குற்றாலம்:குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பாறையை தொட்டு விழுந்த போதிலும் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த ஒருவார காலமாக அதிகளவில் காணப்பட்டது.
மெயின் அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் பஜார் பகுதிகள் நேற்று இரவு களைகட்டி காணப்பட்டது. பருவ மழையும் பொய்த்துவிட்ட நிலையில் அவ்வப்போது பெய்து வந்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்து வந்தது.
கடந்த ஒருவார காலமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீரின் வரத்து பாறையை தொட்டு விழும் அளவிற்கு தான் இருந்தது. இருந்தபோதிலும் விழுகின்ற தண்ணீரில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் குளித்து வருகின்றனர்.
நேற்று காலை முதல் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மெயின் அருவி பகுதியில் அதிகளவில் காணப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.