கமுதி:கமுதி ஒன்றியம் மண்டலமாணிக்கம் ஊராட்சியில், முடங்கிப்போன திட்டங்களால், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
மண்டலமாணிக்கம் ஊராட்சியில் காவிரி குடிநீர் திட்டம், மண்டலமாணிக்கம் கூட்டு குடிநீர்திட்டம், ராஜகம்பீரம் குடிநீர் திட்டம் உட்பட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இருந்தும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், கிராம மக்கள் குடிநீருக்காக தினந்தோறும் பல வித அவஸ்தைகளை அனுபவிக்கின்றனர்.
எப்போதாவது வரும் குடிநீருக்காக, குடங்களை வரிசையில் வைத்து, காத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது. முக்கியமாக இப்பகுதி மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட மண்டலமாணிக்கம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் தண்ணீர் வரத்து இருந்தும், மண்டலமாணிக்கத்திற்கு வந்து சேரவில்லை.
கமுதியில் உள்ள அதிகாரமையத்தில் உள்ளவர்களின் தோட்டத்திற்கும், வீடுகளுக்கும் மட்டுமின்றி, சில கிராமங்களில் கழிப்பறைக்கும் பயன்படுத்துவதாக, மண்டலமாணிக்கம் கிராமத்தினர் குமுறுகின்றனர்.
அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை என்கின்றனர். ஒரு குடம் குடிநீருக்காக, இளைஞர்கள் பல கி.மீ., தூரம் சைக்கிள்களிலும், பெண்கள் ஆற்றில் ஊற்றுக்குள் கால்கடுக்க காத்திருந்து, ஒரு குடம் தண்ணீரை சேகரிப்பது பரிதாபமாக உள்ளது.
* முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் 300 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் சேதமடைந்து, தெருக்களில் கழிவுநீர் தேங்கி, சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. ஊரின் மையப்பகுதியில் குப்பைகள், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பீதியில் கிராம மக்கள் உள்ளனர். எப்போதாவது வழங்கப்படும் காவிரி குடிநீரை பிடிக்க, போதிய குழாய்கள் இல்லாததால், ஒரே குழாயில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தண்ணீர் பிடிக்கும்போது, பிரச்னை அதிகரித்து வருகிறது. அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக, கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ""விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.
குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.