வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து கொண்டே, தமிழகம் முழுவதும், "நெட்வொர்க்' அமைத்து, கிரிமினல் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர், தொரப்பாடி மத்திய ஆண்கள் சிறையில், 997 கைதிகள் உள்ளனர். மொத்தம் உள்ள, 15 பிளாக்குகளில், ஒரே நேரத்தில், 2,500 கைதிகளை அடைக்க வசதியுள்ளது. சில ஆண்டுகளாக, வேலூர் சிறை, குற்றவாளிகளின் உல்லாசபுரியாக மாறிய இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தினமும், காலை கொண்டைக் கடலை, டீ, பால், காபி, உப்பு இல்லாத சப்பாத்தி என சிறையில் சாப்பிட்ட காலம் மாறி, தற்போது, ஆற்காடு ஸ்டார், ஆம்பூர் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு கிடைக்கிறது. இந்நிலையில், சிறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு செல்பவர்கள், விடுதலையாகி வெளியே வரும்போது, யாராவது ஒரு ரவுடி அல்லது தாதாவுக்கு அடியாளாக மாறி விடுகின்றனர்.
அவர்கள், யாரை கொலை செய்வது, யாரிடம் கொள்ளையடிப்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, சிறையில் உள்ள தாதாக்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். சிறையில்
இருந்தே தாதாக்கள்
பிளான் போட்டுக் கொடுக்க, அதன்படி வெளியே வந்தவர்கள்,
கிரிமினல் நடவடிக்கைகளை அரங்கேற்றுகின்றனர்.
345 மொபைல்:
வேலூர்
சிறையில் உள்ள கைதிகளிடம், மொபைல் போன், சிம்கார்டு, பேட்டரிகள் மற்றும்
தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் அதிகளவு உள்ளது. அவ்வப்போது சிறை
அதிகாரிகள் பறிமுதல் செய்து கணக்கு காட்டினாலும், தற்போதைய கணக்கு படி,
சிறையில், 345 மொபைல் புழக்கத்தில் இருப்பதாக சிறைத்துறையினரே
கூறுகின்றனர்.மொபைல் மூலம், அடியாட்களை ஒருங்கிணைத்து, தனிநெட்வொர்க் அமைத்து, சிறையில் இருந்தபடியே, தூசி ரியல் எஸ்டேட் அதிபர் கிருஷ்ணன், வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, காஞ்சிபுரம் தொழில் அதிபரின் டிரைவர் கொலை மற்றும் வெடிகுண்டு வீசி ரவுடி தேவராஜ் கொலை என, 24 பேரின் கொலை சம்பவங்களுக்கு , வேலூர் சிறையில் இருந்தே சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
சிறையில் இருந்து, தினம் காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையும், மாலை, 7:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையும் தகவல் பரிமாற்றம் அதிகளவு நடப்பதாக, விசாரணையில்
Advertisement
தெரிய வந்துள்ளது.அதேபோல், சிறையில், கஞ்சா, பீடி, சிகரெட், குட்கா மற்றும் சிக்கன், மட்டன், மீன், மது வகைகள் என, எது
கேட்டாலும் தாதாக்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். அதற்கான பணத்தை,
வெளியில் உள்ள அவர்களது அடியாட்கள் மூலம் வசூலித்துக்
கொள்கின்றனர்.கடந்தாண்டு, சிறைக்கு கொண்டு வரும் பொருட்கள், சோதனை
செய்யப்பட்ட பின்பே, அவர்களிடம் கொடுக்க தனி மையம் ஏற்படுத்தப்பட்டது.சில மாதங்கள் வரை செயல்பட்ட இந்த மையம், தற்போது மூடப்பட்டுள்ளது.
இப்போது, எந்த பொருளும் சோதனை செய்யாமல் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விவரங்களை சேகரித்த உளவுத்துறையினர், மேலிடத்திற்கு, பல திடுக்கிடும் தகவல்களை அனுப்பியுள்ளனர்.அதில், வேலூர் சிறையில் ஜெயிலர்கள், காவலர்கள் பலர், நீண்ட காலமாக அங்கேயே பணியாற்றுவதால், கைதிகளுக்கும், இவர்களுக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது; அவர்களை மாற்ற வேண்டும். சிறைத்துறை, போலீஸ் துறை இணைந்து, கூட்டுக் குழு அமைத்து, சிறைக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உளவுத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.