விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தாளாளர் மைக்கேல் பாக்கியசாமி தலைமை தாங்கினார். முதல்வர் உபகாரசாமி வரவேற்றார்.
விழாவில், கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள் செந்தில்முருகன், சாமிநாதன், ஆரோக்கியராஜ், சத்தியசீலன், குணசேகரன் பங்கேற்றனர்.
இதேபோல், புதுக்குப்பம் நேரு நர்சரி அன்ட் பிரைமரி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் டேனியல் தலைமை தாங்கினார்.
கவுன்சிலர் தாஸ், போதகர் ஆரோன் அருள்ராஜ், பள்ளி நிர்வாகி எஸ்தர் பியூலா, ஆசிரியர் பெனிட் ஜெரோன்சியால் முன்னிலை வகித்தனர். தாளாளர் ஜாய்ஸ்ரூபி டேனியல் வரவேற்றார். கடலூர் மகிமை நித்திய ஜீவன் நிறுவனர் சவுந்தரராஜன், பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில், இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம்: தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவவீரர் பிலவேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.