DISTRICT NEWS | தமிழகத்தில் ஜன.3ம் தேதி முதல் டெங்கு களப் பணிகள் புறக்கணிப்பு * சுகாதார அலுவலர்கள் முடிவு| Dinamalar

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜன.3ம் தேதி முதல் டெங்கு களப் பணிகள் புறக்கணிப்பு * சுகாதார அலுவலர்கள் முடிவு

Added : டிச 23, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் டெங்கு நோய் தடுப்பு உள்ளிட்ட களப் பணிகளை புறக்கணிக்க பொது சுகாதார துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
சுகாதார துறையில் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக பணியில் இளையோரான வட்டார சுகாதார மேற்பார்øவாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் பொது சுகாதார துறை நடவடிக்கைகளை கண்டித்தும், 28 ஆண்டுகள் பணி முடித்து பயிற்சி முடித்த சுகாதார ஆய்வாளர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ற மருத்துவமல்லா மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க கோரி பொது சுகதார துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
2ம் கட்ட போராட்டமாக நாளை (24ம் தேதி) சென்னையில் பொது சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பொது சுகாதார துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் போஸ், மாநில பொது செயலாளர் லட்சுமி நாராயணன், மாநில செயலாளர் கங்காதரன் தெரிவித்தனர்.
கோரிக்கைகள் குறித்து நிறைவேற்றப்படாவிட்டால் வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் டெங்கு உள்ளிட்ட களப் பணிகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை