"ரிமோட்' இயக்கத்தில் குட்டி விமானங்களின் அட்டகாச சாகசம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

செங்குன்றம்:விமானம் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்து துறை ரீதியான தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்ட "ரிமோட்' மூலம் ஆளில்லா குட்டி விமானங்களின் "சாகச' கண்காட்சி சென்னை சோழவரத்தில் நடந்தது.சென்னை மீனம்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், செங்குன்றம் அடுத்த சோழவரம் பழைய விமான தளத்தில், நேற்று குட்டி விமானங்களின் கண்காட்சி நடந்தது. காலை 8 முதல் பகல் 12 மணி வரை நடந்த கண்காட்சி மிக், ஜெட், ராணுவ ஹெலிகாப்டர், பறவை போன்று இறக்கை அடித்து பறக்கும் ஆர்னிதாப்டர், மதுரை கிரானைட் குவாரி, திருவண்ணாமலை கோவில் தீபத்திருவிழா ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட ஆக்சோ காப்டர் மற்றும் ஸ்லைபேட் உள்ளிட்ட குட்டி விமானங்களின் அட்டகா சாகசம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. கேமரா பொருத்தி கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் "ஆக்சோ காப்டர் மற்றும் ஸ்லைபேட்' ரக குட்டி விமானங்களின் "சாகசப் பணி' மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களை கவர்ந்தது.
மலை மற்றும் வனப்பகுதிகளில் உளவு, கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் "ஆக்சோ காப்டர்' விமானம், எதிர்காலத்தில் சென்னை போன்ற முக்கிய நகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை, உடனுக்குடன் காவல் துறைக்கு அனுப்பும் பணியில் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

அதன் மூலம் நெரிசலைத் தவிர்க்கும் போக்குவரத்து மாற்றத்திற்கான நடவடிக்கைகள் எளிதில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.அதிவேக விமானங்களான மிக், ஜெட் ஆகியவற்றின் மாடல்களில் தயாரிக்கப்பட்ட "மினியேச்சர்' விமானங்கள் ஆயிரம் அடி உயரத்தில் பறந்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டின. விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் வரை அனைத்தும் "ரிமோட் 'மூலம் இயக்கப்பட்டு வானில் "வண்ண ஜாலம்' புரிந்தன.சில விமானங்கள் 2 கி.மீ., உயரம் வரை செங்குத்தாக பறந்து சிலிர்க்க வைத்தது. பறவை போன்று சிறகடித்து பறக்கும் "ஆர்னிதாப்டர்' என்ற சிறிய ரக விமானம் வானில் பறந்த போது, அதன் வடிவத்தால் ஏமாற்றம் அடைந்த சில காகங்கள், அந்த விமானத்துடன் பறந்து திரிந்ததை பார்வையாளர்கள் மிகவும் ரசித்தனர். விமானங்கள் ஒன்றரை அடி முதல் 8 அடி நீளம் வரை இருந்தன. சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவர்கள் குட்டி விமானங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சென்னையின் சுற்று வட்டார பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சோழவரம், அலமாதி, ஆவடி, செங்குன்றம், புழல் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், குட்டி விமான சாகச காண்காட்சியை கண்டு ரசித்தனர். சென்னை விமானப்படை பயிற்சி மாணவர்களும் தொழில் நுட்ப தகவல் பரிமாற்றத்திற்காக இங்கு வந்தனர். கண்காட்சியை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ராஜா சீனிவாசன், ஆவடி விமானப்படை ஏர் கமோடர் பப்பட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மீனம்பாக்கம் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் சாரி கூறியதாவது, விமானங்களின் ரகம், அவற்றின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் பற்றி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. கடந்த 1991, 2008ம் ஆண்டுகளில் சிறிய அளவில் இந்த கண்காட்சி நடந்தது. அதையடுத்து இன்று (நேற்று) நடந்தது. கல்வி, விளையாட்டுத் துறைகளில் பலர் ஊக்குவிக்கப்பட்டாலும், அறிவியல் துறையில் ஈடுபாடு குறைவாகவே உள்ளது. தொழில் நுட்பம் மிகுந்த விமானப்படை அறிவியல் அறிவு நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு அடிப்படையானது. அதில் இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில்தான் இந்த குட்டி விமான சாகச கண்காட்சி நடந்தது. இதில் அண்ணா யுனிவர்சிடி மாணவ, மாணவிகள் உட்பட ஆர்வமுள்ள பல துறை சார்ந்தவர்களும் பங்கு பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு அகில இந்திய அளவில் இதை நடத்த பரிசீலித்து வருகிறோம்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்