திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அருகே, பாலாற்றில் மணல் சுரண்டலால், ஆபத்தான பள்ளங்கள் உருவாகி உள்ளது.திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரத்தில் பாலாறு உள்ளது. இங்கு நீண்டகாலமாக, மணல் வெட்டு புலம் இயங்கியது. பொதுப்பணி
துறை மணல் வெட்டு புலம் இயங்கியபோது, மண் அள்ள ஒப்பந்தம் பெற்ற தனியார்
நிறுவனம், விதிகளுக்கு புறம்பாக பல அடி ஆழத்திற்கு மண் எடுத்தது. ஆற்றில்
மூன்றடி ஆழத்திற்கு மட்டும் மண் அள்ள விதிமுறையிருந்தும், 30 அடி ஆழம் வரை
மண் தோண்டியது. இதனால் மணற்பரப்பின் இயற்கைத்தன்மை மாறி, ஆங்காங்கே
பள்ளங்கள் உருவாகி உள்ளது.
இவற்றில் மழைநீர் நிரம்பி, குளமாக மாறி
உள்ளது. இதன் அடிப்பகுதி களிமண் பரப்பாக உள்ளது. இதில் கிராமத்தினர்
குளிக்கின்றனர். கால்நடைகள் குடிநீர் அருந்த வருகின்றன.
பள்ளத்தின் விளிம்பு பகுதி, ஆபத்தான சரிவாக இருப்பதால், இங்கு வருபவர்கள், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. இங்குள்ள
பள்ளங்ளை வருவாய்துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.