ஓசூர்:ஓசூர்,
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தற்போது ராகி அறுவடை சீசன் துவங்கியுள்ளது.
யானைகளுக்கு பால் சுரக்கும் தீனிகளில் ராகி முதலிடத்தில் இருப்பதால்,
குட்டிகளுடன் யானைகள் கூட்டம், ராகி பயிர்களை தேடி வலம் வருகிறது.கர்நாடகா
மாநிலம், பென்னார் கட்டா, வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதியில்
புகுந்த, 250க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை, ஓசூர் தாலுகாவில்,
ஒரு மாதமாக மலைக்கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து
வருகின்றன.நள்ளிரவில்...ஒவ்வொரு முறையும், 25 முதல், 40 யானைகள் கூட்டமாக
மலைக்கிராமங்களில் நள்ளிரவு பøடெயடுத்து, ராகி, சோளம், நெல், காய்றிகளை
பயிர்களை அழித்து நாசப்படுத்தி செல்கின்றன.குறிப்பாக ராகி பயிர் சாகுபடி
செய்யப்பட்ட விவசாய நிலங்களை தேடி யானைகள் வலம் வருகிறது. இரண்டு
மாதத்தில், 4, 500 ஏக்கர் ராகி பயிர்களை யானைகள் கூட்டம் அழித்து
நாசப்படுத்தி சென்றுள்ளன.
ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து
வெளியேறிய, 45 யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு உத்தனப்பள்ளி,
சானமாவு, பீர்ஜேப்பள்ளி, மேல்மலை வனப்பகுதியில் புகுந்து விவசாய பயிர்களை
அழித்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றன.தொடர் கதைஇரவில் உலாவும், யானைகள்
ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, லாலிக்கல், நல்றாலப்பள்ளி, பாலேபுரம், கொத்தூர்
சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் புகுந்து, பயிர் செய்யப்பட்டிருந்த ராகி,
சோளம், காய்கறி பயிர்களை அழித்து நாசம் செய்கின்றன.
யானைகளை, வனத்துறையினர்
மாலையில் விரட்டுவதும், நள்ளிரவு அவைகள் மீண்டும் மலைக்கிராமங்களில்
புகுந்து அட்டகாசம் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால், விவசாயிகள்
பீதியடைந்துள்ளனர். அதே நேரம், யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கை
அனைத்தும் வீணாகி வருவதால், வனத்துறையினர் என்ன செய்வது என தெரியாமல் திணறி
வருகின்றனர்.
மாவட்ட வன அலுவலர் உலகநாதன் கூறியதாவது:தற்போது, வரும்
யானைகள் கூட்டத்தில் பெரும்பாலும், ஏழு முதல், 13 குட்டிகள் உள்ளன.
யானைகள், 22 மாதம் குட்டிகளை வயிற்றில் சுமந்து, பின் அவற்றை பிரசவித்து
தொடர்ந்து நான்கு ஆண்டு பால் ஊட்டுகிறது.அறுவடைஒரு குட்டி தினமும், 13
முதல், 16 லிட்டர் பால் குடிக்கிறது. ராகி பயிர் சாப்பிட்டால் யானைகளுக்கு
அதிகளவு பால் சுரங்கும். அதனால், யானைகள் அதிகமாக பால் சுரக்க, ராகி பயிரை
விரும்பி சாப்பிடும்.தற்போது, ராகி அறுவடை செய்வதால், அதன் கதிரில் இருந்து
வெளியேறும் பால் மணத்தை நுகர்ந்து ராகி பயிர் சாகுபடி செய்துள்ள இடங்களை
தேடி வருகின்றன. டிசம்பரில் அறுவடை முடிந்தாலும், மார்ச் மாதம் ராகி கதிர்
அடித்து விவசாயிகள் விற்பனை செய்வார். அது வரை யானைகள் இந்த பகுதியில்
முகாமிடும்.அவற்றை நிரந்தரமாக விரட்ட முடிவதில்லை. தற்போது, மின் வேலி
போடாத ஊடேதுர்க்கம் முதல் தேன்கனிக்கோட்டையில் பஞ்சப்பள்ளி சாலை வரை, 35
கி.மீ., பகுதி வழியாகதான் யானைகள் வருகின்றன. இவ்வாறு அவர்
கூறினார்.ஆற்றில் குளித்துமகிழ்ந்த யானைகள்சில நாட்களுக்கு முன்,
ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் இருந்து வெளியேறிய, 46 யானைகள், சூளகிரி
அடுத்த போடூர், அழியாளம் மலைக்கிராமங்களில் சுற்றின. பகல் முழுவதும்
அப்பகுதியில் சாகுபடி செய்திருந்த ராகி பயிரை தின்ற யானைகள், மாலை, 6:00
மணி அளவில் போடூர் அடுத்த காமன்தொட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில்
இறங்கின.ஆற்றில் நீராடிய யானைகள், 6:30 மணிக்கு ஆற்றை கடந்து அழியாளம்
வழியாக ஓசூர் - ராயக்கோட்டை சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்கு சென்றது.
அப்போது, அந்த சாலையில் வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டன.தகவல் அறிந்த
சுற்றுவட்டார கிராம மக்கள், யானைகளை பார்க்க சாலைகளில் குவிந்தனர்.
வனத்துறையினர், தீ பந்தங்கள் ஏந்தியும், பட்டாசு வெடித்தும், கிராம மக்கள் துணையுடன், யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.