எட்டயபுரம்:எட்டயபுரத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ அய்யலுசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். எட்டயபுரம் தாலுகா உட்பட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். மழை சரியாக பெய்யாததால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நில வரி தீர்வை கூட்டுறவு மற்றும் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்காச்சோளம், உளுந்து, பாசிபயிறு வகைகள், கம்பு போன்ற பயிர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.பத்தாயிரம் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இன்று(டிச. 20) கலெக்டர் தலைமையில் நடைபெற இருக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கவும், டிசம்பர் கடைசியில் உண்ணாவிரதம் இருக்கவும் ஜனவரி முதல் வாரத்தில் வறட்சி நிவாரண மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேல ஈரால் திருவடிச்சாமி கருப்பூர் முன்னாள் பஞ.தலைவர் சித்தவன்,தாலுகா தலைவர் ரெங்கசாமி, மாவட்டக்குழு லெனின், கோவில்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் பலர் பேசினர்.