district news | தியாகதுருகத்தில் பருத்தி அறுவடை துவக்கம் கூடுதல் விலை எதிர்பார்க்கும் விவசாயிகள்| Dinamalar

தமிழ்நாடு

தியாகதுருகத்தில் பருத்தி அறுவடை துவக்கம் கூடுதல் விலை எதிர்பார்க்கும் விவசாயிகள்

Added : டிச 23, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தியாகதுருகம்,:தியாகதுருகம் பகுதியில் மானாவாரியில் சாகுபடி செய்துள்ள பருத்தி செடிகளில் இருந்து பஞ்சு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தியாகதுருகம் பகுதியில் விருகாவூர், சித்தலூர், முடியனூர், பானையங்கால், பொரசக்குறிச்சி, கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, நாகலூர், எஸ்.ஒகையூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி நிலங்களில் 5,000 ஏக்கர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழை ஈரத்தில் விதைப்பு பணிகளை முடித்தனர். அதைத்தொடர்ந்து அவ்வப்போது பெய்த மழையின்போது களை பறித்தும் உரங்கள் போட்டும் பராமரித்தனர். இதன் காரணமாக செடிகளில் அதிக அளவு காய்கள் காய்த்து செழிப்புடன் காணப்
பட்டது.
இத்தருணத்தில் போதிய
மழையளவு கிடைக்காமல் செடிகள் வாடியது.
கடந்த 20 நாட்களுக்கு முன் லேசான மழை பெய்தது வரபிரசாதமாக அமைந்தது. தற்போது காய்கள் முற்றியதால் வெடித்து அதில் இருந்து பஞ்சு வெளிப்பட்டுள்ளது. இதை சேகரிக்கும் பணியில்
விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பனிப்பொழிவு இருப்பதால் பஞ்சு நனைந்து சேதமடையாமல் இருக்கும் வகையில் உடனுக்குடன் பஞ்சை சேகரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு "தானே' புயல் காரணமாக பருத்தி அறுவடை தருணத்தில் செடிகள் மண்ணில் சாய்ந்து மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது ஊட்டமாக வளர்ந்துள்ள செடிகளில் மகசூல் கூடுதலாக கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக கள்ளக்குறிச்சி பருத்தி மார்க்கெட் திறக்கப்பட்டு புதன் கிழமை தோறும் விற்பனை நடந்து வருகிறது. கடந்த வார நிலவரப்படி ஒரு குவிண்டால் பஞ்சு மூட்டை 4,209 ரூபாய் வரை விலைபோனது. மேலும் விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை