சென்னை: பெண் வழக்கறிஞரின் கணவரை தாக்கியதாக, போலீசார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக, "பிராக்டீஸ்' செய்பவர், பர்வீன். ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு: என் கணவர், முகமது இக்பால், புதுக்கோட்டையில், கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். ஆலங்குடி சாலையில், காரை நிறுத்தி விட்டு, காபி குடிக்க சென்றார். அப்போது, ரோந்து வாகனத்தில் வந்த, கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த, ஐந்து போலீசார், என் கணவரிடம் விசாரணை நடத்தினர். அவரை தாக்கினர். மதம், ஜாதி பற்றி, கேள்வி கேட்டனர். என் கணவரை தாக்கிய போலீசார் மீது, வழக்குப் பதிவு செய்ய, புதுக்கோட்டை, எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும். 10 லட்சம் ரூபாய், நஷ்டஈடு வழங்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன், விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில், சம்பவம் குறித்து, கணேஷ் நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, புகாரை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக் கோரி, பர்வீன், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கணேஷ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "புதுக்கோட்டை, தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும், மனுதாரரின் கணவரிடம் இருந்து, வாய்மொழியாக புகார் பெறப்பட்டு, நான்கு போலீசார் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது. சம்பவத்தில், போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், இந்த வழக்கை, கணேஷ் நகர் போலீஸ் விசாரிப்பது, முறையாக இருக்காது. எனவே, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, இந்தப் புகாரை மாற்றுமாறு, ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது. ஜன., 7ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர், அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.