தென்காசி:தென்காசி, பாவூர்சத்திரம் பகுதியில் 18 மணிநேரம் தொடர்மின் தடையால் அரிசி ஆலைகள் முடங்கியுள்ளன. இதனால் அரிசி விலை கிடு.. கிடு... என உயர்ந்துள்ளது.
தென்காசி, பாவூர்சத்திரம், கீழப்பாவூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கி வந்தன. கடந்த பல மாதங்களாக 18 மணி நேரம் தொடர் மின் தடையால் அரிசி ஆலைகள் இயங்க முடியாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். நெல் அரிசியை கொண்டு செல்வதற்காக பாங்க் மூலம் கடன் வாங்கிய வாகனங்களுக்கு தவணைத்தொகை கூட கட்ட முடியாமல் உரிமையாளர்கள் அவதியுற்றுள்ளனர். அரிசி ஆலை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேறு தொழில் எதுவும் தெரியாததால் வறுமையால் வாடுகின்றனர்.
பகலில் 4 மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் உள்ளது. இதுவும் தொடர்ச்சியாக இருப்பதில்லை ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது. எப்போது மின்சாரம் வரும் என்போது போகும் என முன் அறிவிப்பு கூட செய்வதில்லை என்பதால் ஆலைகளை இயக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும் மத்திய பிரதேசத்திலிருந்து ரயில்கள் மூலம் நெல்லைக்கு நெல் வர வழைக்கப்படுகிறது. அங்கிருந்து வாகனங்கள் மூலம் அரிசி ஆலைகளுக்கு கொண்டுவரப்பட்டு அரைக்கப்பட்டு வருகிறது.
இதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டில் 18 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சரிசி தொடர்மின்தடையால் 35 ரூபாய் வரையிலும், புழுங்கல் அரிசி 32 ரூபாய் முதல் 45 வரையிலும் விலை கிடு.. கிடு... என உயர்ந்துள்ளது. எதிர்பாராத அரிசி விலை உயர்வினால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.