திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலை மீது ஆக்கிரமிப்புகள், நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதில், தனியார் நபர்கள், 33 ஆஸ்ரமங்கள் மற்றும் கோவில்களும், 1,465 வீடுகளையும் கட்டியுள்ளனர்.ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு, "மலை மீது, முலைப்பால் தீர்த்தம் அருகே கட்டப்பட்ட வேதவித்து ஆஸ்ரமம் என அழைக்கப்படும் பாலதண்டாயுதபாணி ஆஸ்ரம கட்டிடங்களை அகற்ற ÷வண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தார்.விசாரணை நடத்திய, சென்னை உயர்நீதிமன்றம், "வேதவித்து ஆஸ்ரமத்தையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்' என, உத்தரவிட்டது. நேற்று (டிச.,22) காலை, தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில், வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்தனர்.மலைப்பகுதி என்பதால், மலை மீது ஜே.சி.பி.,இயந்திரங்கள் கொண்டு செல்ல முடியாததால், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கடப்பாரை கொண்டு கட்டிடங்களை இடித்து தள்ளினர்.இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.