கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை பங்களாவுக்கு "சீல்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:மாமல்லபுரம் அருகில், கிழக்கு கடற்கரை சாலையில், "ஆலிவ் பீச்' பகுதியில், விதிமுறை மீறி கட்டப்பட்ட நடிகை பங்களா உட்பட, ஏழு கட்டடங்களுக்கு, நகரமைப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், "சீல்' வைத்தனர்.

தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த, நகரமைப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன்படி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, சேலம் போன்ற நகரங்களில், விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது, அந்தந்த பகுதி உள்ளூர் திட்டக் குழுமங்கள் மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


புகார்:

இந்நிலையில், மாமல்லபுரம் அருகில், கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய, "ஆலிவ் பீச்' பகுதியில், ஏராளமான ஆடம்பர பங்களாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. சினிமா துறையினர், தொழில் துறையினர் என, பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்காக, இந்த பங்களாக்கள் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.கடற்கரை, நீர் நிலை புறம்போக்கு நிலங்களில், விதிமுறைகளை மீறி இந்த பங்களாக்கள் கட்டப்பட்டு வருவதாக, முட்டுக்காடு பகுதி மக்கள், நகரமைப்புத் துறையிலும், வருவாய் துறையினரிடமும் புகார் தெரிவித்தனர்.


"சீல்' வைப்பு:

இந்த புகார்கள் குறித்து, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள், திருப்போரூர் தாலுகா அலுவலக அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் கிடைத்த விவரங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பங்களாக்களின் உரிமையாளர்களுக்கு, நகரமைப்புத் துறை அதிகாரிகள் "நோட்டீஸ்' அனுப்பினர்.இதற்கு, உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த கட்டடங்களை, "சீல்' வைக்க, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளில் கட்டப்பட்டு வரும், ஏழு பங்களாக்களுக்கு, நகரமைப்புத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் "சீல்' வைத்தனர்.இதில், ஒரு பங்களா, பிரபல நடிகை ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம் உறுப்பினர் செயலர் சண்முகம் கூறியதாவது:கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை சட்டப்படி, கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் கட்டடங்கள் கட்டக் கூடாது. அப்படியே கட்ட வேண்டும் என்றால், மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்று வழங்க வேண்டும். கரிகாட்டுக்குப்பம் கடலோரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆறு சொகுசு பங்களாவிற்கும், கடந்த மாதம் "நோட்டீஸ்' அனுப்பினோம். கட்டட உரிமையாளர்கள் எவரும் முன்வந்து ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இந்த சொகுசு பங்களாக்கள் யார் யாருக்கு உரியது என்ற விவரம் தெரியவில்லை. இதேபோன்று, எங்கள் நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கும் நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
super - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-டிச-201212:40:55 IST Report Abuse
 super அய்யா செருப்புக்காக காலை குறைக்க வேண்டியது தானே. மாளிகைக்கு பின்னாடி 300 மீட்டார் மண்ணை யும் பெரிய பாராங்கல்லையும் போட்டு கடலை தூற்று விட்டால் மாளிகைக்கும் பெலம், பிரச்சனையும் முடிந்து விடும். சங்கை ஊதி சவுண்டு விடாதீர்கள் தயவுசெய்து .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-டிச-201211:50:11 IST Report Abuse
Nallavan Nallavan கஷ்ஷ்ஷ்ட்ட்டப்ப்ப்பட்ட்ட்ட்ட்டு அப்படி...... இப்படி..... சம்பாதிச்சு கட்டின கட்டிடம் கொஞ்சம் இரக்கப்படலாமே....
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
24-டிச-201210:56:41 IST Report Abuse
T.R.Radhakrishnan எல்லாம் அவிங்க க்ரூப்பாய் தான் இருக்கும். மான், மயில், நரி என்ற க்ரூப்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24-டிச-201210:48:14 IST Report Abuse
சு கனகராஜ் நடிகை பெயரை போட தினமலருக்கு பயமா ? பூ நடிகையா ? மச்சான்ஸ் நடிகையா ? தோல் வியாதி நடிகையா ? இல்ல மூணுஷா நடிகையா ? இல்லை எந்த நடிகை என்பதை தெளிவு படுத்தவும்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
24-டிச-201210:42:31 IST Report Abuse
mirudan அதிகாரிக்கு சான்ஸ் கொடுக்க நடிகை மறுத்து விட்டார் அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
24-டிச-201209:21:20 IST Report Abuse
Karthi தமிழ் நடிகைகளுக்கு அவர்களின் பங்களாவிற்கு எதாவது பிரச்னை வந்தால், முதலில் வந்து நிற்பது நம்ம தாத்தா தான். ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
24-டிச-201212:53:44 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///Karthi தமிழ் நடிகைகளுக்கு அவர்களின் பங்களாவிற்கு எதாவது பிரச்னை வந்தால், முதலில் வந்து நிற்பது நம்ம தாத்தா தான். ஜாக்கிரதை. /// இனம் தன்னுடைய இனத்திற்கு உதவாது என்கிறீர்களா .?/// அப்போ சரி......
Rate this:
Share this comment
Cancel
AK47 - Chennai,இந்தியா
24-டிச-201208:26:40 IST Report Abuse
AK47 நடிகை பண்ணியது திருட்டுத்தனம். பெயர் போட்டால் என்ன தப்பு. ஏன் பெயரை மறைக்க வேண்டும் தினமலர். இது சரி அல்ல.
Rate this:
Share this comment
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
24-டிச-201209:30:16 IST Report Abuse
Mohd. Riasஇன்னும், அதிகாரிகள் கேட்ட பணத்தை இந்த வீட்டுகாரர்கள் கொடுக்கவில்லை என்பதை இந்த "சீல்" விளம்பரம் செய்கிறது. மேலும், அதிகாரிகளை மீறி இந்த வழக்கு சென்று விட்டால் நீதி மன்றங்களில் வள வள என இழுத்தடித்த பின்னர் (அ)நீதி அரசர்கள் கேட்ட பணம் கொடுக்க பட்ட பின் "சீல்" உடைத்தெறியப்படும் .இதுதான் சரித்திரம்....
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
24-டிச-201208:24:41 IST Report Abuse
Chenduraan "சட்டப்படி, கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் கட்டடங்கள் கட்டக் கூடாது. அப்படியே கட்ட வேண்டும் என்றால், மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்று வழங்க வேண்டும்"...... கல்லா கட்டுவதற்கு எப்படியெல்லாம் சட்டம் போட்டு வைத்துள்ளார்கள் பாருங்கள். 300 மீட்டருக்குள் கட்ட கூடாது என்றால் கட்டக் கூடாது என்று தானே இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
k.sampath - Trichy,இந்தியா
24-டிச-201207:44:40 IST Report Abuse
k.sampath யாருக்கு உரியது என்ற விவரம் தெரியாமல் யாருக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
24-டிச-201206:28:36 IST Report Abuse
a natanasabapathy தாத்தா கோபித்துக்கொள்ளப்போகிறார். உடன்பிறப்புக்களே பொங்கி எழுந்து போராடுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்