Sonali Mukherjee - acid attack victim who became a TV millionaire | "ஆசிட்' வீச்சில் முகத்தை இழந்த இளம் பெண்: ரூ.25 லட்சம் பரிசு வென்றார் | Dinamalar
Advertisement
"ஆசிட்' வீச்சில் முகத்தை இழந்த இளம் பெண்: ரூ.25 லட்சம் பரிசு வென்றார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி :காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு, கொடுமையான செயலுக்கு ஆளாக்கப்பட்டவர், சோனாலி முகர்ஜி."ஆசிட்' வீச்சுக்கு ஆளான அவருக்கு முகமே கிடையாது; கருகிய சதை துணுக்குகள் தான் முகத்தில் ஆங்காங்கே உள்ளது. அழகிய முகத்தை இழந்த அந்த பெண், தன் முகத்தையே வெளியே காட்டுவது கிடையாது. ஆனால், அவரை அந்த கொடுமைக்கு ஆளாக்கிய, மூன்று நபர்கள், வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இப்போது இருக்கும் அளவுக்கு, "மீடியா' தாக்கம் இல்லை என்றாலும், அப்போதும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் நகர கல்லூரி ஒன்றில் படித்து வந்தார், சோனாலி முகர்ஜி. கல்லூரிக்கு செல்லும் வழியில், மூன்று இளைஞர்கள், அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தனர். வலுக்கட்டாயமாக, காதலிக்க வற்புறுத்தி வந்தனர்; அதை அந்த பெண் மறுத்து வந்தார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அந்த கயவர்கள், கனரக இரும்பு பொருட்களில், துரு அகற்ற பயன்படுத்தப்படும், பயங்கரமான, "ஆசிட்'டை, அந்தப் பெண்ணின் முகத்தில் வீசி விட்டு ஓடினர்.இதில், முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள். எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், "டிவி'யில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்தும், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், சமீபத்தில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, 25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார்.

""இந்த பணத்தைக் கொண்டு, என் முகத்தில் உரிந்து வரும் பிளாஸ்டிக் இழைகளை சரி செய்ய முடியும்; சில நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும். எனினும், முகம் இனி கிடைக்கப் போவதில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், வாழ்க்கை என்னாவது என்ற எண்ணத்தில், போட்டியில் பங்கேற்றேன். என் முகத்தை, "டிவி'யில் காட்டினர். அதுவே, அந்த கயவர்களுக்கு உண்மையான தண்டனையாக இருக்கும்,'' என, சோனாலி கூறினார்.நிகழ்ச்சியின் போது, சோனாலியை, நடிகர் அமிதாப் பச்சன், "வீரமான பொண்ணு' என, பாராட்டினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
neelakantan s - mumbai,இந்தியா
30-டிச-201200:22:07 IST Report Abuse
neelakantan s மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இந்த பரிசை வென்றதற்கு. இந்த மூன்று கயவர்களுக்கு சட்டம் சரியான தண்டனை கொடுக்கா விட்டாலும் தெய்வம் அவர்களை நின்று கொல்லும். ஓம் சாய் ராம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Senthil - Boon keng,சிங்கப்பூர்
25-டிச-201220:33:34 IST Report Abuse
Senthil அந்த கயவர்களை காப்பாற்றிய போலீஸ் கும் நீதிபதி அவர்களுக்கும் , சரியான தண்டனை குடுக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
25-டிச-201220:13:16 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM மறுபடி இந்த உலகில் வாழ்வதற்கு ..கடவுளால் ..கடவுள் மூலம் அனுபபட்டவர்களால் கிடைக்க பெற்ற இந்த பரிசானது ...அவருக்கு சற்று ஆறுதலாகவும் ....இருக்கும் யன்று தோனுகிறது ....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201221:02:44 IST Report Abuse
Guru வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kalyan Damu - Chennai,இந்தியா
24-டிச-201212:40:23 IST Report Abuse
Kalyan Damu அந்த முன்று பேரையும் நிற்க வைத்து, அந்த பெண்ணின் கையில் ஆசிட்டை குடுத்து ஊற்ற வேண்டும்.
Rate this:
0 members
1 members
56 members
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201211:44:24 IST Report Abuse
Rajagiri.Siva முகக்கலையை இழந்தாலும் மனக்கலையை இழக்காத தைரியலட்சுமி...
Rate this:
0 members
1 members
33 members
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201211:03:52 IST Report Abuse
gummanguthu gopi முதல்ல எல்லாரும் இந்தியாவிலே ஒட்டு போடுங்கப்பா, திருடன், ரௌடி, பொருக்கி அரசியல் வாதி ஆவதை தடுங்கப்பா. அப்புறம் நல்ல சட்டம், திறமையான அதிகரி எல்லாம் தானாகவே அமையும்
Rate this:
0 members
1 members
43 members
Share this comment
Cancel
Ramkumar Venkataraman Venkataraman - Chennai,இந்தியா
24-டிச-201210:08:26 IST Report Abuse
Ramkumar Venkataraman Venkataraman பாதிக்க பட்ட வர்களின் படத்தை காட்டுவதை விட தப்பு செய்தவர்களின் முகத்தை கட்டுவதே சிறந்தது. இந்த பெண் ஒரு வருடமாக வெளியே தலை காட்டாமல் இருந்திருக்கின்றாள் ஆனால் அந்த அயோக்யர்கள் வெளியே உலா வந்து கொண்டு இருக்கின்றனர்.-ராம்ஜி
Rate this:
0 members
0 members
37 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
24-டிச-201208:12:03 IST Report Abuse
Chenduraan என்றைக்கு இளைய சமுதாயம் விளித்துக்கொள்கிறதோ அன்றைக்குத்தான் நமக்கு விடிவு காலம்
Rate this:
1 members
0 members
35 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-டிச-201212:12:59 IST Report Abuse
Nallavan Nallavanசூப்பர் டயலாக் ஆசிட் ஊத்தின மிருகங்களும் இளைய சமுதாயத்தைச் சேர்ந்ததுகள்தானே?...
Rate this:
3 members
1 members
14 members
Share this comment
Cancel
Asokaraj - Doha,கத்தார்
24-டிச-201200:12:58 IST Report Abuse
Asokaraj டி வியில் அந்தப் பெண்ணின் முகத்தை காட்டுவதை விட அந்தக் கயவர்களின் முகத்தை அல்லவா காட்ட வேண்டும்? மக்களுக்கு அவனுங்க முகம் மறந்து போயிருக்கலாம். அல்லது அவனது மனைவிகளுக்கு அவனுங்களைப் பற்றி தெரியாமல் மறைத்திருக்கலாம்.
Rate this:
0 members
0 members
98 members
Share this comment
Poor Patriot - bangalore,இந்தியா
24-டிச-201209:31:33 IST Report Abuse
Poor Patriotஅப்படி காட்டினாங்கன்னா அவனுங்க மூஞ்சில ஆசிட் ஊத்தறதுக்கு நெறைய பேர் கிளம்பிடுவாங்கல்ல. அதான் காட்டலே போலிருக்கு. இப்போதான் நம்ம விழிக்க ஆரம்பிச்சிருக்கோம். இதுக்கே இவ்ளோ நாள் ஆயிருக்கு. இலங்கையில் கொத்துக் கொத்தாக நம் இனப் பெண்களை வஞ்சகர்கள் வெட்டி வீசும்போது கூட நமக்கு இவ்வளவு கோபம் வரவில்லை. மீடியாவை குறை சொல்கிறோமே, நாம் செய்வது மற்றும் செய்தது சரியா தப்பா.....
Rate this:
3 members
0 members
24 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்