நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் மின்வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் செயல் விளக்கம் நடந்தது.
நெல்லிக்குப்பம் பகுதியில் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். தற்போது தினமும் 14 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு உள்ளதால் கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
இதனை சமாளிக்க இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையும், வடலூர் ஜெய் அண்ட் ஜெய் மோட்டார்ஸ் சார்பில் டிராக்டரில் இணைந்து இயக்கக் கூடிய ஜெனரேட்டர் செயல்விளக்கம் அண்ணாகிராமத்தில் ஜெயகுமார் என்பவர் நிலத்தில் நடந்தது.
பொது மேலாளர் கருணாகரன், மேலாளர் நாகராஜன், கோட்ட அலுவலர் கோவிந்தராஜ், களப்பணியாளர் சேகர், விவசாயிகள் ரவி, ராஜ்குமார், பானுகுமார், ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மோட்டாரின் குதிரைத் திறனுக்கு ஏற்ப ஜெனரேட்டர் விலையும், டீசல் தேவையும் இருக்கும்.
ஜெனரேட்டர் இருந்தால் மின்வெட்டைப் பற்றி கவலைப்படாமல் கரும்பு பயிரை காப்பாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலை மூலம் ஜெனரேட்டர்களை வாங்கிக் குறைந்த வாடகைக்கு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.