிடிக்கும் நிலையே காணப்படுகிறது. அப்படியே நேர்மையாக இருந்தாலும், உயர் அதிகாரிகள், வசூல் டார்க்கெட் கொடுப்பதால், கை நீட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுபவர்களும் உண்டு.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களே பதவிகளை அலங்கரிப்பர். கடந்த ஆட்சியின் போது, உயர் பதவிகளை வகித்தவர்கள், மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத துறைகளுக்கு தூக்கி அடிக்கப்படுவது வாடிக்கை.

இந்நிலையில், தமிழக போலீசில், தற்போது லஞ்ச ஒழிப்பு துறையை தேர்வு செய்வதில், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., மத்தியில் ஆர்வம்

அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியிடம் ஒதுக்கக்கோரி விண்ணப்பம் அளித்துள்ளவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.கடந்த, 2012 ஜனவரி மாதத்தில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணி மாற்றம் செய்யக் கோரி, 35 இன்ஸ்பெக்டர்கள், 50 டி.எஸ்.பி.,கள், 15 ஏ.டி.எஸ்.பி.,க்கள் மட்டும் விண்ணப்பம் கொடுத்து காத்து இருந்தனர்.டிசம்பர் முதல் வாரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 52 இன்ஸ்பெக்டர்கள், 75 டி.எஸ்.பி.,கள், 31 ஏ.டி.எஸ்.பி.,க்கள் என, காத்திருப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணி வழங்க கோரி விண்ணப்பித்துள்ளவர்களில், 30 முதல், 50 சதவீதத்தினர் ஊழலில் கொடி கட்டி பறந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், கடந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக செயல்பட்டவர்கள், தாமாக முன்வந்து, லஞ்ச ஒழிப்புத்துறை, உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணி மாற்றம் பெற்றுச் செல்வது வாடிக்கை. ஆனால், சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கோரி விண்ணப்பித்துள்ளவர்களில், பலர் தங்களின்

Advertisement

அதிகார பலத்தை பயன் படுத்தி, கோடி, கோடியாக கொட்டி குவித்துள்ளவர்கள். இவர்கள் ஓய்வு பெறுவதற்கு, சில ஆண்டு, சில மாதம் இருக்கும் நிலையில், கடைசி காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசின் வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது; நிம்மதியாக பணி ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக, இந்த துறையை தேர்வு செய்கின்றனர்.

அந்தவகையில் லஞ்ச ஒழிப்புத்துறையை விரும்பி கேட்பவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களின் போலீஸ் துறை ஜாதகத்தை ஆராய்ந்து வருகிறோம். சேலம் மாநகரில் உதவி கமிஷனராக உள்ள ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையை வழங்க கோரி விண்ணப்பித்தார்.அவரது நடவடிக்கை பற்றி விசாரணை நடத்திய போது, அவருக்கு ஓய்வு பெற, 15 மாதமே உள்ளது. தான் சுருட்டியவற்றை எவ்வித சிரமம் இன்றி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இந்த துறையை கேட்பது தெரிய வரவே, அவரின் மனுவை நிராகரித்துள்ளோம். தற்போது வரை, விண்ணப்பித்துள்ளவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deen - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201211:50:31 IST Report Abuse
Deen அப்போ , இருக்குற டிபாட்மண்ட்லயெ போஸ்டிங் போடுறதுக்கு அதிகமா கல்லா கட்றது லஞ்ச ஒழிப்பு துறைதான்னு சொல்லுங்க ....
Rate this:
Share this comment
Cancel
Loosu payabula - chennai,இந்தியா
24-டிச-201208:15:53 IST Report Abuse
Loosu payabula அப்ப முதலில் லஞ்ச ஒழிப்பு துறைய ரைட் பண்ண வேண்டியது தானே தனக்குள்ளேயே திருடன வெச்சுகிட்டு வேற எங்கயோ தேடுறத என்னநு சொல்ல.. வடிவேலு சொல்ல மாதிரி லுச்சா தனமால இருக்கு திருடன புடிக்க போலீஸ், பார்த்தா போலீஸ் குள்ளேயே திருடன், அந்த திருடன வழிநடத்த அரசியல்வாதிங்ர கொள்ள கூட்ட தலைவன்.
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
24-டிச-201201:44:20 IST Report Abuse
Vasu Murari லயன் டாக்டர் சேகர் அவர்களின் 'புலம்பல் பதிகம்' மிகவும் அருமையாக உள்ளது. அவர் சொன்னதுபோல் (இந்தியாவில்) ஒருவன் உயிருடன் இருக்கும்வரை சாராயம் குடித்து சந்தோஷமாக சாவதுதான்தமிழ் நாட்டில் சாமான்யனுக்கு அழகு. கற்பனையில் கூட (நாட்டை) சரி செய்ய முயற்சிப்பது வளைந்த நாய் வாலை நேராக்கும் முயற்சிக்கு ஒப்பாகும்.
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
23-டிச-201219:47:01 IST Report Abuse
Cheenu Meenu அதிகாரம் கைக்கு வந்தாலே அள்ளி சூருட்டத்தான் தோணுமோ? பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்படியோ அதையே பின்பற்றி அதிகாரிகளும் அலைகிறார்கள். பிரதமரும், மாநில முதல்வர்களும் நடுநிலை(செங்கோல்) தவறினால் அதிகாரிக்களுக்கு பயம் விட்டுத்தான் போகும். மன்னன் (மந்திரிகள்) எவ்வழி, அரசு அதிகாரிகள் அவ்வழி. இதில் இருவேறு கருத்துக்களுக்கும், சமாதனம் செய்து கொள்வதற்கும் இடமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
23-டிச-201218:22:19 IST Report Abuse
Ashok ,India சம்பாதித்த வரையில் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல. ஒவ்வரு சட்டம் ஒழுங்கு டி. எஸ். பி களின் ஒய்வு பெறும் மூன்று மாதத்திற்கு முன் லஞ்ச ஒழிப்பு துறையின் அனுமதி பெற்ற பின்னரே ஒய்வு ஊதியம் மற்றும் இதர பண பிடிதங்களை அரசு வழங்க வேண்டும். மேலும் ஓய்வுக்கு பின் அவர்களது சொத்து மற்றும் பண பரிமாற்றத்தை கண்காணிக்க தனி பிரிவு உருவாக்கிட வேண்டும். தற்போது பதவியில் (சப் இன்ஸ்பெக்டர் முதல்) இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் சொத்து பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியமாக விசாரித்தால் தமிழ்நாட்டு காவல் துறைக்கு நல்ல காலம் பிறக்கும். போலீஸ் துறையினரின் சொத்துக்களை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும். ஒய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
23-டிச-201215:21:00 IST Report Abuse
Er. S. ARJUNAN அய்யா நம்ம எவ்வளவு தான் கஷ்டப்பட்டு பிரச்னைகளை வெளியே கொடுவந்தாலும் அரசாங்கம் கண்டுக்க மாட்டேன்கிறது. திருடனை கையும் களவுமாக பிடித்து கொடுத்தது போல் குற்றம் செய்பவனி விவரமாக பத்திரிகைகள் காட்டி கொடுத்தும் நோ யூஸ்...?? வாழ்க ஊழல் நாயகம்
Rate this:
Share this comment
Cancel
Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா
23-டிச-201214:24:26 IST Report Abuse
Abdul Khader When it is obvious that the corrupted police officers wants to join anti-corruption department, why action should not be taken against them ? Government job is a MAHARAJA JOB and especially police job is a job of protecting public which will give satisfaction to their mind and Government has given many benefits for their service. Apart from all of these, still they are taking bribe which is really wounding us.
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
23-டிச-201213:11:23 IST Report Abuse
Mustafa முதல் கோணல் முற்றும் கோணல், டொனேசன் கொடுத்து எல் கே ஜி சீட் வாங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது வூழல் வொவ்வொரு குடிமகனும் லஞ்சம் வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று தீர்மானிக்கும்வரை எந்த கொம்பனாலும் வூழலை அழிக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
23-டிச-201212:12:08 IST Report Abuse
Babu. M மக்கள் அனைவர்க்கும் ஒரு உண்மை உங்களுக்கும் தெரிந்த விஷயம் தான் இந்த நாட்டில் இருந்து லஞ்சம் ஊழலை ஒழிக்க முடியாது தலையில் இருக்கும் பேனை தான் ஒழிக்க முடியும் தலையை அழிக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
23-டிச-201210:15:53 IST Report Abuse
Krish ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த காவல் துறை அதிகாரிகளின் ராஜாங்கம் மட்டும் அப்படியேதான் தொடருகிறது....காவல் துறை ஓரளவாவது சீரடைய வேண்டும் என்றால் ஜெயலலிதா குறைந்த பட்சம் ஒரு பத்து ஆண்டுகளாவது தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டியது அவசியம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.