district news | ஊட்டி தேயிலை சுற்றுலா விழாவில் முதல்முறையாக "கோடநாடு டீ'| Dinamalar

தமிழ்நாடு

ஊட்டி தேயிலை சுற்றுலா விழாவில் முதல்முறையாக "கோடநாடு டீ'

Added : டிச 23, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி : ஊட்டி தேயிலை சுற்றுலா விழாவில், கோடநாடு தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், முதன் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெ.,வுக்கு சொந்தமானதாக கூறப்படும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், பெரும்பாலும் தேயிலை ஏல மையம் வாயிலாக மட்டுமே விற்கப்படுகிறது; சில்லரை விற்பனை செய்யப்படுவதில்லை.
ஊட்டியில் கடந்த இரண்டு நாளாக நடைபெற்று வரும் தேயிலை சுற்றுலா விழாவில், முதல்முறையாக கோடநாடு தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், உள்ளூர் சந்தையில் விற்க, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலை அலுவலர் கூறியதாவது:
கோடநாடு தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆர்தோடக்ஸ், கிரீன் டீ, ஒயிட் டீ போன்றவை, நேரடியாக டென்மார்க் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதன் முறையாக, "கோடநாடு டீ' என்ற பெயரில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, உள்ளூர் சந்தையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை