திருநெல்வேலி:கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில், நெல்லையில் இருந்து சென்னை, கோவை, பெங்களுரூ உட்பட பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏசி., அல்லாத ஆம்னி பஸ்களில் சென்னைக்கு 650 ரூபாயும், ஏசி., ஆம்னி பஸ்களில் 900 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என்பதால் நேற்று நெல்லையில் இருந்து சென்னை, பெங்களூரு சென்ற அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகள் கூட்டம் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் அலைமோதியது.
ஆம்னி பஸ் ஊழியர்கள், பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சென்னைக்கு ஏசி.அல்லாத பஸ்களில் செல்ல ஆயிரம் ரூபாயும், ஏசி., பஸ்களில் ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணம் வசூலித்தனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விடுமுறைக்காக ஆம்னி பஸ்சில் சொந்த ஊர் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது;
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு ஆம்னி பஸ்சில் செல்ல பஸ் ஸ்டாண்டிற்கு வந்தபோது ஆம்னி பஸ் ஊழியர்கள் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு கட்டணம் பெற்றனர். விமானத்தில் சென்னை செல்வதற்கு வசூலிக்கும் கட்டணத்தை ஆம்னி பஸ் ஊழியர்கள் கேட்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
அதிகாரிகள் விழிப்பார்களா?
நெல்லை வழியாகவும், நெல்லையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்சின் பெர்மிட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.