district news | பொது கிணறு தண்ணீரை பங்கிடுவதில் குஸ்தி : மக்களுடன் கவுன்சிலர்கள் சாலை மறியல்| Dinamalar

தமிழ்நாடு

பொது கிணறு தண்ணீரை பங்கிடுவதில் குஸ்தி : மக்களுடன் கவுன்சிலர்கள் சாலை மறியல்

Added : டிச 23, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பொது கிணறு தண்ணீரை பங்கிடுவதில் குஸ்தி : மக்களுடன் கவுன்சிலர்கள் சாலை மறியல்

திருப்பூர் : திருப்பூரில், கிணற்று நீரை பயன்படுத்துவது தொடர்பாக, இரு வார்டு மக்களுக்குள் நேற்று பிரச்னை வெடித்தது. கவுன்சிலர்களும், பொதுமக்களும் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேயர் முன்னிலையில் சமரச பேச்சு நடத்தப்பட்டு, இரு வார்டு மக்களுக்கும் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர், பி.என்.ரோடு 25வது வார்டில், மாநகராட்சி மருந்தகம், சொக்கன் - மல்லம்மாள் பூங்கா உள்ளது. இங்கு, 100 ஆண்டுகளுக்கு முன், ராணுவத்தால் வெட்டப்பட்ட கிணறு உள்ளது. இப்பகுதி மக்களின் பொது உபயோகத்துக்கு கிணற்று நீர் பயன்பட்டு வருகிறது. 25வது வார்டு (பழைய 19வது வார்டு) பகுதியை சேர்ந்த காமராஜர் வீதி, ஆறுகோம்பை பகுதியில் உள்ள நான்கு வீதிகளுக்கு 16 பொது குழாய் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக, இரண்டு மின் மோட் டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமும் காலை 5.00 முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 முதல் 9.00 மணி வரை, தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில், மாநகராட்சி பள்ளி, மருத்துவமனை மற்றும் 26வது வார்டு பகுதி மக் களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், 26வது வார்டு பகுதி மக்களுக்கும், காலை நேரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என அ.தி.மு.க., கவுன்சிலர் முத்து கூறியுள்ளார். இதற்கு, 25வது வார்டு இ.கம்யூ., கவுன்சிலர் உமா மகேஸ்வரி, ""13 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையை மாற்றக்கூடாது. தேவைப்பட்டால், இன்னொரு மோட்டார் அமைத்து, அதே நேரத்துக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் ,'' என கூறியுள்ளார்.
இப்பிரச்னை வெகுநாட்களாக நீடித்து வந்தது. நேற்று காலை, திடீரென, மின் மோட்டார் "பியூஸ் கேரியரை', கவுன்சிலர் முத்து எடுத்துச் சென்றுள்ளார். அதன் காரணமாக, நேற்று, தண்ணீர் சப்ளை செய்ய முடியாததால், கவுன்சிலர் உமா மகேஸ்வரி மற்றும் 25வது வார்டு மக்கள் ஒன்று திரண்டு, காலை 7.00 மணிக்கு, பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே, அ.தி.மு.க., கவுன்சிலர் முத்துவும், தனது வார்டு மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இரு தரப்பினரும், "அதிகாலையில் தண்ணீர் வந்தால் மட்டுமே வேலைக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என பிடிவாதமாக கூறினர். சம்பவ இடத்துக்கு மண்டல தலைவர் ஜான் மற்றும் போலீசார் வந்து பேச்சு நடத்தினர். "காலை 11.00 மணிக்கு மேயர் முன்னிலையில் பேச்சு நடத்தி தீர்வு காண்பது,' என, முடிவு செய்யப்பட்டது. அதையேற்று,8.00 மணியளவில் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேயர் விசாலாட்சி முன்னிலையில் நடந்த பேச்சில், "26வது வார்டு மக்களுக்கு என தனியாக மோட்டார் அமைப்பது; அதுவரை, 25வது வார்டுக்கு அதிகாலை 5.00 முதல் 7.00 மணி வரை, 26வது வார்டுக்கு 7.00 முதல் 8.00 மணி வரை தண்ணீர் எடுத்துக் கொள்வது. மின்வெட்டு காரணமாக, இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஜெனரேட்டர் வசதி செய்து கொடுப்பது,' என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை