Advertisement
குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான தென்றல் விடுதி அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் முற்றிலும் 1 கோடி ரூபாய் செலவில் புதிய நவீன வசதியுடன் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான பயணிகள் தங்குவதற்கான தென்றல் விடுதி சுவாமி சன்னிதியில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த விடுதியினை நவீன முறையில் கட்ட அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தென்றல் விடுதி முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டு அதே பகுதியிலேயே 6 அறைகள் மற்றும் வரவேற்பு அறையுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றாலநாதர் கோயில் நிதியிலிருந்து இந்த பணிக்காக ரூபாய் ஒரு
கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய கட்டட பணிக்காக நேற்று காலை சுவாமி சன்னிதியில் அமைந்துள்ள பழைய தென்றல் விடுதியை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி பரிந்துரையின்படி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், ஓவர்சியர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் பணிகள் துவங்கியது. கோயில் நிர்வாகம் சார்பில் சுமார் 1கோடி ரூபாய் செலவில் புதிய தென்றல் விடுதி கட்டப்படவுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.